திருவிழா நடத்துவதில் மோதல்: சேலத்தில் 85 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவிழா நடத்துவதில் மோதல்: சேலத்தில் 85 பேர் மீது வழக்கு

Added : ஆக 04, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிச்சிப்பாளையம்: கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், 85 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
சேலம், கிச்சிப்பாளையம், கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் விளக்கு ஏற்றுதல் தொடர்பாக, நேற்று முன்தினம், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு, மோதலை தடுத்தனர். இதையடுத்து, இரு பிரிவினரும், வெவ்வேறு இடங்களில், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியதால், மறியல் கைவிடப்பட்டது. மறியலில் ஈடுபட்டு, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 85 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக, டவுன் தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், எல்லை காளியம்மன் வளாகத்தில், கஞ்சி தொட்டி மாரியம்மனுக்கு விளக்கு வழிபாடு நடத்தி கொள்ள, இருபிரிவினரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, கிச்சிப்பாளையத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை