கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் வியூகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் வியூகம்

Added : ஆக 05, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் வியூகம்


கட்சியை பலப்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.சட்டசபை தேர்தலுக்கு பின், தேய்ந்து போன தே.மு.தி.க.,வை பலப்படுத்தும் முயற்சிகளை, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் எடுத்து வருகிறார்.
காலியாக இருக்கும் பதவிகளை நிரப்பும் வகையில், உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 80 சதவீத அளவிற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகளை
நியமனம் செய்ய வேண்டிஉள்ளது.பல மாவட்டங்களுக்கு, புதிய செயலர்களை நியமனம் செய்ய, விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை கட்சி பணிகளில், உயிரோட்டமாக வைத்திருக்க விஜயகாந்த்
விரும்புகிறார். ஆக., 25ல் விஜய காந்தின் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி, நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த, விஜயகாந்த் திட்ட
மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: நகரம் முதல் மாவட்டம் வரை, ஏற்கனவே, பதவியில் இருந்த செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர், மாவட்ட செயலர்களிடம் பணத்தை கொடுத்து, பதவியை வாங்கியவர்கள்.
தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே, அவர்கள் செயல்பட்டனர்; கட்சி பணிகளில் உரிய கவனம் செலுத்தவில்லை.தேர்தல் தோல்விக்கு பின், அவர்களில் பலரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். தற்போது, விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமே, கட்சியில் மீதம் உள்ளனர்.
இவர்களை வைத்து கட்சி நடத்தினால், மீண்டும் எழுச்சி பெற்று விடலாம் என, விஜயகாந்த் கருதுகிறார். இதற்காகவே, விரைவில், மாவட்டம் வாரியாக
நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.அவரது பிறந்த நாளை ஒட்டி, புதிய நிர்வாகிகளுக்கு விருந்தளித்து, புகைப்படம் எடுக்கவும், விஜயகாந்த் திட்டமிட்டு உள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
06-ஆக-201710:09:56 IST Report Abuse
Giridharan S என்னைக்கு இவரு தன்னையே மறந்து செயல்பட ஆரம்பிச்சாரோ அன்னைக்கே கட்சி நாசமா போய்டுச்சு இனியும் அவரால் ஒன்னும், பண்ண முடியாது. நன்றியுடன் இன்னும் இருப்பவர்கள் சிலர்தான்
Rate this:
Share this comment
Cancel
Saravanan SA - Thni,இந்தியா
06-ஆக-201708:24:59 IST Report Abuse
Saravanan SA ஹி....ஹி...ஹி.........
Rate this:
Share this comment
Cancel
Sithu Muruganandam - chennai,இந்தியா
06-ஆக-201704:18:44 IST Report Abuse
Sithu Muruganandam கட்சி டெபாசிட்டாவது வாங்கவேண்டுமென்றால் நிர்வாகிகளை மாற்றிப் பயனில்லை. தலைவனையே மாற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X