'வெளியே போ...' கேரள முதல்வர் கோபம்| Dinamalar

'வெளியே போ...' கேரள முதல்வர் கோபம்

Updated : ஜூலை 31, 2017 | Added : ஜூலை 31, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கேரளா, Kerala,முதல்வர், Chief Minister, பினாரயி விஜயன்,  Pinarayi Vijayan,கோபம், anger, பா.ஜ.,BJP,  ஆர்.எஸ்.எஸ்., RSS, கொலை,murder,  திருவனந்தபுரம், Trivandrum, அமைதி பேச்சு வார்த்தை, peace talks, சர்ச்சை, controversy, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  Union Home Minister Rajnath Singh,

திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களுடனான அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்க வந்த கேரள முதல்வர் பினாரயி விஜயன், அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களை, 'வெளியே போ...' என, கோபத்துடன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


கவர்னர் விசாரணைபத்திரிக்கையாளர்களை வெளியே துரத்திய பினராயி விஜயன்

திருவனந்தபுரம் அருகே சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து பா.ஜ., சார்பில் நடந்த பந்த்தில் வன்முறை வெடித்தது.

இது குறித்து முதல்வர் பினாரயி விஜயனை நேரில் அழைத்து கவர்னர் சதாசிவம் விசாரணை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விசாரணை நடத்தினார். இந்த சூழ்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களுடனான அமைதி பேச்சு வார்த்தை திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஓட்டலில் இன்று(ஜூலை, 31) நடந்தது.

இதில் பங்கேற்க மாநில பா.ஜ., தலைவர் குமணம் ராஜசேகரன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோபாலன் குட்டி ஆகியோர் வந்து இருந்தனர். கூட்டம் நடக்க இருந்த அறையில் பத்திரிகையாளர்களும் இருந்தனர். சிறிது நேரம் கழித்து மாநில மா.கம்யூ., செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனுடன் வந்த முதல்வர் பினாரயி விஜயன், ' பத்திரிகையாளர்களை யார் உள்ளே விட்டது' என, ஓட்டல் மேலாளரிடம் கோபத்துடன் கூறினார். மேலும், பத்திரிகையாளர்களிடம், ' வெளியே போ...' என்றும் காட்டமாக கூறினார்.

பத்திரிகையாளர்கள் அங்கிருந்து வெளியேறும் வரை அந்த அறைக்குள் முதல்வர் நுழையவில்லை. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இன்று நடந்த கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் வந்தது முதல்வருக்கு ஏன் கோபத்தை ஏற்படுத்தியது என்பது தெரியவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
31-ஜூலை-201722:02:56 IST Report Abuse
srisubram ஐயா திரு , விஜய் ராஜ் , அவர்களே , அமைச்சரை பாலகிருஷ்ணன் என்று பெயர் வைத்துக்கொள்ள சொல்லுங்கள் , அவரே சாதி பெயருடன் வலம் வருகிறார் , அதுவும் பகுத்தறிவு திராவிட பாசறையில் வந்தவர்கள் .
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
31-ஜூலை-201720:48:01 IST Report Abuse
rajan இன்னு சேட்டன் குறைச்சு திரகிலாக்கியல்லோ. அது கொண்டானு இத்தறை சாட்டம் ஆயது.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
31-ஜூலை-201719:59:53 IST Report Abuse
sundaram இங்கு கருத்து கூறிய பலரும் முதல்வரை பற்றியும் அவர் சார்ந்த கம்யூனிஸ்ட் பற்றியும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் பற்றியுமே எழுதி இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201719:30:34 IST Report Abuse
Sundar Indecent parliamentarian.
Rate this:
Share this comment
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
31-ஜூலை-201718:20:22 IST Report Abuse
N S Sankaran கேரளத்தில் பி ஜெ பி, ஆர் எஸ் எஸ் ஆகியவற்றின் வளச்சியைப் பொறுக்க முடியாத மார்க்சிஸ்டுகள், திட்டமிட்டு ஆர் எஸ் எஸ் முக்கியஸ்தர்களை கொன்று வருகின்றனர். கடந்த 10 வருடங்களில் மார்க்சிஸ்ட்களின் கொலை வெறிக்குப் பலியான ஆர் எஸ் எஸ் அங்கத்தினர் எண்ணிக்கை 100 க்கும் மேல்.
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
31-ஜூலை-201717:40:52 IST Report Abuse
anand கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருந்தால் இப்படி தான் நடப்பார்கள்.. இது புதுசு இல்லை... ஆட்சியில் இல்லை என்றால் எங்களை போல் யோக்கியர் இல்லை என்பார்கள்.. இவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சீனா போல் கொடுங்கோல் ஆட்சி தான்..யாரும் எதிர்த்து பேச முடியாது..
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201717:39:48 IST Report Abuse
Ramesh Rayen RSS தொண்டர் கொலை செய்யப்பட்டால் உள்துறை அமைச்சர் கோபப்பட்டு கேள்வி கேட்கிறார் நம் கடலில் எத்தனை முறை இலங்கை துப்பாக்கி சூடு நடத்தியது, அப்போது எங்கே போனார் நம் ராஜ் நாத் சிங்க்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
31-ஜூலை-201721:18:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வெங்காயம் உரிக்க.....
Rate this:
Share this comment
ganapati sb - coimbatore,இந்தியா
01-ஆக-201713:02:11 IST Report Abuse
ganapati sbராஜ்நாத் உள்துறை அமைச்சர். கேரளா நிலவரம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளதால் அவர் களத்தில் வந்துள்ளார்....
Rate this:
Share this comment
Cancel
31-ஜூலை-201717:22:12 IST Report Abuse
ARUN.POINT.BLANK idhu maadhiri pesaravar ellaam mudhalvaraa? enna karumam da idhu
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
31-ஜூலை-201717:11:05 IST Report Abuse
ganapati sb அரசியல் தொடர் கொலைகளை நிகழ்த்தும் கேரளா கம்ம்யூனிஸ்டுகளை ஆட்சியை விட்டு வெளியே போ என சொல்லி கவர்னர் ஆட்சியை கொண்டு வர வேண்டும்
Rate this:
Share this comment
Veeran - Kanyakumari,இந்தியா
31-ஜூலை-201719:20:24 IST Report Abuse
Veeranகொஞ்சம் UP கணக்கு சொல்லு...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஜூலை-201716:46:18 IST Report Abuse
Endrum Indian "கேரள முதல்வர் பினாரயி விஜயன், அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களை, 'வெளியே போ...' என, கோபத்துடன் கூறியது". இது இவரின் சுபாவம் இவரின் இந்த வருட கத்தல்கள் பெப்ருவரி-28 ,2017 . 1 ) Chief Minister of Kerala, Pinarayi Vijayan scolds minister A K Balan in legislative assembly. 30 -07 -2017 2 ) இப்போதைய கத்தல். அவருக்கு கொஞ்சம் பி.பி அதிகம். எதுக்கெடுத்தாலும் ஒரே காட்டு கத்தல் வீட்டிலே கூட பொண்டாட்டி கூட இப்படி தான் காட்டுக்கத்தல். எல்லாம் வயசான என்னை யாரும் மதிக்க மாட்டேன் என்கின்றார்களே என்ற ஆதங்கம் தான்??? பாவம்?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை