காங்கிரசில் கமல்?: காத்திருக்கிறது தலைவர், எம்.பி., பதவி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காங்கிரசில் கமல்?: காத்திருக்கிறது தலைவர், எம்.பி., பதவி

நடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், அவருக்கு, தமிழக காங்., தலைவர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க, அகில இந்திய காங்., துணைத் தலைவர் ராகுல், பச்சைக் கொடி காட்டியுள்ளார். அரசியலில் குதிக்க ஆலோசித்து வரும் ரஜினியை வீழ்த்த, காங்., இந்த முடிவை எடுத்துள்ளது.

 காங்கிரஸ், கமல்,காத்திருக்கிறது,தலைவர், எம்.பி., பதவி


லோக்சபா தேர்தல், 2019ல், நடக்க உள்ளது. இதில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, காங்., விரும்புகிறது. இதற்காக, மாநில வாரியாக, கட்சியை பலப்படுத்தும் வியூகங்களை, ராகுலின் அரசியல் ஆலோசனை குழு வகுத்து வருகிறது.

காங்கிரசில் சேர்க்கலாம்மேலும், செப்டம்பரில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலில், அகில இந்திய காங்., தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட உள்ளார்.அவர் தலைமையேற்ற பின், அனைத்து மாநில

தலைவர்களையும் அதிரடியாக மாற்றி விட்டு, தன் ஆதரவாளர்கள் மற்றும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற புதுமுகங்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தங்களுக்கு சாதகமாக்கி, லோக்சபா தேர்தலில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றவேண்டும் என, ராகுல் விரும்புகிறார். அதற்கேற்ப, கட்சியை வலுப்படுத்தும் வகையில், மாநிலத்திற்கு புதிய தலைவர் உட்பட, மாநில நிர்வாகத்தையும் மாற்ற, ராகுலுக்கு, அவர் அமைத்துள்ள அரசியல் ஆலோசனைக்குழு யோசனை தெரிவித்துள்ளது.
தமிழக அரசை, நடிகர் கமல் கடுமையாக எதிர்த்து வருவதால், அவரை காங்கிரசில் சேர்க்கலாம் என்ற, யோசனையும், ராகுலிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. கமல் கட்சியில் சேர்ந்தால், தமிழக தலைவர் பதவியையும், வேறு மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவியையும் வழங்க, ராகுல் பச்சைக்கொடி காட்டி உள்ளார்.

ரஜினியை வீழ்த்த


இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் கமல், காங்கிரசில் இணைந்தால், அவருக்கு உரிய முக்கியத்துவம் தர, ராகுல் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக, துாதர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், டில்லியில் இருந்து சென்னை வந்து, கமலை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இதற்கு நேரம் ஒதுக்கி தரும்படி, கமலிடம் கோரப்பட்டுள்ளது. விரைவில், இந்த சந்திப்பு நடக்கும்.

Advertisement

நடிகர் ரஜினி, அரசியல் பிரவேசம் குறித்து, தன் ரசிகர்களை சந்தித்து ஆலோசித்தார். முக்கிய பிரமுகர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர், பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்பதால், அவரை வீழ்த்தும் வகையில், ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார். இவ்வாறு காங்., வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையில், 'கமலின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்; அவருக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு' என, தன் முகநுால் பக்கத்தில், அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர், குஷ்பு பதிவு செய்து, கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார். ராகுலின் திட்டத்தை அறிந்தே, குஷ்பு இவ்வாறு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (132)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-201701:17:23 IST Report Abuse

அப்பாவிவெத்து வேட்டுக்களை நம்பி களம் இறங்குவதில் ராகுலுக்கு நிகர் ராகுலே...

Rate this:
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
01-ஆக-201719:15:17 IST Report Abuse

Srikanth Tamizanda..ராவுள் காமெடிக்கு அளவே இல்லை.காங்கிரஸ் மறந்து போய் கூட வளரக்கூடாதுனு அவரே முடிவு பண்ணிட்டாரு போல இருக்கு.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
01-ஆக-201718:19:40 IST Report Abuse

Karuthukirukkanநல்ல கதை .. எப்பிடி இப்பிடி எல்லாம் கெளப்புறீங்க

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
01-ஆக-201718:10:56 IST Report Abuse

தமிழர்நீதி ரஜினி அண்ட் கமல் என்றால் ,கமல் அறிவாளி , தமிழ் மகன் , திறந்த மனதுடன் யோசிப்பவர் , மத வெறியர் அல்ல .

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
01-ஆக-201717:29:16 IST Report Abuse

Ramamoorthy Pஊழலை ஒழிக்க பாடுபடும் மோடியின் கரத்தை வலுப்படுத்துங்கள். அதை விடுத்து ஊழலை தொழில் ரீதியாக ஏற்றுக்கொண்டு அதை வளர்ப்பவர்களை புறந்தள்ளுங்கள்.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
01-ஆக-201718:17:14 IST Report Abuse

Karuthukirukkanஅளவா பாடுபட சொல்லுப்பா பாவம் .....

Rate this:

செந்தில்குமார்கார்பரேட் நிறுவனங்களுக்கு, கைப்பாவையாக மாறும் மத்திய அரசை, ஏழைகளுக்கு எதிரான விலை ஏற்ற த்திற்கு யேன் ஒத்து ஊத வேண்டும்....

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
02-ஆக-201716:23:46 IST Report Abuse

Ramamoorthy Pஎல்லோருக்கும் அரசு பதவி கிடைக்காத காலத்தில் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இன்றைக்கு காப்போரேட் கம்பெனிகள் தான் வேலை வாய்ப்பை அளிக்கின்றன. அந்த காலததில் பண்ணையார் ஒருவரை நம்பி கிராமத்த்தில் பல நூற்றக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்தன இன்றைக்கு பல லட்சம் வேலை இல்லாதவரக்ளின் குடும்பங்கள் கார்பொரேட் கம்பெனிகளை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்றன எனும் யதார்த்த உண்மையை மறந்துவிட வேண்டாம் அன்பர்களே. எதற்கெடுத்தாலும் கார்பொரேட் பூச்சாண்டி காட்டும் கம்யூனிஸ்ட் தோழர்கள் யதார்த்தத்திலிருந்து எப்போதும் விலகியே இருப்பவர்கள்....

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
01-ஆக-201717:21:22 IST Report Abuse

Nakkal Nadhamuniயாருக்கு வேண்டும் ராஜ்ய சபா பதவி... அங்க வெறும் சத்தம்தான் வரும்... ஆனா கமல் காங்கிரெஸ்ல போய் சேருவது சந்தேகம்தான்... அவர் தமிழ், திராவிடம்னு வர மாதிரி ஏதாவது ஒரு தனிக்கட்சி தொடங்க பார்ப்பார்... டெபாசிட் கூட வராது... பம்பாய் பக்கம் ஓடவேண்டியதுதான்...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
01-ஆக-201718:18:41 IST Report Abuse

Karuthukirukkanஸார்வாள் நம்ம கட்சி எப்போ டெபாசிட் வாங்கும் ?? இன்னும் ஆரம்பிக்காத கட்சிக்கு இவளவு பயமா??...

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-201716:38:48 IST Report Abuse

Venkiஇந்தியாவில் அரசியலில் சிறு வயதிலிருந்து தன் வாழ்க்கையில் இளமை மற்றும் எத்தனையோ விஷயங்களை தியாகம் செய்து உயிர் துறந்த தலைவர்களை கண்ட நாடு ரஜினி கமல் இருவரும் திரை துறையில் புகழ் பணம் எல்லாவற்றையும் சம்பாதித்து விட்டு உலகில் உள்ள அத்தனை போதை வஸ்த்துக்களையும் அனுபவித்து விட்டு உடலில் நோய் ஏற்பட்டு எல்லா பழக்கங்களையும் கைவிட வேண்டும் ஓய்வு எடுக்க வேண்டும் அடிக்கடி உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் அரசியலில் குதிக்க .......... ஆசை இந்த பதவி சுகத்தையும் அனுபவிக்க துடிக்கும் ஆசை

Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
01-ஆக-201716:25:19 IST Report Abuse

Vasanth Saminathanஆஹா புதிதாக கமல் கோஷ்டி. சத்தியமூர்த்தி பவன் களைகட்டும். கவுதமிக்கு பதில் குஷ்பூ.

Rate this:
Arasan - Thamizhnadu,இந்தியா
01-ஆக-201715:00:25 IST Report Abuse

Arasanஒரு நோக்கமும் கிடையாது யார் வருவானு காத்துகிட்டு இருக்கானுங்க. கடைல ஈ ஆடுது. போனி ஆகல அதனால யார் வந்தாலும் வாங்க வாங்க னு கூவுறதுக்கு மட்டும் ஆள் தயார்.. காங்கிரஸில். நக்மா குஷ்பூ ஈவிகேஎஸ் திருநாவுக்கரசர் தங்கபாலு சிதம்பரம் இவர்களால முடியல யார் வந்தாலும் காங்கிரஸ் மேம்பட்டது இவர்கள் இருக்கும் வரை. கமல் வெளியில் இருக்க வேண்டும் ஊழலுக்கு எதிராக ஆம்,, போபர்ஸ், அகஸ்டா, காமமென்வெல்த், நிலக்கரி, 2G, சொத்துகுவிப்பு, தாதுமணல், கிரானைட், என ஒருவர் விடக்கூடாது. அப்போது தான் கமல் செய்யும் செயல்கள் மீது நம்பிக்கை கொள்வார்கள் மக்கள். யாரையும் தூற்றாமல், பிறர் நம்பிக்கையை கேலிபண்ணாமல் மக்கள் நலன் சார்ந்து தெரிவிக்கும் கருத்துக்கள் நல்லது.

Rate this:
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
01-ஆக-201714:29:19 IST Report Abuse

Rajkumarரசிகாஸ் : குருநாதா கேஸ் மானியம் கட்டாகுமாம்.. சூப்பர் ஸ்டார் : கண்ணா எல்லாம் போர் வரும்போது பாத்துக்கலாம் ரசிகாஸ் : தலைவா ரேஷன் பொருளும் கட்டாகுமாம்.. சூப்பர் ஸ்டார் : கண்ணா இதெல்லாம் ஒரு பிரச்சினையா எல்லாம் போர் வரும்போது பாத்துக்கலாம் ரசிகாஸ் : குருநாதா நீட் தேர்வு இடஒதுக்கீடு செல்லாதாம் சூப்பர் ஸ்டார் : கண்ணா எல்லாம் போர் வரும்போது பாத்துக்கலாம் ரசிகாஸ் : தலைவா விவசாயிகள் இன்னமும் டெல்லியில போராடுரான்களாம் சூப்பர் ஸ்டார் : கண்ணா இதுகெல்லாம் மேல ஒருத்தன் இருக்கானே எல்லாம் போர் வரும்போது பாத்துக்கலாம் ரசிகாஸ் : தலைவா ஹைட்ரோகார்பன் போராட்டம் சீக்கிரமே நூறு நாளை தொடுமாம்.. சூப்பர் ஸ்டார் : கண்ணா எல்லாம் போர் வரும்போது பாத்துக்கலாம் பொது சனம் : இதுக்கு நீ காலா படம் ரிலீஸ் ஆகுரவரைக்கும்ன்னு சொல்லியிருக்காலம்.

Rate this:
மேலும் 118 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement