'கையாலாகாத அமைச்சர்' : ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கையாலாகாத அமைச்சர்' : ஸ்டாலின்

Added : ஜூலை 31, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'கையாலாகாத அமைச்சர்' : ஸ்டாலின்

சென்னை: 'ஜி.எஸ்.டி., விதிப்பில் இருந்து, வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு எதையும் பெற்றுத்தர முடியாத, கையாலாகாத நிதியமைச்சராக, ஜெயகுமார் உள்ளார்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: 'நேர்மையாக தொழில் புரிவோர் கவலைப்பட தேவையில்லை' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சென்னையில் நடந்த, ஜி.எஸ்.டி., கருத்தரங்கில் பேசியுள்ளார். உச்ச நீதிமன்றத்தால், ஊழல் குற்றவாளி என, தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின், ஜி.எஸ்.டி., கருத்தரங்கில் இப்படி பேசியிருப்பது, வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் உள்ளது.
அமைச்சர் ஜெயகுமாரும், அந்த கருத்தரங்கில் பங்கேற்று, தனக்கும் ஏதோ அதிகாரம் இருப்பது போல, 'பாவ்லா' காட்டியிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை, ஜி.எஸ்.டி., விதிப்பிலிருந்து, எந்த வரி விலக்கையும், வரி குறைப்பையும் பெற்றுத்தர முடியாத, கையாலாகாத நிதியமைச்சராக அவர் இருந்து வருகிறார்.
மாநிலத்தின் உரிமைகள், மாநிலத்தின் அதிகாரம் உள்ளிட்ட எந்த கோரிக்கையிலும், நிதியமைச்சருக்கும் சரி, முதல்வர் பழனிசாமிக்கும் சரி, நிமிர்ந்து நின்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் தைரியம், துளியும் இல்லை.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறி, கைத்தறி, ஜவுளி தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் விதத்தில், உடனடியாக, ஜி.எஸ்.டி., கவுன்சிலை கூட்ட வேண்டும். அதில், வரியை குறைத்து, சிறு மற்றும் குறு தொழில்களை காக்க, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
01-ஆக-201717:17:50 IST Report Abuse
CHANDRA GUPTHAN இவனும் இவன் அப்பனும் தமிழகத்துக்கு செய்த துரோகம் போதும் . எதோ பேசணும் அவ்வளவுதான் . போகிற போக்கில் வால்மார்ட்டுக்கு பாய்விரிச்சுட்டு வந்தீங்களே அதே போதும் செயல்படா தலீவர் .
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
01-ஆக-201714:54:16 IST Report Abuse
Baskar அவர்கள் கையாலாகாதவர்கள் என்று பல விஷயங்களில் பார்த்து கொண்டு வருகிறோம். நீயும் உன் அப்பனும் ஆளும்போது உங்களின் குடும்ப விஷயத்தை தான் பார்த்து கொண்டு இருந்தீர்கள்.. எல்லாத் தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகளை காங்கிரஸ் கூட கூட்டணி வைத்து எல்லோரையும் ஏமாற்றினார்கள். இப்போது ஐயோ குத்துதே குடையுதே என்றால் அப்படி.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
01-ஆக-201712:14:25 IST Report Abuse
bal கையாலாகாத இவர் அப்பா இன்னும் ஏன் MLA பதவியில் இருக்கிறார். நம்முடைய வரி பணம் இப்படி வேலை செய்யாதவர்களுக்கு போய் சேருகிறது.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
01-ஆக-201711:24:46 IST Report Abuse
நக்கீரன் சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மத்திய அமைச்சர், உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என, தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி எப்படி சரியானதாகும்? ஊழல் கறையில்லாமல் ஆட்சி நடத்துகிறேன் என்று கூறும் மோடியின் ஆசியோடுதான் இது நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மக்களால் ஒதுக்கப்பட்ட இந்த திருட்டு கழகங்களுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். ஒன்று பிஜேபி தனித்து நிற்க வேண்டும். அல்லது இந்த இரண்டு திருட்டு திராவிட கழகங்களை தவிர்த்து மற்றவர்களுடன் கூட்டணி அமைத்தால் வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
01-ஆக-201711:04:15 IST Report Abuse
SANKAR பட்டாசு ஆலைகளும், பனியன், கைத்தறி தொழிலும் ஏழை எளியவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது... அதை அழித்து விடாதீர்கள்... சீன பொருட்கள் உள்ள நுழையாமல் பார்த்து கொள்ள வேண்டும் ... செக் போஸ்ட்டுக்களை மூடிவிட்டதால் பங்களாதேஷில் இருந்து சீன பொருட்கள் திருட்டுத்தனமாக நுழைந்து வரி ஏய்ப்பும் இந்திய தொழில்கள் அழியவும் ஒரு ஆபத்து இருக்கிறது... மத்திய அரசு வரியை rationalise செய்யவும்... அந்நிய பொருட்கள் திருட்டுத்தனமாக நுழையா வண்ணம் இந்திய தொழில்களை பாதுகாக்கவும் "anti dumping duty ... அல்லது அமெரிக்கா மெக்ஸிகோ நாட்டின் பொருள்களுக்கு ஸ்பெஷல் டூட்டி போடுவது போல் சீனாப் பொருட்களுக்கு போட்டால் தான் நம் நாட்டு தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் பாதுகாக்க படும் ... கஜானாவும் நிரம்பும்...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
01-ஆக-201706:31:49 IST Report Abuse
Giridharan S அவர் என்ன பண்ணூவாரப்ப. நிதியே இல்லாம காலி பெட்டியை அவர்கிட்ட குடுத்துட்டு பத்திரமா செலவு பண்ணுங்கன்னு சொன்ன எப்படி. போட்டி நிறைய பணம் வேணும்னா இருக்கறவங்க கிட்ட ஜால்ராபோட்டுத்தான் வாங்க முடியும். இல்லேன்னா உங்களுக்கும், உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு லட்சம் மாசம் சம்பளம் குடுக்க முடியாம. கையாலாகாத மாதிரின்னு சும்மா சகட்டு மேனிக்கு திட்டாதீங்க சார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை