'பெரா' வழக்கில் தினகரன் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பெரா' வழக்கில் தினகரன் மீது
மீண்டும் குற்றச்சாட்டு பதிவு

சென்னை:அன்னிய செலாவாணி மோசடி வழக்கில், சசிகலா அக்கா மகன் தினகரன் மீது, மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 'பெரா' வழக்கில்,தினகரன்,மீது,மீண்டும்,குற்றச்சாட்டு,பதிவு

சசிகலாவின் அக்கா மகன் தினகரன். பிரிட்ட னில் உள்ள, 'பார்க்லேஸ்' வங்கியில், 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பிரிட்டன் பவுண்ட் களை, 'டிப்பர் இன்வெஸ்ட் மென்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில், சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளார் என, 1996ல், அன்னிய செலாவணி மோசடி வழக்கை, அமலாக்கத் துறை பதிவு செய்தது. அதே போல, ஐரோப்பிய நாடுகளில் ஓட்டல் துவங்க, மூன்று

நிறுவனங்கள் பெயரில், 'பார்க்லேஸ்' வங்கியில், சட்ட விரோதமாக, பல கோடி ரூபாயை தினகரன் முதலீடு செய்துள்ளார் எனவும், அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது.

இந்த இரு வழக்குகளும், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இவற்றில், 2017 ஏப்ரலில், தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குறுக்கு விசாரணை துவங்கியது.

இந்நிலையில், 'பிரிட்டனில் உள்ள, 'பார்க்லேஸ்' வங்கியில், 1.04 கோடி ரூபாய்க்கு, அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பான வழக்கில், குற்றச் சாட்டு பதிவில் குளறுபடி உள்ளது; அதற்கு தடை விதிக்க வேண்டும்' என, சில தினங்களுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், குற்றச்சாட்டு பதிவுக்கு தடை விதித்ததுடன்,தினகரன் மீது, ஜூலை, 31க்குள் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய் யவும் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்,

Advertisement

மலர்மதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் ஆஜரானார். அவர் மீது, மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டை அவர் மறுத்தார்; அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி கோரினார்.

இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட், 3க்கு தள்ளி வைத்த மாஜிஸ்திரேட், தினகரன் சார்பில் கோரப்படும் சில ஆவணங்களை, அமலாக்கத் துறை வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
02-ஆக-201712:07:10 IST Report Abuse

Harinathan Krishnanandamஇந்திய மக்கள் ஆட்சி செழித்து வளர வேண்டும் குற்றம் கண்டுபிடிப்பதற்கு 25 ஆண்டுகள் வழக்கு பதிய 20 ஆண்டுகள் வழக்கு விசாரணை 25 வருடங்கள் தண்டனை சீராய்வு 10 வருடங்கள் இறுதியில் மக்களே வெல்வார்கள் என்பது தெளிவு

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
02-ஆக-201709:00:13 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி கோரினார்... அடுத்த விசாரணைக்கு முன்பாக அந்த சாட்சிகளுக்கு ஐந்து தலைமுறை வாழ பணமா கொடுத்து விடுவார்... பிறகு நமது சாட்சி பிறர் சாட்சியாக மாறிவிடுவார்...

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
02-ஆக-201707:31:42 IST Report Abuse

Appanபக்கத்து பாகிஸ்தான் நாட்டை தீவிரவாதி நாடு, மதவாத நாடு...அப்படி இப்பின்னு இந்தியர்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அங்குதான் ஊழலுக்காக ஒரு பி.எம் மே பதவி விலகினார்.. இந்தியாவில் இப்படி ஊழலுக்காக யாராவது பதவி விலகி உள்ளார்களா..?. இந்த தினகரன் கேஸ் 20 வருடமா இழுத்து அடிக்கிறது.. தினகரன், ஜெயா பேர் லண்டனில் பிரபலம்..இப்படி இருந்தும் யாரும் ஒன்னும் செய்ய முடியவில்லை..இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க நைஜீரியாவிற்கும் என்ன வித்தியாசம்..>

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X