அமைச்சரவை விரிவாக்கம் கேள்விக்குறி : மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம்| Dinamalar

அமைச்சரவை விரிவாக்கம் கேள்விக்குறி : மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம்

Added : ஜூலை 31, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தற்போதைக்கு அமைச்சரவை விரிவுபடுத்தப்படுமா என்ற சந்தேகம், காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் அமைச்சர் எச்.எஸ்.மகாதேவபிரசாத் மறைவு, எச்.ஒய்.மேட்டி, ஜி.பரமேஸ்வர் ராஜினாமாவால், காலியான மூன்று இடங்களை நிரப்ப, சித்தராமையா முடிவு செய்திருந்தார்.
ஜாதி வாரியாக முக்கியத்துவம் கொடுத்து, அமைச்சரவையை நிரப்ப, அவர் திட்டமிட்டிருந்தார்.
அமைச்சர் பதவியை எதிர்பார்த்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. மேலிட அளவில், 'லாபி' நடத்தினர். அவர்களின் நெருக்கடிக்கு பணிந்து, ஜூன் இறுதிக்குள், அமைச்சரவையை விரிவுபடுத்துவதாக, முதல்வர் கூறியிருந்தார்.
ஆனால், அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் அறிகுறிகளே தென்படவில்லை. ஜி.பரமேஸ்வர் ராஜினாமாவினால், காலியான உள்துறையை, யாரிடம் ஒப்படைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சில மூத்த அமைச்சர்கள், இத்துறையை ஏற்க தயக்கம் காட்டுகின்றனர். வனத்துறை அமைச்சர் ரமாநாத்ராய், பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளார் என்றாலும், அவரிடம் துறையை ஒப்படைப்பதில், முதல்வருக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆட்சி காலத்தின் இறுதி நாட்களில், இம்மூன்று இடங்களுக்கு யாரை நியமிப்பது, யாரை விடுவது என்ற குழப்பம், முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, அமைச்சரவையை விரிவுபடுத்தி, தேவையின்றி பிரச்னையை உருவாக்குவதை விட, இப்போதைக்கு அமைச்சரவையை மாற்றாமல் இருப்பதே நல்லது என்ற தீர்மானத்துக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை, மேலிட தலைவர்கள் ஓய்வின்றி இருப்பர். ராஜ்யசபா தேர்தலால், குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு அருகே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசம், பீகார், குஜராத்தில், 'ஆப்பரேஷன் தாமரை' ஜோராக நடந்து வருகிறது. பா.ஜ., தந்திரத்தால், காங்கிரஸ் மேலிடம் தத்தளிக்கிறது.
தற்போது, கர்நாடகா அமைச்சரவையை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிக்க, அவர்களுக்கு நேரமில்லை. இதுமட்டுமின்றி, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் தயாராகி வருகின்றனர்.
அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு, கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். அவரவர் தொகுதி பணிகளில் கவனம் செலுத்துவதால், அமைச்சரவையில் சேர வேண்டும் என்பது பற்றி, ஆர்வம் காட்டவில்லை.
இதனால், தற்போதைக்கு அமைச்சரவை விரிவுபடுத்துவது சந்தேகம் தான் என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X