பெங்களூரு சிறையில் நடந்தது என்ன?| Dinamalar

பெங்களூரு சிறையில் நடந்தது என்ன?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பெங்களூரு, Bangalore, சிறை,  Jail,சசிகலா, Sasikala,ரூபா, Rupa, சத்ய நாராயணராவ், Satya Narayana rao,  சிறப்பு வசதிகள் , Special facilities, டி.ஜி.பி சத்ய நாராயணராவ், DGP Satya Narayana Rao, லஞ்சம், bribery,  கர்நாடக அரசு,Karnataka Government, விசாரணை,  Investigation, சொத்து குவிப்பு வழக்கு, Property accumulation case, பெங்களூரு சிறை, Bangalore prison,அ.தி.மு.க, ADMK, சிறைத்துறை, prisons, டி.ஐ.ஜி ரூபா,DIG Rupa,கன்னட டிவி சேனல், Kannada TV channel,
Share this video :
பெங்களூரு சிறையில் நடந்தது என்ன?

பெங்களூரு: 'பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, டி.ஜி.பி.,யாக இருந்த சத்ய நாராயணராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என, கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணை குழுவினர் தாக்கல் செய்யவுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


குற்றச்சாட்டு:


சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்காக, கர்நாடக சிறைத்துறை, டி.ஜி.பி.,யாக இருந்த சத்ய நாராயணராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக பணியாற்றிய ரூபா, குற்றம் சாட்டினார். இதுகுறித்து விசாரிக்க, கர்நாடக மாநில அரசு, விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த குழுவினர், சிறையில் விசாரணை நடத்தி, அறிக்கை தயாரித்து வருகிறது.


ஆதாரம் இல்லை:


