சுருட்ட நினைக்கும் அமைச்சர்கள்: தினகரன் பாய்ச்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுருட்ட நினைக்கும் அமைச்சர்கள்: தினகரன் பாய்ச்சல்

Updated : ஆக 11, 2017 | Added : ஆக 10, 2017 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தினகரன், Dinakaran, முதல்வர் பழனிசாமி,Chief Minister of Palani, சசிகலா, Sasikala, அதிமுக, AIADMK,அமைச்சர்கள்,  Ministers, தினகரன்,Dinakaran, தஞ்சாவூர், Thanjavur,  தேர்தல் கமிஷன், Election Commission,  சுற்றுப்பயணம், Tour, திண்டுக்கல் சீனிவாசன் , Dindigul Srinivasan,ஜெயலலிதா,  Jayalalithaa,

சென்னை:''கட்சிக்கு விரோதமாக யார் செயல் பட்டாலும், அறுவை சிகிச்சை செய்ய தயங்க மாட்டேன்,'' என, தினகரன் தெரிவித்தார்.

இது குறித்து, தஞ்சாவூரில், அவர் கூறியதாவது: பொதுச்செயலர் சசிகலா கூறியதால், முதல்வ ராக பொறுப்பேற்ற பழனிசாமி, எப்போது தேர் தல் கமிஷன் தலைவரானார் என, தெரிய வில்லை. அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய, லெட்டர் பேடில், அ.தி.மு.க., தலைமைச் செயலகம் என, உள்ளது; 'அ.தி.மு.க., அம்மா' என, இருக்க வேண்டும். இது, தேர்தல் கமிஷன் விதி மீறல். யாராவது தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தால், முதல்வர் முதல், அனைத்து அமைச் சர்களும், பதவியில் இருந்து இறங்க நேரிடும். இது கூட, அவர்களுக்கு தெரியவில்லை. அவசர கோலத்தில், பயத்தின் காரணமாக, இவ்வாறு செய்துள்ளனர்.

பொதுச்செயலரால் கட்சியில் சேர்க்கப்பட்ட பின், நியமன பதவிகளை, அவர் யாருக்கு வேண்டுமானா லும் வழங்கலாம். பொதுச்செயலர், மாவட்ட செய லர், ஒன்றிய செயலர், நகரச் செயலர் போன்ற பதவி கள் தவிர, மற்ற நியமன பதவிகளை அறிவிக்க, பொதுச் செயலருக்கு அதிகாரம் உண்டு.அமைச்சர் சீனிவாசனை, பொருளாளராக நியமித்தது போல, என்னை நியமித்துள்ளார்.

அதிமுக பெயரை பயன்படுத்தியது குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால், முதல்வர் உள்ளிட்டோரின் பதவி பறிபோகும் என தினகரன் கூறியுள்ளார்.

2012 டிச., 4ல், ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைத்த சம்பத்திற்கு, அன்றே கொள்கைபரப்பு துணைச் செயலர் பதவியை ஜெ., வழங்கினார். எனவே, நான் துணைப் பொதுச்செய லராக செயல்பட, எந்த தடையும் இல்லை. கட்சி வளர்ச்சிக்கு தேவையான, அனைத்து நடவடிக்கைக ளையும் எடுப்பேன். அறுவை சிகிச்சை தேவைப் பட்டால், யாராக இருந்தாலும் மேற்கொள் வேன். என்னை தடைபோட்டு நிறுத்தும் அதிகாரம், பொதுசெயலர் சசிகலாவிற்கு மட்டுமே உண்டு.

நேற்று முளைத்த காளான்கள், சுயநலவாதிகள் போன்றோருக்கெல்லாம், பதில் கூற வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு மடியில் கனம் உள்ளதால் பயப்படுகின்றனர். சிலர் எங்களை ஒதுக்கி வைத்தால், சுதந்திரமாக செயல்பட லாம் என, நினைக்கின்றனர். தவறு செய்பவர் கள் திருந்துவர் அல்லது திருத்தப்படுவர். இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manasakshi - chennai,இந்தியா
13-ஆக-201706:22:39 IST Report Abuse
manasakshi ஆபரேஷன் எங்கே ? கூவத்தூரிலா, இல்லை அப்போலோவிலா? சொன்னால் , வோட்டு போட்ட முட்டாளாகிய தமிழ்மக்கள் நாங்கள் வேடிக்கை பார்க்க தயார். நடத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
10-ஆக-201722:35:10 IST Report Abuse
appaavi கொள்ளை அடித்தாலும் ஒத்துமையா அடிங்க...
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
10-ஆக-201721:45:19 IST Report Abuse
Nakkal Nadhamuni //பதவியில் இருப்பவர்கள் சுருட்டி கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர்// உங்களுக்கு தெரியாததா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X