குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரசின் அஹமது படேல் வெற்றி | Dinamalar

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரசின் அஹமது படேல் வெற்றி

Updated : ஆக 09, 2017 | Added : ஆக 09, 2017 | கருத்துகள் (179)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

காந்திநகர்: குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே காங்கிரசின் அஹமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி மற்ற இரு இடங்களில் வெற்றி பெற்றனர்.


வியூகங்கள்:


குஜராத் ராஜ்யசபா தேர்தல்: அகமது படேல் வெற்றி

குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜ.,சார்பில் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதியானது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் காங்.,சார்பில் அஹமது படேல், பா.ஜ., சார்பில் காங்., கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவிய, பல்வந்சிங் நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அஹமது படேலை தோற்கடிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டது.


‛கூவத்தூர் ' பாணி:

முன்னதாக காங்., கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து குஜராத் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ‛கூவத்தூர் ' பாணியில் நடந்த இந்த நிகழ்வில் குதிரை பேரம் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த தனியார் விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையும் நடந்தினர்.


கோரிக்கையும்.. எதிர்ப்பும்..


இந்நிலையில் நேற்று (ஆக. 8) நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டு சீட்டை பா.ஜ.,வினருக்கு காண்பித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து 2 எம்.எல்,ஏக்களின் ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்க காங்.,தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு பா.ஜ., சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டு எண்ணும் பணி நீண்ட நேரமாக காலதாமதம் ஏற்பட்டது.


செல்லாது:


தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஓட்டுபதிவின் வீடியோவை ஆய்வு செய்தது. இதனையடுத்து காங்கிரஸ் 2 எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் ஒட்டு எண்ணும் பணி நள்ளிரவு தாண்டிய பின்னர் துவங்கியது.


அகமது படேல் வெற்றி:

முடிவில் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ராணி ஆகியோர் தலா 46 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர். இழுபறியாக இருந்த 3 வது சீட்டிற்கான போட்டியில், வெற்றிக்கு தேவையான 44 ஓட்டுகளை பெற்று காங்., கட்சியின் அஹமது படேல் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பல்வந்த் சிங் 38 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

இந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா, ஸ்மிரிதி ராணி, மற்றும் காங்., சார்பில் போட்டியிட்ட அஹமதுபடேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.


என தலைவர்கள் கருத்து:


வெற்றி பெற்றது குறித்து அஹமது படேல் தனது டுவிட்டரில் ‛‛வாய்மையே வென்றது'' என பதிவிட்டுள்ளார். அஹமது படேலின் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.



இதற்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலில் இது போன்ற பரபரப்புகளும், திருப்பங்களும் ஏற்பட்டதில்லை என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran - Kongu seemai,இந்தியா
10-ஆக-201700:49:20 IST Report Abuse
Cheran சாதாரணமாக இந்த தேர்தலை விட்டு இருந்தால் பிஜேபி யின் வெற்றி பெரிதாக பட்டு இருக்கும். அதுவும், அமித் ஷாவின் MP தேர்வு பெரிதாக பட்டு இருக்கும். ஆனால் காங்கிரெஸ்ஸை தோற்கடிக்க குறுக்கு வழியை வலியனே தேர்ந்தெடுத்து அசிங்கமான அரசியல் செய்ய முற்ப்பட்டதே இங்கு பிரச்சினை. அசிங்கப்பட்டார் அமித் ஷா...
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
09-ஆக-201717:58:49 IST Report Abuse
புதுகை வானம்பாடி பிஜேபி க்கு வோட்டு போட்ட இரண்டு காங்கிரஸ் MLA வடிவேல் காமெடி பார்த்து இருப்பாங்க .......... அது தன வோட்டு சீட்டை கட்டி இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
09-ஆக-201717:54:50 IST Report Abuse
புதுகை வானம்பாடி மோடியின் செயலுக்கு மோடியின் மாநிலத்தில் இருந்து வந்த முதல் தோல்வி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X