அ.தி.மு.க., பிரமாண பத்திரத்தில் சசி, தினகரன் பெயரை நீக்க திட்டம்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 அ.தி.மு.க.,ADMK, பிரமாண பத்திம், Affidavits, சசி, Sasi, தினகரன் , Dinakaran, தேர்தல் கமிஷன், Election Commission, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,  சட்ட நிபுணர்கள், Legal Experts, மன்னார்குடி,Mannargudi, சசிகலா அணி , Sasikala Team,பன்னீர் அணி, Pannir Team, பொதுச்செயலர் சசிகலா,General Secretary Sasikala, துணைப் பொதுச் செயலர் தினகரன்,  Deputy General Secretary Dinakaran, அமைச்சர்கள் ,Ministers, ஜெயகுமார், Jeyakumar, உதயகுமார்,Uthayakumar, சென்னை, Chennai, மாணவர்கள், Students,நீட் தேர்வு,NEET Exam, அணைகள் , Dams,

தேர்தல் கமிஷனில், சசிகலா, தினகரன் பெயருடன், ஏற்கனவே தாக்கல் செய்த, அ.தி.மு.க.,வினரின் பிரமாண பத்திரங்களுக்கு மாற்றாக, இருவரின் பெயரும் இல்லாத, புதிய பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வது குறித்து, முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

 அ.தி.மு.க.,ADMK, பிரமாண பத்திம், Affidavits, சசி, Sasi, தினகரன் , Dinakaran, தேர்தல் கமிஷன், Election Commission, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,  சட்ட நிபுணர்கள், Legal Experts, மன்னார்குடி,Mannargudi, சசிகலா அணி , Sasikala Team,பன்னீர் அணி, Pannir Team, பொதுச்செயலர் சசிகலா,General Secretary Sasikala, துணைப் பொதுச் செயலர் தினகரன்,  Deputy General Secretary Dinakaran, அமைச்சர்கள் ,Ministers, ஜெயகுமார், Jeyakumar, உதயகுமார்,Uthayakumar, சென்னை, Chennai, மாணவர்கள், Students,நீட் தேர்வு,NEET Exam, அணைகள் , Dams,

இதன் மூலம், அரசுக்கு, மன்னார்குடி சொந்தங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்க, அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அத்துடன், பன்னீர் அணியுடனான இணைப்பு நிச்சயம் என்றும், முதல்வர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில், சசிகலா அணி மற்றும் பன்னீர் அணியினர், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என்பதை நிரூபிக்க, லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களில், கட்சியினரிடம் கையெழுத்து பெற்று, தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளனர். சசிகலா அணியினர் சமர்ப்பித்த பிரமாண பத்திரங்களில், பொதுச்செயலர் சசிகலா; துணைப் பொதுச் செயலர் தினகரன்; தலைமை நிலையச் செயலர் முதல்வர் பழனிசாமி என்றும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பொதுச்செயலர் தேர்வு


பன்னீர் அணியினர் சமர்ப்பித்த ஆவணங்களில், 'கட்சியின் சட்ட விதிகளின்படி, தொண்டர்களால் தான் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். 'எனவே, சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது; அவரால் கட்சி நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டவர்களின், நியமனமும் செல்லாது என, அறிவிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.இரு அணியினரும் சமர்ப்பித்த, பிரமாண பத்திரங்களை பெற்ற தேர்தல் கமிஷன், கட்சியின் சின்னம் யாருக்கு என்றும், பொதுச்செயலர் தேர்வு செல்லுமா என்றும், இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி அணியினர், சசிகலா குடும்பத்தை முற்றிலும் ஒதுக்கி விட்டு, கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்; அதற்கேற்ற வகையில், காய் நகர்த்தி வருகின்றனர்.
இதற்கு எதிராக செயல்படும் தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, பல்வேறு நடவடிக்கைகளை துவக்கி உள்ளார்; தன்ஆதரவாளர்களுக்கு, புதிய பதவிகளை வழங்கி உள்ளார். இதை, முதல்வர் பழனிசாமி அணியினர் ஏற்காதது, தினகரன் அணியினரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த, பிரமாண பத்திரத்தில், பொதுச்செயலர் சசிகலா, துணைப் பொதுச்செயலர் தினகரன் ஆகியோருக்கு ஆதரவு அளிப்பதாக, அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 'தற்போது, தினகரனை திடீரென ஒதுக்க காரணம் என்ன' என்றும், அவரின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமூக வலைதளங்கள்


