கமல் 'பாவ்லா' காட்டக்கூடாது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் 'பாவ்லா' காட்டக்கூடாது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்

Added : ஜூலை 30, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''அரசியலுக்கு வருவேன் வருவேன் என, நடிகர் கமல், 'பாவ்லா' காட்டக்கூடாது; வந்தால் தான் அரசியல் முள் படுக்கை என, அவருக்கு தெரியும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

கமல் சிறந்த நடிகர்; அதில், எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அவர் அரசியலுக்கு வருவது சாதாரண விஷயமல்ல; அரசியல் என்பது முள் படுக்கை போன்றது. அரசியலுக்கு வந்தால் தான் அதன் கஷ்டம் தெரியும். 'அரசியலுக்கு வருவேன் வருவேன்' என, பாவ்லா காட்டக்கூடாது; வந்து பார்க்கட்டும். பின், அரசியல் பற்றி அவருக்கு புரியும்.

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்ற தலைவர்கள், திடீரென அரசியலுக்கு வரவில்லை. ஒடுக்கப்பட்டோர், நலிந்தோருக்காக குரல் கொடுத்து, மக்கள் அங்கீகாரம் கொடுத்த பின் கட்சி துவங்கி, அரசியலுக்கு வந்தனர். அதிக முறை ஆண்ட கட்சி என்ற பெருமை, அ.தி.மு.க.,வுக்கு உண்டு.
தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளான காவிரி, முல்லை பெரியாறு விஷயங்களில், கமல் வாய் திறக்கவில்லை.

சுனாமி, வெள்ளம் பாதித்த போது, சின்ன துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தி.மு.க., ஆட்சியில், தமிழக உரிமைகள் தாரை வார்க்கப்பட்ட போது, அவர், உரிமைக் குரல் கொடுக்கவில்லை.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X