கேரளாவில் பதற்றம்: பா.ஜ., தலைவர்களுடன் முதல்வர் பேச்சு| Dinamalar

கேரளாவில் பதற்றம்: பா.ஜ., தலைவர்களுடன் முதல்வர் பேச்சு

Added : ஜூலை 31, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொல்லப்பட்டதால், வன்
முறைகள் நிகழ்ந்து வரும் நிலையில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர், திருவனந்த புரத்தில், சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.இந்த சம்பவத்தின் பின்னணியில், மார்க்.கம்யூ., இருப்பதாக, பா.ஜ., மாநில தலைவர், கும்மனம் ராஜசேகரன் குற்றஞ்சாட்டி வருகிறார்; அதை, மார்க்சிஸ்ட் மேலிடம் மறுத்து வருகிறது.இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தலைவர்களை, முதல்வர் பினராயி விஜயன், நேற்று சந்தித்து பேசினார். பா.ஜ., மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர், ஓ.ராஜகோபால், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோபாலன் குட்டி ஆகியோர், முதல்வரை சந்தித்தனர்; மார்க்சிஸ்ட் மாநில செயலர், கொடியேறி பாலகிருஷ்ணனும் உடன்
இருந்தார்.ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலை விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம், முதல்வர் பினராயி விஜயன், டி.ஜி.பி., லோக்நாத் பெஹரா ஆகியோரை, மாநில கவர்னர் சதாசிவம் அழைத்து பேசினார். அப்போது, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை அழைத்து
பேசுவதாக, முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் குண்டு வீச்சு : ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலையால், கேரளாவில், பதற்றம் நிலவி வரும் நிலையில், கோட்டயத்தில், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட அலுவலகத்தில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின், சி.ஐ.டி.யு., அலுவலகம் மீது, சிலர், கற்களை வீசிவிட்டு ஓடியதால், அங்கு பதற்றம் நீடிக்கிறது.

அனைத்து கட்சி கூட்டம் : கேரளாவில், வன்முறைகள் நிகழ்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, ஆக., 6ல், அனைத்து கட்சி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொல்லப்பட்டதை அடுத்து, வன்முறை பரவி வருவதால், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தலைவர்களை, முதல்வர் பினராயி விஜயன், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வன்முறைகளை ஒடுக்கவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு, அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இது தொடர்பாக, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, திருவனந்த புரத்தில், ஆக., 6ல், அனைத்து கட்சி கூட்டம் நடத்தவும், முடிவு செய்யப்பட்டது.
நிருபர்களை சந்தித்த, பினராயி விஜயன் கூறுகையில், ''திருவனந்தபுரத்தில், அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். அதே போல், கண்ணுார், கோட்டயம் மாவட்டங்களிலும், தலைவர்கள் கலந்து பேசுவர். வன்முறை ஏற்படாத வகையில், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு, தலைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
01-ஆக-201713:00:33 IST Report Abuse
kc.ravindran கோவிலுக்குள்ளே ரொம்ப பயபக்தி. வெளியே வந்தால் கையில் வெட்டுக்கத்தி. எவன் எவனை வெட்டுவான் என்றே சொல்லமுடியாது. ஸ்ரீ விவேகானந்த சொன்னதுபோலவேதான். ஒரு மாற்றமும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
01-ஆக-201712:30:10 IST Report Abuse
Pasupathi Subbian மார்க்சிஸ்ட்டுகள் ரத்த சுவையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டனர். இனி அவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்காக இருக்கும்.
Rate this:
Share this comment
nesan - Madurai,இந்தியா
01-ஆக-201714:53:25 IST Report Abuse
nesanஇங்காவது ஆளுநர் முதல்வரையும் தலைமை காவல் அதிகாரியையும் சம்பவத்துக்கு பிறகு அழைத்து பேசியுள்ளார்....
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-ஆக-201711:05:24 IST Report Abuse
Cheran Perumal கொலையாளிகளை பிடிச்சாச்சு என்று ஒரு வதந்தியை பரப்பிவிட்டார்களே, என்ன ஆயிற்று?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X