மதுரையின்னாலே 'மாஸ்' - சாதிக்கும் சங்கீதா| Dinamalar

மதுரையின்னாலே 'மாஸ்' - சாதிக்கும் சங்கீதா

Added : ஆக 06, 2017
Advertisement
மதுரையின்னாலே 'மாஸ்' - சாதிக்கும் சங்கீதா

மலர்களில் இவர் மதுரை மல்லி; பேசத் துவங்கினால் செம கில்லி; வம்பிழுக்கும் எதிரிக்கு வில்லி; வாதத் திறமையில் திணறடிப்பாள் சொல்லி; வேலையில் ஜொலிக்கும் வெள்ளி; ஒரு போதும் ஓயாத வாடா மல்லி; அவர் வீடியோ ஜாக்கி (வீ.ஜே.,) சங்கீதா. தினமலர் நாளிதழ் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
* படித்தது, வளர்ந்தது?சொந்த ஊர், படித்தது, வளர்ந்தது எல்லாமே மதுரை தான். பி.எஸ்.சி., (ஐ.டி.,) முடித்துள்ளேன்.
* வீ.ஜே., ஆனது?படிப்பு முடிந்ததும் சென்னையில் ஐ.டி., கம்பெனியில் பணிபுரிந்தேன். நண்பர்கள் மூலம் வீடியோ ஜாக்கி வாய்ப்பு கிட்டியது. பிறகு வேலையை விட்டுட்டு முழுநேர வீ.ஜே., ஆக களமிறங்கிட்டேன்.
* பணியில் எப்படி?இந்த பணியில் பயம் மட்டும் இருக்கக் கூடாது. வாய்ப் பேச்சில் துாள் கிளப்ப வேண்டும். ரொம்ப அழகாக இருக்கக் கூட தேவையில்லை.
* சினிமா வாய்ப்பு?சில படங்களில் நடித்து உள்ளேன். 'நீயும் நானும்', 'டிக்.. டிக்.. டிக்..' உட்பட சில படங்களில் நடித்துள்ளேன். விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன. ஓரிரு படங்களின் கதை கேட்டுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பு தொடரும்.
* ஜெயம் ரவியுடன் நடித்தது?டிக்.. டிக்.. டிக்.. படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். நல்லவர்; திறமைசாலியும் கூட. பொண்ணுங்களுக்கு அவரை பிடிக்கும்.
* யாருடன் நடிக்க ஆசை?கமல்ஹாசன், அஜித்துடன் நடிக்க ஆசை. நடிகைகளில் அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய்.
* நீண்ட நாள் ஆசை?நீண்ட நாள் ஆசை கைகூடி விட்டது. ஓட்டல் துவங்க ஆசை. தற்போது சென்னையில் 'ரீங்காரம்' என்ற ஓட்டல் நடத்தி வருகிறேன்.
* ஸ்பெஷல் அயிட்டம்?ஸ்பெஷல் தோசையை கூறலாம். வந்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டு நினைவே வராது. அவ்வளவு 'வெரைட்டி'கள் தோசையில் உள்ளன.
* பொழுது போக்கு?ஓட்டலுக்கு சென்று விடுவேன். புதிதாக சமைத்து பார்ப்பேன். நன்றாக இருந்தால் ஓட்டல் 'ரெசிப்பில்' சேர்த்திடுவோம்.
* மறக்க முடியாதது?சொந்த ஊர் மதுரையை. எந்த நாட்டுக்கு சென்றாலும் மதுரை மாதிரி வராது. மதுரை மண்ணுல பொறக்க கொடுத்து வச்சிருக்கணும். மதுரையின்னாலே 'மாஸ்'தானே.இவரை வாழ்த்த: mailmesangeetha23@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X