தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் குஜராத் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கதறல் Dinamalar
பதிவு செய்த நாள் :
தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள்
குஜராத் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கதறல்

பெங்களூரு:பா.ஜ.,வுக்கு பயந்து, பெங்களூரு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள, குஜராத் மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி பிடி வாதம் பிடிப்பதால், காங்., மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, அடுத்த மாதம், 8ல், தேர்தல் நடக்கஉள்ளது.

பா.ஜ., சார்பில், அதன் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறிய, சங்கர்சிங் வகேலாவின் உறவினரான, பல்வந்த்

சிங் ராஜ்புத் போட்டியிடுகின்றனர்.காங்கிரசுக்கு, குறைவான, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், சோனியா வின் அரசியல் செயலர், அகமது படேல் மட்டும், போட்டியிடுகிறார். ஒரு உறுப்பின ரின் வெற்றிக்கு, 47 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு தேவை. இதன் மூலம், 116 உறுப்பினர்களை வைத்துள்ள, பா.ஜ.,வால், இரண்டு இடங்களிலும், 57 உறுப் பினரை வைத்துள்ள காங்கிரஸ்,ஒரு இடத்தி லும் எளிதாக வெற்றி பெற முடியும்.

அகமது படேல் வெற்றி பெற வேண்டுமானால், 47 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை; ஆனால்,
காங்கிரசின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். மூன்று பேர், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் பல, எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசிலிருந்து

Advertisement

தயவு செய்து, எங்களை,விட்டு விடுங்கள்,குஜராத்,காங்., - எம்.எல்.ஏ.,க்கள், கதறல்

விலகி, பா.ஜ.,வில் இணையக் கூடும் என்ற தகவல் வெளியானது.அகமது படேல் தோற்று விடகூடாது என்பதற்காக, தங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்கும் முயற்சி யில், காங்கிரஸ் களம் இறங்கியுள் ளது. 40க்கும் மேற்பட்ட, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், இரவோடு இரவாக, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டு, இங்கு உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கோவா ரவாரி, தர்ஷிபாய் கானாபூர், மகேஷ் படேல் உள்ளிட்ட, சில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அங்கு செல்ல அனுமதிக்கும் படி, காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

'எம்.எல்.ஏ.,க்கள், குஜராத்துக்கு சென்றால், பா.ஜ., வலையில் விழுந்துவிடுவர்' என, காங்., தலைவர்கள் கருதுகின்றனர். இதற்கிடை யில்,எம்.எல்.ஏ.,க்களை குடகு மாவட்டம் மடிகேரிக்கு அழைத்து செல்ல, கர்நாடக காங்., தலைவர்கள்திட்டமிட்டு உள்ளனர். இதற்கி டையே, காங்கிரசை சேர்ந்த, 42 எம்.எல். ஏ.,க் களையும்,காங்.,மேலிடம்,பத்திரிகையாளர்கள் முன், ஆஜர்படுத்தியது. அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, எம்.எல்.ஏ.,க் கள் பதில் அளித்தனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா
05-ஆக-201706:08:23 IST Report Abuse

Thiyagarajan Srimbhsஇந்திய வரலாற்றில் தமிழகம் முன்னணி. மாநிலங்கள் எல்லாம் தமிழகத்தை பின்பற்றுகின்றன. ஆள்கடத்தல் கமிஷன் வாங்குதல். மக்கள் பெருமிதம் கொள்கிறோம்

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
31-ஜூலை-201721:24:33 IST Report Abuse

muruguடிமானிடேசனுக்கு பிறகு கள்ளப்பணம் குறைந்துவிட்டதாக மோடி அவர்கள் சூளுரைத்தார் குஜராத் MLA கலை வாங்குவதற்கு பி ஜே பி காரர்களிடம் ஏது இந்த அளவுக்கு பணம் ?ஓஓஓஓ மக்களிடம் இருந்த கருப்பு பணம் யாவும் இப்போது பி ஜே பி இடம் மட்டும் தான் இருக்கிறது போல் இருக்கிறது

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
31-ஜூலை-201717:33:14 IST Report Abuse

Ramamoorthy Pஇது குஜராத் மாடல் கூவத்தூராக இருக்கிறதே. எம் எல் ஏ க்களை குஜராத் வெள்ளத்தில் தள்ளி விடாமல் இருந்தால் சரி.

Rate this:
bal - chennai,இந்தியா
31-ஜூலை-201716:40:11 IST Report Abuse

balஅவ்வளவு பயம். எங்கே கூண்டோடு பிஜேபிக்கு மாறிவிடுவார்களோ என்று. மனிதர்கள் என்ற மரியாதை இல்லாமல் கூண்டில் அடைக்கப்பட்டு காங்கிரஸ் தன் சுயரூபத்தை காட்டி உள்ளது.

Rate this:
L.Pannneerselvam - chennai,இந்தியா
31-ஜூலை-201715:30:33 IST Report Abuse

L.Pannneerselvamபிஜேபி காரன் கொள்ளைக்காரன் போல், ஆடுமாடுகளை வாங்குவதுபோல, காங்கிரஸ் எம்ஏல்ஏக்களை மேய்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறான். இந்த ஜனாநாயக படுகொலையை கேட்டால், காங்கிரஸ் செய்யவில்லையா என்கிறார்கள். இதென்ன பதில்? அவர்கள் செய்வதை எல்லாம் இவர்கள் செய்வதற்கு, இவர்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்.?

Rate this:
Ramesh - Kerala,இந்தியா
31-ஜூலை-201718:01:22 IST Report Abuse

Rameshதமிழ்நாட்டு mlaகளை சசிகலா ஹோட்டலில் தங்க வைத்த போது இதே வாய் என்ன கூறியது என்று கூறவும்.......

Rate this:
kalyan - CHENNAI,இந்தியா
31-ஜூலை-201718:26:25 IST Report Abuse

kalyanஅண்ணே பன்னீரு.. மேயறதுக்கு அவனுங்க என்ன புல்லுக்கட்டா? இன்னும் எவ்ளோ நாள் தான் சோனியாவையும் அமுல் பேபியையும் நம்புறது?...

Rate this:
murali - Chennai,இந்தியா
31-ஜூலை-201715:25:20 IST Report Abuse

muraliமானம் கெட்ட குஜராத் காங்கிரஸ் பி. ஜே பீ துட்டு கொடுத்தால் வாங்கீ கொண்டு காங்கிரெஸ்சுக்கு ஓட்டளிக்கவேண்டியது தானே. அதை விட்டு பெங்களூரில் கர்நாடக MLA களுடன் கூடி குத்தாட்டம் போடுவது எந்தவிதத்தில் நியாயம். .

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
31-ஜூலை-201712:46:25 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இங்கேயும் ஆறுக்குட்டிகள் இருக்கிறார்கள். 15 கோடி வா, வான்னு கூப்பிடுது.

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
31-ஜூலை-201712:41:18 IST Report Abuse

ஜெயந்தன்குஜராத்தில் பிஜேபி ஆட்டம் கண்டு போயிருக்கிறது ... Demonitisation க்கு பிறகும், Gst க்கு பிறகுக் மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்...இப்படி காங்கிரஸ் MLA க்களை வளைத்து போட்டால் மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு வளரும் என்று எண்ணுகிறார்கள்...சின்ன பசங்க....

Rate this:
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
31-ஜூலை-201713:39:23 IST Report Abuse

தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்பாவம் உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம்.. குஜராத்தில் பாஜ ஆட்டம் காண்பது இருக்கட்டும் காங்கிரஸ் என்ன லட்சணத்தில் உள்ளது சுவாமி? ஒரே ஒரு கேள்வி.. ஒருவன் கொள்கையினால் ஈர்க்க பட்டு ஒரு கட்சியில் சேர்ந்து பணியாற்றி உயர்ந்து எம் எல் ஏ என்ற அளவு உயர்ந்த பின்பு அவனை பணத்தை காட்டி விலைக்கு வாங்கி ஓட்டு பெற முடியுமா ? அதெப்படி? அதுவும் ரகசியமாக நடை பெரும் ஓட்டு முறையில்? பல கோடிகளை கொடுத்தாலும் ஒருவனை அவன் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட வைக்க முடியுமா? இல்லை மிரட்டி தான் பணிய வைக்க முடியுமா ? ரகசிய ஓட்டெடுப்பு முறையில் எப்படி ஒருவனை மிரட்டி எனக்கு வாக்களி என்று உறுதி பட சொல்ல முடியும் ? அப்படி என்றால் அவர்கள் அனைவருமே ஒரு கொள்கை பிடிப்பு இல்லாமல் இந்த அல்லது அந்த கட்சியில் இருப்பவர்கள் ஆதாயத்திற்காக .. இப்படி பட்டவர்களை வைத்து ஒரு கட்சி எதனை நாட்கள் வலுவாக இருக்க முடியும் ? நூறு ஆண்டுகளை கடந்து விட்டோம் என்று மார் தட்டும் கட்சியில் இப்படி பட்டவர்கள் எம் எல் ஏ க்களாக இருப்பது அந்த கட்சியின் உறுதி தன்மையில் ஏற்பட்டுள்ள ஆட்டத்தையே காட்டுகிறது பாஜக வில் அல்ல .....

Rate this:
selvaraasu - Cuddalore,இந்தியா
31-ஜூலை-201714:28:44 IST Report Abuse

selvaraasuநீங்க ரொம்ப அப்பாவி சார்....

Rate this:
ganashankari - chennai,இந்தியா
31-ஜூலை-201712:13:12 IST Report Abuse

ganashankariகூவத்தூரில் நடந்தபோது வாய் கிழிய பேசிய இ வி கே ஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், சிதம்பரம், ஸ்டாலின், திருமாவளவன், முத்தரசன் இப்போது மௌனம் காப்பது ஏன் ?

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
31-ஜூலை-201715:30:34 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு Ganashankari - Chennai,இந்தியா அவர்களே.......இவர்கள் முழு சுதந்திரம் கொண்டவர்கள். சுத்தமான ஜனநாயக வாதிகள். வாயை திறப்பதற்கு....... இளவரசன் இத்தாலியில் இருந்து வந்து சிக்னல் கொண்டு வந்து தர வேண்டாமா........அதற்குள் இவர்களாக என்னத்தை பேசுவது மன்னிக்கவும் பேத்துவது........

Rate this:
rajan - kerala,இந்தியா
31-ஜூலை-201711:42:54 IST Report Abuse

rajanஇந்த ராகுல் ராகுல் என ஒரு காங்கிரஸ் பையன் இருந்தானே அவனை எங்கே காணவில்லையே? யாராச்சும் எங்கேயாச்சும் பார்த்தீங்கன்னா லாலி பாப்பை காட்டி கூட்டியாந்துருங்க. கூட்டத்தில எங்கயாச்சும் தொலைஞ்சு போய்ட போறாம்பா

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
31-ஜூலை-201715:28:37 IST Report Abuse

Sitaramen Varadarajanமுடி வெட்டிக்கொள்ள இத்தாலி போய் இருக்கலாம். ராஜா வீட்டு கன்னுகுட்டி. லாலி பாப்பை கேவலம் செய்யாதீர்கள்....

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement