சமையல் 'காஸ்' விலை உயர்வுக்கு பார்லி.,யில் எதிர்ப்பு! Dinamalar
பதிவு செய்த நாள் :
எதிர்ப்பு!
சமையல் 'காஸ்' விலை உயர்வுக்கு பார்லி.,யில்
அமளியால் ராஜ்யசபா பல முறை ஒத்தி வைப்பு

புதுடில்லி:சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்யும் வகையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும் உயர்த்தும், மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, பார்லிமென்ட்டில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 'ஏழைகளை பாதிக்கும் இந்த விலை உயர்வைக் கைவிட வேண்டும்' என, எம்.பி.,க்கள் கடும் கோஷமிட்டனர்.

 சமையல்,'காஸ்' விலைஉயர்வுக்கு,பார்லி.,யில்,எதிர்ப்பு!

நான்கு ரூபாய்


'சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை, 2018, மார்ச்சில் நிறுத்தும் வகையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என, பெட்ரோலியத் துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான், லோக்சபாவில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று அலுவல் துவங்கியதும், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது குறித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க் கள் பேசத் துவங்கினர். அனுமதி அளிக்கப்படாததால், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் கட்சி
எம்.பி.,க்கள், சபையின் மையப்பகுதிக்கு சென்று, கோஷமிட்டனர். இந்த அமளியால், சபை, 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் சபை கூடியதும், காங்.,கை சேர்ந்த, ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர்,

குலாம் நபி ஆசாத் பேசியதாவது: சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனாலும், விலையை குறைக்க இந்த அரசு எந்த முயற்சி யையும் மேற் கொள்ளவில்லை. இந்நிலையில், சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்வதற்காக, ஒவ்வொரு மாதமும், சிலிண்டர் விலையை உயர்த் துவதை ஏற்க முடியாது.

இது மக்களை கடுமையாக பாதிக்கும். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மக்களுக்குஅளித்துள்ள சமூக உத்தரவாதத்தை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்; மானியத்தை ரத்து செய்யக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

வலியுறுத்தல்


பல்வேறு கட்சியைச் சேர்ந்த,எம்.பி.,க்கள், 'சிலிண் டர் விலை உயர்த்துவதை நிறுத்தவேண்டும்; மானி யத்தை ரத்து செய்யக் கூடாது' என்று வலியுறுத்தி பேசினர்.இதற்கு விளக்கமளித்து, பெட்ரோலியத் துறை அமைச்சர்,தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கான மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தை, 2010ல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது.

நடவடிக்கை


அதன்படி, சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்க திட்டமிட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு மாதமும், சொற்ப அளவில் விலையை உயர்த்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, காங்., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின், எம்.பி.,க்கள், சபையின்மையப்பகுதிக்கு சென்று தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால், மதியம் வரை, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

லோக்சபாவில் வெளிநடப்பு


லோக்சபாவிலும், சமையல் காஸ் பிரச்னை தொடர் பாக, எதிர்க்கட்சிகள் கடும் வாதத்தில் ஈடுபட்டன.

Advertisement

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள், சபையின் மையபகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனால், சபை அலுவல் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பிரச்னை குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்காததை கண்டித்து, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ராஜ்யசபாவுக்கு அவமதிப்பா?


பார்லிமென்ட் வளாகத்தில், புதிதாக கட்டப் பட்டுள்ள இணைப்பு கட்டடத் திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு, ராஜ்யசபா துணைத் தலைவர், ஹமீது அன்சாரி உள்ளிட் டோரை அழைக்காததைக் கண்டித்து, ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ராஜ்யசபா எதிர்க்கட்சிதலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கும் விழாக்களுக்கு, துணை ஜனாதிபதியாக உள்ள, ராஜ்யசபா தலைவருக்கும், சபையின் துணைத் தலைவர், எம்.பி.,க்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடி திறந்து வைத்த இணைப்பு கட்டடத் திறப்பு விழாவுக்கு, யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ராஜ்யசபாவை, மத்திய அரசு குறைத்து மதிப்பிடுகிறதா? அல்லது அவமதிக்கும் நோக்கத்தில் இது நடந்ததா?இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
06-ஆக-201720:28:59 IST Report Abuse

Poongavoor RaghupathyCooking gas price is increased and car prices are reduced. Is it that BJP is working to uplift poor as per BJP's statements often. People of India please think and act. bjp'S ACTIONS DO NOT SHOW THAT THEY ARE SERVING THE POOR.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஆக-201719:40:12 IST Report Abuse

Pugazh Vசமையல் வாயு விலையை ஏற்றுகிறார்கள். அதை எதிர்த்து பாமர மக்களுக்காக அமளி செய்து அந்த விலை ஏற்றத்தை வாபஸ் பெறச் செய்தார்கள். இதான் நடந்தது. அனால் இங்கே பிஜேபி வாசகர்கள் என்ன எழுதுகிறார்கள் என்றே புரியவில்லை. தேசவேசன் என்று ஒரு ஆள், வரிகளை எல்லாம் ஏத்தி எல்லாரும் பஸ்களிலும் மெட்ரோ ரயில்களிலும் அடைத்துக் கொண்டு நெரிசலில் போகணுமாம், அதுக்கு வரிகளை ஏத்தணுமாம். எவனும் கொஞ்சம் காசு சம்பாதித்து சேமித்து பைக் கார் வாங்கவே கூடாது. ஏழையகளாகவே கூட நெரிசலில் சாவணுமாம். நடுத்தர மக்கள் விரோதக் கட்சி தான் பிஜேபி அதன் ஆட்சி என்பதற்கு இதை விட வேற உதாரணம் வேணுமா? ரணகள ஆட்சி.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
02-ஆக-201717:02:45 IST Report Abuse

Balajiஅடுத்த முறை பாஜக வர முடியாது என்பதை தெரிந்துகொண்டார்களோ என்னவோ அதனால் தான் மக்கள் சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்று மக்கள் தலையில் அனைத்தையும் கட்ட முயற்சிக்கிறார்கள்...........

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
02-ஆக-201722:33:53 IST Report Abuse

தங்கை ராஜாயூ டூ பாலாஜி.........

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X