மேலும், தினகரனுக்கு எதிராக பேசிய, அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர், முன்னர் அவருக்கும், சசிகலாவுக்கும் ஆதரவாக கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களின் நகல்களை, சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர்.பிரமாண பத்திரங்களில், சசிகலா மற்றும் தினகரன் பெயர் இடம் பெற்று இருப்பதால் தான், அவர்களை கட்சியை விட்டு விலக்கியுள்ளதாக, முதல்வர் பழனிசாமி அணியினர் கூறுவதை, பன்னீர் அணியினர் ஏற்க மறுத்து வருகின்றனர்.
எனவே, சசிகலா குடும்பத்தை, கட்சியிலிருந்து முற்றிலும் விலக்க, அவர்கள் பெயர் இல்லாமல், புதிதாக பிரமாண பத்திரங்களில், கட்சியினரிடம் கையெழுத்து பெற்று, தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கலாமா என, பழனிசாமி அணியினரும், அவர்களின் ஆதரவாளர்களும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். அரசுக்கு மன்னார்குடி சொந்தங்களால், பல வகையிலும் நெருக்கடி வருவதை தவிர்க்க, அமைச்சர்களும் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement

பொதுக்குழுவை கூட்டி, சசிகலா நியமனத்தை ரத்து செய்து விட்டு, புதிய பொதுச்செயலரை தற்காலிகமாக தேர்வு செய்வது குறித்தும், ஆலோசனை நடந்து வருகிறது.இவ்வாறு செய்தால், 'பன்னீர் அணியை நம்ப வைக்க முடியும்; மக்களிடமும் நல்ல பெயர் எடுக்க முடியும். சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில், கட்சியும், ஆட்சியும் போய்விடுமோ என, அச்சத்தில் இருக்கும் நிர்வாகிகளையும், நிரந்தரமாக தங்கள் அணியில் தங்க வைக்க முடியும்' என, பழனிசாமி அணியினர் நம்புகின்றனர். இதை உறுதிபடுத்தும் வகையில், நேற்று நிருபர்களிடம் பேசிய, முதல்வர் பழனிசாமி, ''ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை விரைவில் காணலாம்,'' என்றார்.

முதல்வர் நம்பிக்கை


சென்னையில் நேற்று பழனிசாமி கூறியதாவது: மாணவர்கள் நலன் கருதி, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில், மத்திய அமைச்சரை சந்தித்து, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அத்துடன், ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை விரைவில் பார்ப்போம்.
'சட்டசபையில் முக்கிய பிரச்னைகளை பேசவில்லை' என, பன்னீர்செல்வம் கூறி உள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு, தகுந்த பதில் அளித்துள்ளோம். அவர் சபைக்கு வந்திருந்தால், இப்படி கூறியிருக்க மாட்டார்.
தமிழகத்தில், 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவுகிறது. தேவையான நிதி ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். மூன்று ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் செலவில், நுாற்றுக்கணக்கான அணைகள் கட்ட உள்ளோம். இந்த ஆண்டு மட்டும், அணைகள் கட்டும் பணிக்காக, 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (70)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
08-ஆக-201721:39:56 IST Report Abuse

V GopalanTamilnadu Politics have become laughing stock and really why the Central Govt is still allowing when a number of Ministers, IAS Officer was raided. In today's (08-09-2017 at 2000 hrs. News )OTRAN of Makkal TV a tail piece was heard that during the First Citizen of India's election, shown their support, the party members were very much happy that they will get some kind of benefits and if so where is the question of saying that we are holy cow and have clean chit from corruption?

Rate this:
magesh - gudalur,இந்தியா
08-ஆக-201717:05:32 IST Report Abuse

mageshஅவன் மூஞ்ச பாருங்க..அவ்ளோ எரிச்சல் வரும்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
08-ஆக-201716:39:19 IST Report Abuse

Balajiஇவர்கள் சேருவோம் சேருவோம் என்று சொல்கிறார்கள்....... ஆனால் அவர்கள் சேருவதற்கு வாய்ப்புகளே இல்லை என்று சொல்கிறார்கள்........ சும்மா மக்களை ஏமாற்றவே இப்படி செய்துகொண்டு இருக்கிறார்களோ என்று தான் எண்ண வைக்கிறது.......

Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X