நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க., வியூகம்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., DMK, வியூகம்,Strategy, அ.தி.மு.க., ADMK,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,பன்னீர் செல்வம், Pannir Selvam, தினகரன் ,Dinakaran, குழப்பம், Confusion, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive leader Stalin, ஜெயலலிதா , Jayalalithaa, ராஜினாமா , Resignation, சசிகலா, Sasikala,

அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அந்தக் குழப்பத்தை சாதகமாக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்;

தி.மு.க., DMK, வியூகம்,Strategy, அ.தி.மு.க., ADMK,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,பன்னீர் செல்வம், Pannir Selvam, தினகரன் ,Dinakaran, குழப்பம், Confusion, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive leader Stalin, ஜெயலலிதா , Jayalalithaa, ராஜினாமா , Resignation, சசிகலா, Sasikala,

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், வியூகம் வகுத்துள்ளார். 'கோடிகள் குவிக்க, இது தான் சரியான தருணம்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பேரம் பேசி வருகின்றனர். இதனால், தவித்து வரும், முதல்வர் பழனிசாமி, தி.மு.க.,வின் தந்திரத்தை முறியடித்து, ஆட்சியை தக்க வைக்க, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.பின், அவரை முதல்வர் பதவியிலி ருந்து, ராஜினாமா செய்ய வைத்து, அ.தி.மு.க., வின் தற்காலிக பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக விரும்பி னார். ஆனால், சசிகலாவுக்கு எதிராக, பன்னீர் செல்வம் போர்க்கொடி துாக்கியதால், அ.தி.மு.க.,வில் இரண்டு அணி உருவானது.

சொத்து குவிப்பு


வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்து, அவர் சிறை சென்றார். அதனால், முதல்வராக பழனி சாமி தேர்வு செய்யப்பட்டார். பிப்., 18ல், முதல் வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்ட சபையில் நம்பிக்கை ஓட்டு கோரி, வெற்றி பெற்றது.சட்டசபையில், ஒரு முறை நம்பிக்கை

தீர்மானம் கொண்டு வரப் பட்டு, அதில், அரசு வெற்றி பெற்று விட்டால்,அடுத்த ஆறு மாதங் களுக்கு, அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.

இதன்படி, வரும், 20ல், ஆறு மாதம் முடிகிறது. எனவே, இந்த கெடு முடிந்த பின், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை, சட்டசபை யில் கொண்டு வர, 10சதவீத எம்.எல்.ஏ.,க்
களின் ஆதரவு தேவை. அவர்கள் இது தொடர் பாக, சபாநாயகருக்கு கடிதம் அளிக்க வேண்டும். அதன்பின், அதன் மீது முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், தி.மு.க., சார்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு, போதுமான எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது.

அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உரு வாகி, குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ள தால், ஆட்சியை கவிழ்க்கும், இந்த வியூகத்தை, தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் வகுத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

'ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில், ஆட்சி மாற்றம் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்; தேர் தலை சந்திக்க தயாராகுங்கள்' என, தங்கள் கட்சி யின் மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கு, ஸ்டாலின் ஏற்கனவே ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குதிரை பேரம்


முதல்வர் பழனிசாமி அரசை காப்பாற்ற, கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க் கள் தங்க வைக்கப்பட்டு இருந்த போது, பெரிய அளவில் குதிரை பேரம் நடந்தது. தற்போது, தி.மு.க., வின் ஆட்சி கவிழ்ப்பு வியூகம் வெளி யாகி உள்ளதால், 'கோடிகளை குவிக்க, இது தான் சரியான தருணம்' என, அ.தி.மு.க., -

Advertisement

எம்.எல்.ஏ.,க்கள், பலர் முடிவுக்கு வந்துள்ளனர். இதற்காக, பல தரப்பிலும், ரகசிய பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, தினகரன், பன்னீர் அணிகளால், நெருக்கடியை சந்தித்து வரும் முதல்வர் பழனி
சாமி, தி.மு.க.,வின் திட்டத்தை முறியடித்து, தன் முதல்வர் பதவியையும், ஆட்சியையும் தக்க வைக்க, பகீரத முயற்சி மேற்கொண்டு வருவதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை


சமீபத்தில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தினகரன் -
பன்னீர் அணியைச் சேர்ந்த, முக்கிய பிரமுகர் கள், ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, முதல்வர் பழனி சாமியை பலவீன மாக்க, பன்னீர்செல்வம் அணியினரின் ஆதரவை, தினகரன் அணியினர் கேட்டுள்ளனர்.

