பளபளப்பு ரகசியம் : மனந்திறக்கும் மவுனிகா| Dinamalar

பளபளப்பு ரகசியம் : மனந்திறக்கும் மவுனிகா

Added : ஆக 06, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பளபளப்பு ரகசியம் : மனந்திறக்கும் மவுனிகா

கண்களில் தெறிக்கும் மின்னல்... ஐம்பொன்னில் செதுக்கிய தேகம்.. வெள்ளாவி வச்சு வெளுத்து.. வெயிலுக்கு காட்டாம வளர்ந்து.. தமிழக இளசுகளின் இதயத்தை கொள்ளையடிக்க சினிமாத்துறைக்குள் புகுந்துள்ள நடிகை மவுனிகா தேவி, தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்த நிமிடங்கள், உங்களுக்காக....
* பிறந்தது.. வளர்ந்தது... படித்தது...சென்னை சொந்த ஊர். வளர்ந்தது, படித்தது எல்லாம் ஆந்திர மாநிலம் ஏலூர். எம்.காம்., முடித்துள்ளேன்.
* மாடலிங் துறையில் ஆர்வம்...'டிவி'யில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் போது விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் வாய்ப்பே என்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆவின் ஐஸ்கிரீம் விளம்பரம் தான் எனக்கு முகவரி தந்தது.
* சினிமாவில் வந்தது..கவுதம் கார்த்திக் நடிக்கும் 'ஹர ஹர மகா தேவகி' படத்தில் மெயின் ரோலில் நடித்து வருகிறேன். பெயரிடப்படாத இரு படங்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது.
* பொழுதுபோக்கு..எனக்கு பிடித்த பாடல்களை முணு முணுப்பேன். அடிப்படையில் கிளாசிகல் டான்சர். இசையோடு நடனமாடுவதும் ரொம்ப பிடிக்கும்.
* கேமரா முன் முதல் அனுபவம்...பயம் சுத்தமா இல்லீங்க. ஏற்கனவே செய்தி வாசிப்பாளரா இருந்ததால் ஒரே 'டேக்ல' ஓகே வாங்கிடுவேன்.
* பிடித்த இயக்குனர்...ராஜமவுலி. அவரது படங்களில் நடிக்கும் காலம் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன்.
* எந்த கேரக்டர் உங்களுக்கு பிடிக்கும்...படையப்பா நீலாம்பரி கேரக்டர். ரம்யா கிருஷ்ணன் தவிர அதனை யாரும் பண்ண முடியாது. அந்த மாதிரி கேரக்டர் அமைந்தால் நடிப்பில் வெளுத்து வாங்குவேன்.
* யாருடன் நடிக்க ஆசை..கார்த்தி, விஜய்சேதுபதி. இருவரும் என்னை கவர்ந்த நாயகர்கள்.
* அழகின் ரகசியம்..தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். மாலை நேரத்தில் 8 பாதாம் பருப்பு உண்பதால் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கிறது. இதை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிக்கிறேன்.
* நீண்ட நாள் ஆசை...சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கணும். இதுவே என் லட்சியம்.இவரை வாழ்த்த deepa25sarathy@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X