குடிநீருக்கு ஜி.எஸ்.டி., வேண்டாம்!| Dinamalar

குடிநீருக்கு ஜி.எஸ்.டி., வேண்டாம்!

Added : ஆக 07, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குடிநீருக்கு ஜி.எஸ்.டி., வேண்டாம்!

குடிநீர், சாலைகள், விவசாயம் போன்றவற்றுக்காக, அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தினால், திட்ட செலவு உயரும். அதை பட்ஜெட்டில் சேர்க்க முடியாது. இதற்கு, மத்திய அரசு மறுத்தால், வழக்கு தொடர்வோம்.

சந்திரசேகர ராவ் , முதல்வர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி

ஆதாரமற்ற குற்றச்சாட்டு!

குஜராத்தில், ராஜ்யசபா தேர்தலில், வேட்பு மனுவில், தவறான தகவல்களை தாக்கல் செய்துள்ளதாக, என் மீது கூறப்பட்டுள்ள புகார், சிறிதும் ஆதாரமற்றது. இது தொடர்பாக, எந்த போலீஸ் நிலையத்திலும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் நடக்கும் திட்டமிட்ட சதி, இது.

அகமது படேல் , மூத்த தலைவர், காங்.,

ராஜ்யசபாவுக்கு கிடைத்த சாதனை!

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு வெற்றி பெறுவார் என எதிர்பார்த்ததுதான். துணை ஜனாதிபதியாக அவர் வெற்றி பெற்றது, ராஜ்யசபாவுக்கு கிடைத்த சாதனை. 18 ஆண்டுக்கு மேல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ள வெங்கையா நாயுடு, ராஜ்யசபாவை சிறப்பாக வழி
நடத்துவார் என நம்புகிறேன்.

சரத் யாதவ் தலைவர், ஐக்கிய ஜனதா தளம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Pannneerselvam - chennai,இந்தியா
07-ஆக-201713:57:41 IST Report Abuse
L.Pannneerselvam நீங்களாச்சும், உங்களை போன்றவர்களாச்சும் குடிக்கும் நீருக்கெல்லாம் வரி போடக்கூடாது என மோடியிடம் அழுத்திச் சொல்லுங்கள். ஏனென்றால், இதை அப்படியேவிட்டால்,நாளுக்கு சுவாசிக்கும் காற்றுக்கும்,அடிக்கும் வெயிலுக்கும், பெய்யும் மழைக்கும் ஜிஎஸ்டி வரிபோட்டுவிடுவார்கள் வழக்கம்போல் எங்கள் தமிழக அமைச்சர்கள், ஐம்பது எம் பிக்கள்,,அதற்பும் வாய்மூடி கைபொத்தி, நிற்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X