தினகரனின், இந்த காய் நகர்த் தல்களை, பழனி சாமியும் அறிந்து உள்ளார். இதனால், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு, முதல்வர் பழனிசாமியின் அணியும் முயற்சித்து வருகிறது.

ஒரே விமானத்தில் 3 அணியினர்


சென்னையில் இருந்து திருச்சிக்கு, பன்னீர் செல்வம், பழனிசாமி ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய மூவரும், நேற்று ஒரே விமானத்தில் சென்றுள்ளனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், மூவரும், 20 நிமிடங்கள் ஒன்றாக சந்தித்து பேசி உள்ளனர். அப்போது, அணிகள் இணைப்பு உட் பட, பல விஷயங்கள் குறித்து பேசப்பட்ட தாகத் தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து (117)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
07-ஆக-201723:21:11 IST Report Abuse

Kuppuswamykesavanஇன்றைக்கு தமிழக வாக்காளர்கள், தமிழகத்தை ஆள்வதற்கு, ஒரு உத்தமனை, ஒரு உத்தமமான கட்சியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றே கூறலாம் நாம். சரிதானே?.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
07-ஆக-201722:58:47 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஎனக்கு என்னமோ இப்போது நடக்கும் திரைமறைவு அரசியல்களால் கடைசியில்பழனிசாமி தி முக விடம் தஞ்சம் அடைவார் என்று தோன்றுகிறது...

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
07-ஆக-201722:45:03 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஊடகங்கள் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் உள்ள அணிகள் ,அவர்களுக்கிடையே ஏற்படும் மோதல்கள், குற்றசாட்டுகள் பற்றி தினமும் அக்கப்போர் நடத்தி, தமிழக மக்கள் , ஸ்டாலின் ,கருணாநிதி .திமுக என்ற கட்சியை கிட்டத்தட்ட மறந்துவிட்ட நிலையில் அவ்வப்போது ஸ்டாலினால் அவர் தந்தை போல் கேள்விகள்தான் எழுப்பிக்கொண்டிருக்கமுடியும். பிஜேபிக்கு பயமூட்டும் வகையில் அதிமுக உட்கட்சி சண்டை நாடகம் சென்றுகொண்டிருக்கிறது . பிஜேபி திமுக போன்ற கட்சிகள் இவர்களில் யாரை எதிர்ப்பது யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தை உருவாக்கும் விதத்தில் தினமும் நடக்கும் திருப்பங்கள் , என்று சென்று கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்க நினைப்பது பல திசையில் வழிந்தோடும் ' பாதரசத்தை ஒரு குடத்தில் பிடிப்பது, ' பாயசத்தில் இருக்கும் செவ்வரிசியை குண்டூசியால் குத்தி பிடிப்பது போன்று கஷ்டமான காரியம் ஆகும் . .மீன்கள் ஓரிடத்திலே குழுமியிருந்தால் வலை போட்டு ஒரு சேர பிடித்துவிடலாம் .தற்போதைய நிலையில் பிஜேபியும் ,திமுகவும் திக்கு தெரியாமல் திணறுவது போல்தான் தெரிகிறது .மாணவர்கள் (சட்டமன்ற உறுப்பினர்கள் ) கண்ணெதிரே அடித்துக்கொள்கிறார்கள் . ஆனால் வாத்தியார் (ஸ்டாலின் ) பார்த்து பிரின்சிபலை (ஆளுநரை ) கூட்டிக்கொண்டு வந்து காட்டும்போது , ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். .ஸ்டாலினால் மெல்லவும் முடியவில்லை முழுங்கவும் முடியவில்லை .அவ்வப்போது தன்னுடைய மந்தையில் உள்ள ஆடுகளை எல்லாம் எண்ணி பார்த்து சரியாக இருக்கின்றதா ? என்று அடிக்கடி சோதனை செய்ய திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டுகிறார். கிட்டத்தட்ட 50 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிஜேபி தயவில் (மிரட்டலில் ) எடப்பாடி பக்கமோ ஓபிஎஸ் பக்கமோ செல்ல வாய்ப்பு இருக்கிறது

Rate this:
மேலும் 114 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X