11 லட்சம் போலி 'பான் கார்டு' முடக்கம் | 11 லட்சம் போலி 'பான் கார்டு' முடக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

11 லட்சம் போலி 'பான் கார்டு' முடக்கம்

Added : ஆக 08, 2017 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 போலி, Fake, பான் கார்டு,PAN Card, புதுடில்லி,New Delhi,  வருமான வரித் துறை, Income Tax Department,  நிரந்தர எண் , Permanent Number , மத்திய அரசு ,Central Government, ஆதார் எண், Aadhaar Number,

புதுடில்லி: போலியான மற்றும் மோசடி பெயரில் வாங்கப்பட்ட 11.44 லட்சம், 'பான் கார்டு' எனப்படும் வருமான வரித் துறை நிரந்தர எண் அட்டையை மத்திய அரசு முடக்கியுள்ளது.

பான் கார்டு வாங்குவதற்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கி, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. பலர், போலி பெயர்களில், போலியான முகவரியில், பான் கார்டு வாங்குவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஒருவர் பெயரிலேயே, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள், போலி பெயர் மற்றும் முகவரி கொடுத்து வாங்கிய பான் கார்டு உள்ளிட்ட மோசடி கார்டுகளை மத்திய அரசு முடக்கி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும், 11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

11 லட்சம் போலி 'பான் கார்டு' முடக்கம்

இந்நிலையில், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை, மிகவும் சுலபமாக தெரிந்து கொள்ளும் வசதியை, வருமான வரித் துறை செய்துள்ளது. இதற்காக, வருமான வரித்துறையின், http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் சென்று, இந்த தகவலை சரிபார்த்து கொள்ள முடியும்.

வருமான வரித் துறையின் இணையதளத்தில், 'சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'நோ யுவர் பான்' என்பதற்குள் நுழைய வேண்டும். அங்கு கேட்கப்படும், பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அலைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஒரு ரகசிய எண் வரும். அதைப் பதிவு செய்தால், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி 29 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 6.2 கோடி பேர், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். நாடு முழுவதும் 5.2 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-ஆக-201713:29:08 IST Report Abuse
Karuthukirukkan எது பல லட்சம் போலி பான் அட்டையா ?? அடேங்கப்பா .. என் அம்மாவின் பான் அட்டை கூட இப்போது முடக்கப்பட்டுள்ளது .. ஏன் என்றால் என் அம்மாவின் பான் அட்டையும் ஆதரயும் இணைக்கவில்லை என்று .. இது மாதிரி பல லட்சம் பேர் பான் அட்டை எடுத்து வெச்சிருக்காங்க முன்னர் வங்கி கணக்கு துவங்க .. இதை எல்லாம் முடக்கிட்டு .. ஏதோ லட்சக்கணக்கான போலி அட்டைகள் இருந்தது போல எதுக்கு பரப்புகுறீர்கள் ?? ஒருவர் போலி பான் அட்டை வெச்சிருந்தா எவ்வளவு வரி ஏய்ப்பு செய்ய முடியும் ?? கொஞ்சம் கணக்கு சொல்ல முடியுமா ?? ஒரு பான் அட்டைக்கு முதல் 2.5 லட்சத்துக்கு மட்டும் தான் வரி கிடையாது .. இந்த இரண்டரை லட்சத்துக்கு 10 சதவீதம் வரி என்று வெச்சுக்கிட்டா 25 ஆயிரம் .. ஆக ஒருத்தர் 100 பான் அட்டை வெச்சிருந்தா இந்த 25 லட்சம் சேமிக்கலாம் .. இந்தியாவில் ஒரே ஒரு மனிதனாவது 50 , 100 என்று பான் அட்டை வெச்சிருந்தானா ?? அப்பிடி ஒரு எடுத்துக்காட்டேனும் கூற முடியுமா ?? நீதிமன்றம் இதை கேட்ட பொழுது அப்பிடி எந்த எடுத்துக்காட்டையும் அரசு வழக்கறிஞரால் கூற முடியவில்லை .. வரி ஏய்ப்புக்காக நிறையா பான் அட்டை வெச்சிருப்பாங்க என்று கூறியது மிகவும் நகைப்புக்குரியது .. இதை ஒரு காரணமா சொல்லி பான் ஆதார் இணைப்பை கட்டாயம் ஆகியாச்சு .. அவ்வளவே ..
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
08-ஆக-201715:37:12 IST Report Abuse
தேச நேசன் கவலைப்படாதீங்க எண்பது வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு ஐந்து லட்சம் வரை வரிவிலக்குண்டு அறுபது வயத்துக்குமேற்பட்டவர்களுக்கு மூன்று லட்சம் வரையுமுண்டு ஒருவரே நூறு போலி பான்கார்டு வைத்து பங்குமார்க்கெட்டில் IPO புதிய பங்குகளுக்கு விண்ணப்பித்துவிடுகின்றனர் ஒதுக்கீடு வந்தவுடன் நல்ல லாபத்துக்கு விற்றுவிடுகின்றனர் இந்த பிராடு பத்தாண்டுகளாக உண்டு ஒரே ஒரு பான்கார்டில் ஆண்டுக்கு இரண்டரை லட்சமென்றாலும் பதினோரு லட்சம் பான்கார்டுகளில் பத்தாண்டுகளுக்கு? (எஸ் வங்கி பங்குவெளியீடு பற்றி படித்திருக்கிறீர்களா? ஒரு சிலரே ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகள் மூலம் பங்குவங்கியது )...
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
08-ஆக-201717:55:09 IST Report Abuse
Nakkal Nadhamuniகிறுக்கறே, உங்களமாதிரிதான் பல பேர் நினைக்கிறாங்க... தப்பு பண்ணனும் என்கிற எண்ணத்துக்குத்தான் தண்டனை... பெருசா சிறுசா அது அப்புறம்... இன்னிக்கு சின்னதா பண்ணுபவன் நாளைக்கு பெருசா பண்ணுவான்... திராவிட கட்சிகளுக்கு 1000 கோடி கொள்ளை அடிப்பது சின்ன தப்பா இருக்கலாம்... அதுனால அவங்கள விட்டுடலாமா???...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-ஆக-201711:03:55 IST Report Abuse
Nallavan Nallavan இதைச் செய்ய பாஜக அரசுக்கு மட்டுமே துணிவு வந்தது .....
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-ஆக-201713:32:21 IST Report Abuse
Karuthukirukkanஅடேங்கப்பா என்ன ஒரு துணிவு .. இதை செய்ததே ஆதாரை கொண்டு தான் ... ஆதாரை தெருவில் வந்து எதிர்த்தது யார் ?? அதுவும் இல்லாம இது அனைத்தும் போலி பான் அட்டை எல்லாம் கிடையாது .. பல லட்சம் பேர் இணைக்கவில்லை .. ஏழை எளியவர்கள் வயதானோர் வெளிநாட்டில் இருப்போர் என்று எத்தனையோ பேர் முடியாம இல்ல தேவை இல்லை என்பதால் இணைக்கல.. அவ்வளவே .. அளவா பில்ட் அப் கொடுக்கவும்...
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
08-ஆக-201717:58:05 IST Report Abuse
Nakkal Nadhamuniதப்பையும் பண்ணிட்டு கேள்விக்கற தைரியம் மட்டும் பல கட்சிகள் கிட்ட இருக்கு... இதை ஊக்குவித்த காங்கிரசுக்கு நன்றி......
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
08-ஆக-201710:49:44 IST Report Abuse
சுந்தரம் போலியாக வழங்கப்பட்ட 11.44 லட்சம், 'பான் கார்டு' களை வழங்கியது அரசு வருமான வரித்துறையா அல்லது போலி நிறுவனங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X