கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

Added : ஆக 03, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிச்சிப்பாளையம்: கோவிலில் ஆடிப் பண்டிகை நடத்துவதில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், கிச்சிப்பாளையத்தில், இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில், உள்ள கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும், ஆடிப் பெருக்கை முன்னிட்டு, விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று, ஒரு பிரிவை சேர்ந்த பெண்கள், கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில், விளக்கு பீடங்களுக்கு மஞ்சள் பூசி சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். விளக்கு ஏற்றி வழிபாடு, நடத்த மற்றொரு பிரிவு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள், வழிபாடு நடத்த அனுமதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி, வீட்டில் இருந்து, மண்ணெண்ணெய் கேன்களை எடுத்து வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில், வழிபாடு நடத்துவதற்காக வைத்திருந்த விளக்கு பீடம் உள்ளிட்டவற்றை, மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள், அடித்து நொறுக்கியதால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி, ஒரு பிரிவினர், கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டிலும், வழிபாடு நடத்த அனுமதிக்க கூடாது என, மற்றொரு பிரிவினர் கிச்சிப்பாளையம் பிரிவு ரோட்டிலும் மறியலில் ஈடுபட்டனர். உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் பரமேஸ்வரன், போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பை சேர்ந்தவர்களை தாலுகா அலுவலகம் அழைத்து சென்று, போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சேலம் சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரசேன் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை