பீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்| Dinamalar

பீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்

Added : ஜூலை 31, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: ''பீஹாரில் அமைத்திருந்த மெகா கூட்டணி உடைந்தது, துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணி அரசு இருந்தது.
லாலுவின் மகனும், துணை முதல்வருமான, தேஜஸ்வி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கைத் தொடர்ந்தது. அதையடுத்து, துணை முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி, தேஜஸ்விக்கு, முதல்வர் நிதிஷ் குமார் நெருக்கடி கொடுத்தார். ஆனால், அதை தேஜஸ்வி, லாலு ஏற்கவில்லை. அதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் சமீபத்தில் விலகினார். பின், பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.

நிதிஷ் குமாரின் இந்த முடிவுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த, எம்.பி.,யுமான சரத் யாதவ், இதுவரை எந்த கருத்தையும் கூறாமல் இருந்தார். அதே நேரத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக, 'டுவிட்டர்' சமூகதளங்களில் கருத்து வெளியிட்டார். சரத் யாதவ் கடும் அதிருப்தியில் உள்ளதால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடையும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில், நிருபர்களிடம் நேற்று பேசுகையில், ''பீஹாரில் நடந்த சம்பவங்கள், மிகவும் வருத்தம் அளிக்கின்றன. மெகா கூட்டணி உடைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது,'' என, சரத் யாதவ் கூறினார்.இது, பீஹாரில் ஆளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில் முன்னர் இருந்த மெகா கூட்டணி அரசின்போது, அனுமதியில்லாமல் ஆறுகளில் மணல் திருடுவது மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. இந்த மோசடியில், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரே அதிகளவில் ஈடுபட்டுஇருந்தனர்.தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மணல் கொள்ளை குறித்த வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தும்படி, போலீசாருக்கு, முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X