இந்த அறிக்கையில், 'சத்ய நாராயணராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்றதற்கான ஆதாரம் இல்லை; கைதியின் பாதுகாப்பு கருதி, சிறை கண்காணிப்பாளருக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு, சசிகலாவுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது உண்மை' என, குறிப்பிடப் பட்டுள்ளதாக, கன்னட,'டிவி' சேனல்களில், நேற்று செய்தி வெளியானது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (68)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
10-ஆக-201718:07:25 IST Report Abuse
r.sundaram முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். இதில் பின்பலம் இல்லாத ரூபா பலியாக போகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-201717:06:17 IST Report Abuse
Kasimani Baskaran நடப்பதையெல்லாம் பார்த்தால் ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான SINனம்மா எதோ நட்சத்திர விடுதியில் சொகுசாக தங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது.. எதற்கும் உள்ளே இருப்பது ஒரிஜினலா அல்லது போலியா என்ற சரிபார்ப்பது நல்லது...
Rate this:
Share this comment
Cancel
10-ஆக-201716:24:52 IST Report Abuse
Iyappanjkarur ஏம்மா எங்களோட தமிழ் சினிமாவுல இண்டர்வெல்ல இப்படித்தான் சீன் வரும் ஆனா க்ளைமேக்ஸ்ல கதாநாயகனுக்கு கோபம் வந்து தனியாளா போயி எல்லோரையும் அடிச்சு தூள் பண்ணிடுவார் ஆனா நிஜவாழ்க்கைல அது முடியாது
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
10-ஆக-201716:18:32 IST Report Abuse
Balaji அங்கு நடப்பது ஊழல் கட்சியின் அரசு. அப்புறம் எப்படி அவர்கள் இங்கு நடப்பது ஊழல் அரசு என்று ஒப்புக்கொள்ளும். நல்லவேளை சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சொல்லாமல் விட்டார்களே.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
10-ஆக-201713:54:38 IST Report Abuse
தமிழர்நீதி பாவம் ரூபா. இனி ஆப்பு அடிப்பார்கள் . பேசாமல் கிரண் பேடி மாதிரி பிஜேபி இல சேர்ந்து , அப்படியே கர்நாடக தேர்தலில் களம் இறங்கி, தோற்றுப்போனால் எங்காவது துணைநிலை ஆளுநர் அல்லது ராம்தேவ் மாதிரி தொழிலதிபர் ஆகிடலாம் . ரூபா விற்கு நல்ல காலம் பிறக்குது சசிகலாவால்.
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
10-ஆக-201713:53:31 IST Report Abuse
S.prakash நேர்மையானவர்களால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். இந்திய கெட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் அழிய வேண்டும், இதற்கு தற்போது வாய்ப்பு என்பது இல்லவே இல்லை.நல்ல வேட்பாளர்களை நிறுத்த அரசியல் ஆணையத்திற்கும் அதிகாரம் இல்லை வாக்காளர்களும் மக்களாட்சி என்பதை மறந்து எந்த அளவிற்கு கீழ்த்தரமாக போக வேண்டுமோ அந்த அளவிற்கும் போய்விட்டார்கள். உள்நாட்டு கலவரம் வர வாய்ப்பே இல்லை. இன்னொரு அந்நிய படையெடுப்பு இந்தியாவில் நடந்தால் தான் கெட்டவர்கள் அழிய வாய்ப்புள்ளது, அதுவும் ஓரளவே. வீணாக நமது இந்திய வீரர்கள் தான் தியாகம் செய்ய வேண்டி வரும். ஒரு நல்ல நேர்மையான அதிகாரியான டி.ஐ.ஜி., ரூபா அவர்களுக்கு எவ்வளவு கெட்டவர்கள் கூட்டம் எதிராக நிற்கிறது. இதுவும் பெண்ணிற்கு எதிரான வன்முறைதான். உச்சநீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்ற சசிகலாவிற்கு அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஏன் சிறையில் சிறப்பு சலுகை செய்ய வேண்டும். இது இந்தியாவில் எல்லா சிறைகளுக்கும் பொருந்துமா ?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஆக-201713:37:14 IST Report Abuse
Nallavan Nallavan தமிழகத்தில் திமுக ஆட்சியே அமைந்தாலும், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தாலும் பேரம் பேசி சரிக்கட்டிவிடுவார் அந்த சாகசக்காரி சசி ......
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-ஆக-201713:21:02 IST Report Abuse
Pasupathi Subbian சிறை அதிகாரி, தனது சட்டத்திற்கு உட்பட்டு , சில சலுகைகள் செய்துஇருப்பது உண்மை . அது எதற்க்காக ? அங்கே சிறையில் இருக்கும் பலருக்கும் அவர் இந்த சலுகைகளை செய்து தந்திருப்பது தெரிகிறது. இதனால் அவர் பல பயன்களை அடைந்திருப்பதும் உண்மை. சசிகலா அவர்கள் தவறு செய்துள்ளார், அதற்க்கு அவர் தண்டனை பெற்று , சிறையில் அடைக்கப்பட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த தண்டனையை அவர் ஏற்காமல் , தப்பிப்பதற்கு இந்த சிறைத்துறை அதிகாரி உதவியாக இருந்துள்ளார். ஆக நீதிமன்ற ஆணையை மீறியதற்கும், கடமையை செய்யாததற்கும், சட்டத்துக்கு புறம்பாக கைதிக்கு உதவி செய்ததற்கும் என்று பற்பல சட்ட பிரிவுகளின் கீழ் இவருக்கு தண்டனை கிடைக்க அரசு முயற்சிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
10-ஆக-201712:39:52 IST Report Abuse
mindum vasantham Intha ammavai pottu thallanumnu mudivu pannittaanga
Rate this:
Share this comment
Cancel
10-ஆக-201712:25:51 IST Report Abuse
அப்பாவி திருடனை விசாரிக்க இன்னொரு திருடனைக் கேட்ட மாதிரி இருக்கு... கூடிய சீக்கிரம் சத்யநாராயணாவுக்கு பாரத ரத்னா கொடுக்க ஏற்பாடு செஞ்சுருவாங்க. அவ்வளவு நல்லவரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.