நாட்டுப்பற்றில் 'முதல்வன்' - மனம் திறந்த அர்ஜூன்| Dinamalar

நாட்டுப்பற்றில் 'முதல்வன்' - மனம் திறந்த அர்ஜூன்

Added : ஆக 06, 2017 | கருத்துகள் (1)
Advertisement
நாட்டுப்பற்றில் 'முதல்வன்' - மனம் திறந்த அர்ஜூன்

பொழுதுபோக்கு, பக்தி, நகைச்சுவைக்காக சினிமா எடுப்பவர் உண்டு; நாட்டுப்பற்றுக்காக சினிமா எடுக்கும் நடிகர்களில் நடிகர் அர்ஜுனுக்கு தனி இடமுண்டு. ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன் என நாட்டுப்பற்றை சித்தரிக்கும் மறக்க முடியாத சினிமாக்களை கொடுத்தவர்; சண்டைகளில் கலக்கியவர்; நிபுணன் படத்திற்காக மீண்டும் தன் ஆக் ஷனை கொடுத்துள்ள அர்ஜுன் தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து...
* நிபுணன் 150 வது படம்; எப்படி உணருகிறீர்கள்?முதலில் 150 வது படம் என தெரியாது. கதை கேட்டேன். கொஞ்சம் வித்தியாசமான போலீஸ் கதையாக இருந்தது. ஒப்புக்கொண்டேன். குடும்பம், உறவு இப்படி பல விஷயங்கள் இருந்ததால் மறுக்க முடியவில்லை.
* 'ஆக் ஷன் கிங்' பட்டம் எப்போது?சினிமா குறித்து அதிகம் தெரியாமல் வந்தேன். நடிகர் ஆவேன் என நினைக்கவில்லை. எனக்கு இருந்த ஒரே தகுதி உடம்பு தான். அதை பார்த்து தான் என்னை ஹீரோ ஆக்கினர் என நினைக்கிேறன். வந்த நேரம் நிறைய அதிரடி படங்களில் நடித்தேன். புரூஸ்லீ, அதிரடி மன்னன் போன்ற பெயர்களில் அழைத்தனர். 1985ல் 'யார்' என்ற சினிமாவில் நடித்தேன். அந்த சினிமாவில் தான் 'ஆக் ஷன் கிங்' என்று பெயரிட்டனர்.
* பட்டத்தை தக்க வைத்தது?இந்த பெயரை காப்பாற்ற அதிகம் போராட வேண்டி இருக்கு. உடம்பை பார்த்து கொள்ள வேண்டுமே என்ற பயமும் கொஞ்சம் இருக்கிறது.
* அதிரடியில் விருப்பமா?சினிமாவிற்கு வந்த புதிதில் வேகமாக இருப்பேன். சண்டை பிடித்ததால் ஆக் ஷன் படங்களாக நடித்தேன். அதற்காக சிரமமும் பட்டேன். ரசிகர்கள் என் சண்டை காட்சிகளை விரும்பி ரசித்தனர். இப்போது வரை அது தொடர்கிறது.
* ஜென்டில்மேன் 2 , முதல்வன் 2, உண்டா?நான் ரெடி. இயக்குனர் ஷங்கர் தான் முடிவு செய்ய வேண்டும்.
* இந்த நீண்ட சினிமா பயணம் எப்படி?சினிமாத்துறையில் எளிதாக யாரும் சாதித்து விட முடியாது. சாதிக்க நினைத்தால் 24 மணி நேரம் உழைக்க வேண்டும். கடவுள் அனுக்கிரகமும் வேண்டும்.
* நடிப்பு, இயக்கம் எதில் ஆர்வம்?இப்போது வரை கால்ஷீட் கொடுக்க முடியாமல் பிசியாக இருக்கிறேன். நடிப்பு, இயக்கம் எதுவாக இருந்தாலும் சரி... சினிமாவில் இருக்க வேண்டும்.
* தற்போதைய சினிமா எப்படி?நன்றாக இருக்கிறது. தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. புதிய திறமைசாலிகள் எல்லா துறைகளிலும் வருகின்றனர். மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
* போலீஸ் ரோல் தேடி வந்ததா?துவக்கத்தில் இருந்தே என் முகத்தை பார்த்ததும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு நடிக்க அழைத்தனர். அப்படி நடித்த சினிமாக்கள் வெற்றிகரமாக ஓடியதால் எனக்கும் அதுபிடித்து இப்போது வரை நடிக்கிறேன். மக்கள் ரசிக்கும் வரை நடிப்பேன்.
* இயக்குனர்களிடம் ஆலோசிப்பதுண்டா?இல்லை. சினிமாவில் நான் நடிகர் மட்டுமே.
* மகள் ஐஸ்வர்யா?இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்திட்டு இருக்கிறார். அவரது 3வது படம் 'சொல்லி விடவா'. அழுத்தமான ஒரு காதல் கதையை நான் இயக்குகிறேன்.
* வேதம் சினிமாவில் விஷால் உதவி இயக்குனராக இருந்தாரே?விஷால் உதவி இயக்குனராக இருந்தது உண்மை தான். அப்போதே அவரது தந்தையிடம் அவரை நடிகர் ஆக்குங்கள் என கூறுவேன். அவரிடம் சில திறமைகள் இருக்கிறது. நம்மிடம் இருந்தவர் வளர்ந்து பல துறைகளில் பொறுப்பு வகிப்பது பெருமையாக இருக்கிறது. விஷாலுடன் இரும்புத்திரை படத்தில் சேர்ந்து நடிக்கிறேன்.
* நிஜ வாழ்க்கையில் போலீஸ் ஆக ஆசை இருந்ததா?ஆமாம். அதற்காக குதிரை ஏற்றம், சண்டை பயிற்சி உட்பட பல பயிற்சிகளை கற்றேன். அதன் தாக்கம் சினிமாவில் போலீஸ் மற்றும் நாட்டுப்பற்று உள்ள பல ரோல்களில் நடித்தேன்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X