நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல்

சென்னை:''தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

 நம்பிக்கையில்லா தீர்மானம், No confidence,ஸ்டாலின், Stalin, மிரட்டல்,Intimidation,சென்னை,Chennai, தமிழக அரசு,Tamil Nadu Government,  தி.மு.க.  செயல் தலைவர் ஸ்டாலின் ,DMK executive leader stalin, முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy,தமிழக மக்கள், Tamilnadu People, சட்டசபை, Assembly, பட்டு வேட்டி பரிசு, Silk Vatti Gift,silk dhothi Gift,  முரசொலி பவள விழா, Murasoli Pawala Festival,Murasoli Coral festival, அ.தி.மு.க., AIADMK,

தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும்,ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்த திலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய அசாதாரண சூழலில், தேவைப்பட் டால், அரசுக்கு எதிராக, சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரு வோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பட்டு வேட்டி பரிசு:முரசொலி பவள விழாவை முன்னிட்டு, தி.மு.க.,வின், 65 மாவட்டச் செயலர் களுக்கு, பட்டு வேட்டி, கடிகாரம் பரிசு வழங்கி, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கவுர வித்தார். முரசொலி பவள விழாவை ஒட்டி, சென் னை யில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன. அதில், பங் கேற்பதற்காக, 65 மாவட்டசெயலர் களும், சென்னையில் முகாமிட்டி ருந்தனர். அவர் கள் எல்லாரும், நேற்று காலை, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு அழைக்கப் பட்டனர்.

அ.தி.மு.க., ஆட்சியின் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்கப்படும் என, மாவட்டச் செயலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அரசியல் தொடர்பாக, எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. முரசொலி பவள விழா காட்சி அரங்கம் திறப்பு, பத்திரிகை ஆசிரியர் கள் வாழ்த்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை, சிறப்பாக நடத்தி கொடுத்த மாவட்டச் செயலர் களுக்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 65 மாவட்டச் செயலர்களுக்கும், பட்டு வேட்டி, கடிகாரங்களை

Advertisement

பரிசாக, ஸ்டாலின்வழங்கினார்.

'ஆட்சி மாற்றம் நிச்சயம்!':''தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை, ஸ்டாலின் நினைத்தால் கொண்டு வர முடியும்,'' என, தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை, அறிவால யத்தில் நடந்த, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், துரை முருகன் பேசியதாவது:முரசொலி பவள விழா வில், பத்திரிகை ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினர். தேர்தல் நேரத்தில், தி.மு.க.,வை தாக்கி எழுதிய பத்திரிகைகள் எல்லாம், கருணாநிதி, ஸ்டாலினை பாராட்டி பேசியதை படிக்கும் போது, எனக்கு பெருமையாக இருக்கிறது. இது, ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி.

இனிமேல், ஸ்டாலினுக்கு கிடைக்கும் வெற்றி அனைத்தும் எளிதாக அமைந்து விடும்;அவரை யாராலும் வீழ்த்த முடியாது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி, 16 அடி தான் பாயும் என்பர். ஆனால், ஸ்டாலினோ, 64 அடி பாய்ந்து விட்டார்.

எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற் றத்தை, ஸ்டாலின் நினைத்தால் கொண்டு வர முடியும்; அவரால் முடியாதது ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
12-ஆக-201722:49:23 IST Report Abuse

adalarasanநிச்சயமாக கொண்டு வாருங்கள் அப்பொழுதுதான் உங்களின் சூழ்ச்சியை தோற்கடிக்க, மூன்று, ஆளும் கட்சி பிரிவுகளும் வொன்று சேருவார்கள்

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
12-ஆக-201721:34:52 IST Report Abuse

ezhumalaiyaanஎப்பொழுதுதான் இந்த ஜால்ரா சத்தத்தை நிறுத்துவார்கள்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
12-ஆக-201716:30:42 IST Report Abuse

Balajiஉண்மையில் இவரது திறமையின்மையை திமுகவினரே பலர் இவரை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்........ அதை மறக்கடிப்பதற்காக தம்பிதுரையை வைத்து எதையோ பினாத்த வைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை....... அதிமுக பல அணிகளாக சிதறிக்கிடக்கும் இந்த சூழலையும் பயன்படுத்த தெரியாமல் செயலிழந்து கிடக்கிறது திமுக என்பது தான் இன்றைய நிதர்சனம்.............

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஆக-201715:20:19 IST Report Abuse

Endrum Indianஇப்போ அ.தி.மு.க எல்லோரும் ஒருங்கிணைந்த பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் என்ன??? கொண்டு வராவிட்டால் என்ன??? சட்டு புட்டுன்னு இந்த காரியத்தை செய்தால் ஆட்சியை கவிழ்க்கலாம், இல்லையென்றால் நீங்கள் செய்வது காமெடியில் தான் முடியும்.

Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
12-ஆக-201709:53:13 IST Report Abuse

Santhosh Gopalஇங்க ஒரு கூமுட்டை கூறுகிறார், திமுகவின் 89 MLA க்கள் ராஜினாமா செய்தால் உடனே கவர்னர் ஆட்சி கலைப்புக்கு பரிந்துரை செய்வாராம், பிறகு ஆட்சி கலைந்து தேர்தல் வந்து திமுக வெற்றி பெற்றுவிடுமாம். மறை கழண்டுவிட்டதா? அப்படி எதிர் கட்சி MLA க்கள் ராஜினாமா செய்வதால் ஆட்சி கவிழும் என்றால் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் ஆட்சி நடத்தமுடியாது. எதிர் கட்சி MLA க்கள் ராஜினாமா செய்து ஆட்சியை கவிழ்த்துவிடுவார்களே, அப்புறம் எப்படி ஆளும் கட்சி 5 வருடங்களை பூர்த்தி செய்கிறது? சரி அவர் கூற்று படியே ஆட்சி கலைகிறது என்றே வைத்து கொள்வோம், மறுபடியும் சுடலை 160 தொகுதிகளில் ஜெயித்து முதல்வராகிறார், அதிமுக 70 தொகுதிகளில் ஜெயிக்கிறது. பிறகு என்ன நடக்கும், அதிமுகவின் 70 MLA க்கள் ராஜினாமா செய்தால் உடனே சுடலை அரசு கவிழ்ந்துவிடுமா? செத்து செத்து விளையாடும் விளையாட்டா? அப்படி எதிர் கட்சி MLA க்கள் ராஜினாமா செய்தால் ஆட்சி கவிழும் என்றால், இந்நேரம் எதிர் கட்சிகள் அமைதியாக இருக்காது. எதிர் கட்சி MLA க்கள் ராஜினாமா செய்வது மிகவும் சுலபம். ஆட்சியை கலைப்பது மிகவும் சுலபம். இது கூட தெரியாதா?

Rate this:
Kabilan E - Chennai,இந்தியா
12-ஆக-201710:54:39 IST Report Abuse

Kabilan Eஎங்களுக்கு திருட்டு, கொலை, கொள்ளை தான் தெரியும் அது தான் எங்கள் திருடர்கள் முன்னேற்ற கழகம் .......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஆக-201709:03:24 IST Report Abuse

Srinivasan Kannaiyaதந்தையை போல கண்ணாடி அணிந்ததால் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆவல் பெருகிவிட்டது,..,

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-201709:35:42 IST Report Abuse

Kasimani Baskaranஎப்பொழுதும் இருட்டுக்குள் இருக்கும் எண்ணம் படைத்தவர்களிடம் தீய சக்திகளே வாசம் செய்யும்.....

Rate this:
Kabilan E - Chennai,இந்தியா
12-ஆக-201710:56:21 IST Report Abuse

Kabilan Eசெயல்படாத தலைவர் செயல் இழந்த தலைவரின் கண்ணாடியை பயன் படுத்துகிறார் என்றால் செயல் இழந்த தலைவரின் நிலைமை என்னவோ?...

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
12-ஆக-201711:19:09 IST Report Abuse

பலராமன்ஸ்டாலின் கண் சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்...எனவே கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார்....ஒருவர் உடல் நிலையை கேலி செய்ய கூடாது.......

Rate this:
Balaji - Khaithan,குவைத்
12-ஆக-201716:31:55 IST Report Abuse

Balajiஇன்னும் மஞ்சள் துண்டு பாக்கியிருக்கிறது......... அதுவும் வந்தால் தான் முதல்வர் கனவெல்லாம் நினைவேறும் போல..............

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-201708:09:16 IST Report Abuse

Kasimani Baskaranஸ்டாலின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டால் அது முழுஅளவில் வெற்றி பெறும்... மற்றப்படி திமுக அடிமைகளே கூட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தருவார்களா என்பதே சந்தேகம்.. எதற்கும் குட்டிச்செட்டியாருடன் லண்டனுக்கு ஓட தயாராக இருப்பது நல்லது...

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
12-ஆக-201707:24:16 IST Report Abuse

அம்பி ஐயர்ஆட்சி மாற்றம் நிச்சயம்':''தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை, ஸ்டாலின் நினைத்தால் கொண்டு வர முடியும்,'' ஆக... தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு ஸ்டாலின் விரும்பவில்லை.... முயற்சிக்கவில்லை..... அதுதான் நாற்பது சதவீத கமிஷன் வந்துகொண்டிருக்கிறதே.... ஆளுங்கட்சியிடமிருந்து..... ஆட்சியில இல்லாத போதே இவ்வளவு கிடைக்குதுன்னா.... ஆட்சியில இருந்தால் எவ்வளவு கிடைக்கும்....???

Rate this:
LAX - Trichy,இந்தியா
12-ஆக-201707:12:47 IST Report Abuse

LAXபார்றா.. படத்துல (ஃபோட்டோவுல) பாத்தா பவர் ஸ்டாரையே மிஞ்சிருவாரு போல..

Rate this:
BMV - kallai,இந்தியா
12-ஆக-201706:59:58 IST Report Abuse

BMVஒவ்வொரு மாதமும் இப்படி எதாவது different ஆ செஞ்சிதான் lifeஅ lengthஆ ஓட்டனும்... தமழ்நாடு இப்போது "நம்பிக்கையில்லா 420" களிடம்...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement