Boost for Ahmed Patel, Election Commission Says 2 Congress Votes Invalid | குஜராத் ராஜ்யசபா தேர்தல்: 2 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு செல்லாது என அறிவிப்பு| Dinamalar

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: 2 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு செல்லாது என அறிவிப்பு

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (19)
Advertisement
குஜராத்,Gujarat , ராஜ்யசபா தேர்தல், Rajya Sabha Elections,எம்.எல்.ஏ, MLA, ஓட்டு, Vote, புதுடில்லி, New Delhi,  பா.ஜ.,BJP, தேர்தல் ஆணையம் , Election Commission,  அகமது பட்டேல், Ahmed Patel, அமித்ஷா,Amit Shah,  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, Union Minister Smriti rani,காங்கிரஸ்,  Congress,

புதுடில்லி: கடும் இழுபறிக்கிடையே குஜராத் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. இதில் திடீர் திருப்பமாக பா.ஜ.வுக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் அளித்த ஓட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் காங். வேட்பாளர் அகமது பட்டேல் மீண்டும் எம்.பி.யாகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில், காலியாக மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்தது. இதில், பா.ஜ., சார்பில், அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மூன்றாவது இடத்துக்கு, காங்கிரஸ் சார்பில், அந்த கட்சி தலைவர் சோனியாவின் அரசியல் செயலர், அஹமது படேல் நிறுத்தப்பட்டார்.

இத்தேர்தலில் காங். எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜ.விற்கு தாவினர். இதனால் அகமது பட்டேல் வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று நடந்த ஒட்டுப்பதிவின் போது காங்கிரஸ் கட்சியின் இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறி ஓட்டளித்ததுடன், ரகசிய ஒட்டெடுப்பு விதிமுறைகளை மீறி, எதிர்க்கட்சியினரிடம் தங்கள் ஓட்டு சீட்டை காட்டியதால், அதை ரத்து செய்ய வேண்டு மென, தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் முறையிட்டது. இதை எதிர்த்து, பா.ஜ.,வில் மத்திய அமைச்சர்கள் பலர் தேர்தல் ஆணைய அலுவலகத்தினை இரவு வரை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். இதனால், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் கடும் இழுபறி நிலவியது.

இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் இரவு வரை தேர்தல் ஆணையத்தை சந்தித்து தொடர்ந்து மாறி மாறி புகார் கூறி வந்தன. இதனால் ஒட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. முடிகளை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் குஜராத் மாநிலம் தலைமைதேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என தகவல்கள் வெளியாயின.

இதன்படி ஓட்டு எண்ணிக்கை இரவு துவங்கியது. இதில் காங். கோரிக்கையை ஏற்றி பா.ஜ.வுக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஒட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு பா.ஜ.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
09-ஆக-201713:22:29 IST Report Abuse
Mohammed Abdul Kadar மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட காங்கிரஸ் கட்சி MLA தன் இஷ்டப்படி வேறு கட்சிக்கு ஓட்டு அளிக்க இவருக்கு உரிமை இல்லை, காரணம் மெஜாரிட்டி மக்கள் காங்கிரீஸுக்கு ஓட்டு அளித்ததின் மூலம் அவர் MLA ஆனார். அவர் தன் இஷ்டப்படி பிஜேபி க்கு ஓட்டு அளிக்க உரிமை இல்லை, அப்படி பிஜேபி க்கு ஓட்டு அளிக்க விரும்பினால் MLA பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அதே தொகுதியில் போட்டி இட்டு அவர் தன்னால் தேர்ந்தெடுக்க மக்களும் பிஜேபி ஆதரவு இருக்கு என்ன நிரூபிக்க வேண்டும், தன்னிச்சையாக முடிவு எடுக்க MLA க்கு அதிகாரம் இல்லை , இதை சட்டமாகவும் இயக்க வேண்டும்.. காரணம் முழுக்க முழுக்க தன் சுயநலத்துக்காக பணத்துக்காக இப்படி கட்சி மாறுப்பவர்கள் MLA பதவி பறிக்க பட வேண்டும், காரணம் மக்களால் தேர்தெடுக்க பட்டவர்கள் அந்த அரசியல் கட்சியில் சார்ந்து இருக்க வேண்டும், வேறு கட்சி தாவுவதாக இருந்தால் ராஜினாமா செய்து மீண்டும் போட்டி இட்டு நிரூபிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201710:48:30 IST Report Abuse
PRABHU பிச்சைக்கார அரசியல்....
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201710:14:33 IST Report Abuse
Venki அப்போ துட்டுக்கு வோட்டு துட்டுக்குத்தான் வோட்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X