அரசுக்கு எதிராக பூச்சாண்டி காட்டும் தினகரன்'420'; முதல்வர் பழனிசாமி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பூச்சாண்டி,boogeyman, தினகரன் 420, Dinakaran 420, அ.தி.மு.க அரசு,ADMK government, ஸ்டாலின்,Stalin, நம்பிக்கை யில்லா தீர்மானம் ,No confidence ,டில்லி, Delhi,முதல்வர் பழனிசாமி,Chief minister Palanisamy, நீட் தேர்வு , NEET Exam, தமிழகம், Tamilnadu, சென்னை, Chennai, தேர்தல் கமிஷன், Election Commission, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy speaker Thambidurai,, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan,

''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

பூச்சாண்டி,boogeyman, தினகரன் 420, Dinakaran 420, அ.தி.மு.க அரசு,ADMK government, ஸ்டாலின்,Stalin, நம்பிக்கை யில்லா தீர்மானம் ,No confidence ,டில்லி, Delhi,முதல்வர் பழனிசாமி,Chief minister Palanisamy, நீட் தேர்வு , NEET Exam, தமிழகம், Tamilnadu, சென்னை, Chennai, தேர்தல் கமிஷன், Election Commission, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy speaker Thambidurai,, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan,

சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச்

செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட விரோத மானது; அவர் வெளியிடும் அறிவிப்பு கள், அ.தி. மு.க., தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத் தாது' என,தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது, தினகரன் அணியி னரிடம், கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக, முதல் வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை, தினகரன் கடுமையாக சாடினார்.

'நீங்க தான்420


அ.தி.மு.க., பெயரை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ள நிலையில், கட்சி யின், 'லெட்டர் பேடில்' தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். இந்த மோசடி குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் செய்தால், பதவி பறி போய் விடும். 'தீர்மானத்தில் கையெழுத்திட் டுள்ள, முதல்வர் உட்பட அனைவரும், 420' என்றும், காட்டமாக விமர்சித்தார்.

மோசடி, ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனை சட்டத் தின், 420வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்வது வழக்கம். அதனால், மோசடி

Advertisement

பேர்வழிகள், '420' என, அழைக்கப்படுகின்றனர். எனவே, தினகரனின் விமர்சனம், அரசியல் வட்டாரத்தில், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற் காக, முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம், டில்லி சென்றார். டில்லியில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனி ருந்தனர். பிரதமரிடம் பேசிய முதல்வர், 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

நம்பிக்கை


பிரதமரை சந்தித்த பின், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:

தினகரன், '420' என, குறிப்பிட்டது, அவருக்கு தான் பொருந்தும். ஏனென்றால், மூன்று மாத நிலையை, நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதற்கு யார் பொருத்தம் என்றால், அவர் தான் பொருத் தமாக இருப்பார். அ.தி.மு.க., அணிகள் இணைப்பு குறித்து, எங்கள் தரப்பிலும் சரி, அவர்கள் தரப்பிலும் சரி, பேச்சு நடைபெற வில்லை; இணையும் என, நம்புகிறோம். ஸ்டாலின், ஏற்கனவே எங்கள் மீது, நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தார்; அதில் வெற்றி பெற்றோம். பின், சபாநாயகர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றோம். இப்போதும் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், நிச்சயமாக அதிக ஓட்டுகளில், நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (72)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
12-ஆக-201723:53:56 IST Report Abuse

POLLACHI JEAYASELVAN  sanjose USAஇந்த 420 களுக்கு ஓட்டு போட்டவர்கள் ....?இன்று வரை இந்த தமிழ்நாட்டு 420 க்களை சந்தித்து மகிழும் டெல்லி 420 க்கள் ....?மொத்தத்தில் எனது காந்தி தேசம் 420 க்களின் தேசமாகி , நாசமாகி போய் விட்டதே .... வெட்கக்கேடு ...

Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
12-ஆக-201718:28:41 IST Report Abuse

SaiBabaஉண்மையான தகுதியுள்ள தியாகம் நிறைந்த தலைவர்களை காண மனம் தவிக்கிறது. இந்த மூஞ்சிகளையெல்லாம் பார்க்கக்கூட பிடிக்கவில்லை.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-ஆக-201711:04:15 IST Report Abuse

Panneerselvam Chinnasamyயார் 420 என்று பட்டிமன்றம் வைத்தால் என்ன ... தினகரன் அணியில் , புகழேந்தி, நாஞ்சில் சம்பத், வெற்றிவேல், எடப்பாடி அணியில் ஜெயக்குமார்,வளர்மதி ,செங்கோட்டை... நடுவராக சபாநாயகர் தனபால்...(இதையாவது கொஞ்சம் பயம் இல்லாமல் செய்வாரா தனபால் ?)

Rate this:
vidhuran - dubai,இந்தியா
12-ஆக-201713:18:38 IST Report Abuse

vidhuranஎன்னது? பட்டி மன்றமா? அதுவும் தனபால் நடுவராகவா? அவரை ஒரு வழி பண்ணிவிடுவது என்ற எண்ணமா சின்னசாமி? இந்த லாவணிக்குள் எங்கு செல்வது என்று அறியாமல் இருக்கும் அவரை போயி எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள்? இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் நம் நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியை போடலாம். அவரும் கொஞ்ச நேரம் கலைஞர் புகழ் பாடிவிட்டு தமாஷாக எதையாவது சொல்லி (சொல்வதாக நினைத்துக் கொண்டு)பொழுது போக்குவார்...

Rate this:
rajangam ganesan - lalgudi,இந்தியா
12-ஆக-201716:32:25 IST Report Abuse

rajangam ganesanகட்டுமரம் தான் 420...

Rate this:
sankar - trichy,இந்தியா
12-ஆக-201717:39:42 IST Report Abuse

sankarபல மாவட்டம் வட்டம் ஒன்றிய செயலாளர்களை 420 ஆக்கியது , தன் குடும்பத்தையே 420 ஆக்கியது . போன்ற பல சாதனைகளை செய்தது கட்டுமரம் . அதே பாணியில் வந்து அவர்களை ஜெயிக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு சுருட்டியது அதிமுக 420 ரஜினி கமல் தான் அடுத்த சாய்ஸ் . சீமான் தனி தமிழ்நாடு யோசிக்கும் தீவிரவாதி அதனால் யாழ்ப்பாணத்துக்கு எட்டப்பட்ட நிலைமை தமிழ் நாட்டுக்கும் எட்டப்படும் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத எல்லோரையும் புறக்கணியுங்கள்...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஆக-201720:39:04 IST Report Abuse

dandyஇன்னும் 100 ஆண்டுகளில் தமிழா நாடு (என்ஜின் இல்லாத கார் மாதிரி ) குடிக்க தண்ணீரை கூட இறக்குமதி செய்ய நேரிடும் ..500 வருடங்களில் காடு ,,ஆறுகள் எல்லாம் அளித்து பிளாட் (செம்மொழி ) போட்டு விற்றதனால் பாலை வானம் ஆகிவிடும் ..இதைத்தான் இந்த ஜீமான் தொண்டை கிழிய சொல்கிறார் ..அனால் எங்களுக்கு பிலிம் ஸ்டார் தான் தேவை ...இந்திக்காரனுக்கு அடிமையாக இருப்பதில் இன்பம்...

Rate this:
mangaibagan - bangalore,இந்தியா
12-ஆக-201711:03:22 IST Report Abuse

mangaibaganஎனக்குத் தெரிந்தவரை தினகரன் கட்சியில் நிலைப்பார். இரட்டை இலை இருந்தாலும் இல்லாவிட்டாலும்தான். அதிமுக தொண்டர்கள் விரும்புவது தனித்தன்மை உள்ள தலைவரைத்தான். அது சசிகலா குடும்பத்தவராக இருந்தாலும் சரி மற்றவர்களாக இருந்தாலும் சரி. தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை சசிகலா குடும்பத்தவரே அதிமுக தொண்டர்களிடம் ஓரளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒரு தேசிய கட்சி என்னதான் அதிமுகவில் தனக்கு சாதகமான தலைமையை உருவாக்க முயன்றாலும் அதிலிருந்து இன்னொரு அணி உருவாவதை தடுக்க முடியாது. இன்னொரு கட்சிக்கு காவடி தூக்குவதை எந்தவொரு அதிமுக தொண்டனும் விரும்ப மாட்டான். அவன் வேறு கட்சிக்கும் செல்ல மாட்டான். ஒரு வேளை தினகரன் வழக்குகளில் சிக்கி (சிக்க வைக்கப்பட்டு) சிறை சென்றால் இன்னொருவர் உருவாவார். எந்த வினைக்கும் அதற்கு சமமானதும் எதிர் திசையில் உள்ளதுமான எதிர் வினை கண்டிப்பாக உண்டு.

Rate this:
sankar - trichy,இந்தியா
12-ஆக-201717:40:44 IST Report Abuse

sankarசசிகலா குடுபத்துக்கு அதிமுகவினர் ஓட்டளிக்க மாட்டார் பன்னீர் தான் பெஸ்ட் சாய்ஸ்...

Rate this:
SHANMUGAM - salem,இந்தியா
12-ஆக-201721:32:25 IST Report Abuse

SHANMUGAMசரவணன் சார் நீங்க பெங்களூருல இருக்குறதால கொஞ்சம் கொஞ்சம் கம்மியாத்தான் தெரிஞ்சிருக்கும் நீங்க தமிழ் நாட்டுல வந்து பாருங்க உங்க சசிகலா குடும்பத்த எப்படி காரி துப்புறாங்கன்னு...

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
12-ஆக-201710:49:04 IST Report Abuse

Stalinகருமம் உங்கள ஆட்சி செய்ய வைத்த இந்த மக்களை எவ்வளோ தண்டித்தலும் தகும்

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
12-ஆக-201710:46:47 IST Report Abuse

Barathanஒருவிதத்தில் பார்த்தால் அண்ணாதிமுக பிரமுகர்கள்அனைவரும், ஜெயா, சசி, தினகரன், திவாகரன் .......... சேர்த்து எல்லாமே 420 கள்தான்..

Rate this:
manasakshi - chennai,இந்தியா
12-ஆக-201710:44:40 IST Report Abuse

manasakshiஒரு சின்ன சந்தேகம் . இவர்கள் ஒருவரை ஒருவர் 420 என்று சொல்லி கொள்கிறார்களே. இவர்கள் இரண்டு பேருக்கும் ஒருவர் செய்த ஊழல் வண்டவாளம் எல்லாம் மற்றவர்க்கு நன்றாக தெரியும் . அப்படி இருந்தும் ஒன்று கூட ஆதாரத்துடன் மக்களுக்கு சொல்ல மாட்டேன் என்கிறார்களே . இதிலே மட்டும் எப்படி ஒற்றுமையை கடைபிடிக்கிறார்களோ தெரிய வில்லை . மக்களுக்கு இந்த சிறிய உதவி கூட செய்ய இவர்கள் தயாராக இல்லை. இந்த மூணு கோஷ்டியும் இது வரை பண்ண தில்லு முல்லுகள், மூன்று பேருக்கும் நன்றாக தெரிந்திருக்கும் . இந்த கொழா அடி சண்டையில் கூட , மத்தவர் ஊழல் வெளியில் விட மாட்டேன் என்கிறார்கள் . இந்த ஒற்றுமை எல்லா அரசியல் கட்சியிலயும் பார்க்கலாம் . மக்கள் தான் வடிகட்டின முட்டாள்கள் .

Rate this:
kandhan. - chennai,இந்தியா
12-ஆக-201713:22:20 IST Report Abuse

kandhan.மக்களை முட்டாள்களாக்கி வோட்டு பெற்ற அம்மையாரையே நீதி மன்றம் ஊழல்வாதி அதிலும் முதன்மை குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்தபிறகுகூட இந்த ஆட்சியை எப்படி நடத்தலாம் ?? இதற்க்கு முறையாக சட்டத்தில் இடம் இருக்கிறதா ????நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற இந்த கழகம் (அம்மையாரும் கழக அமைச்சர்களும் சேர்ந்து செய்த ஊழல் ) எப்படி மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் மக்களே சிந்தியுங்கள் ????தமிழகத்தில் ஒரு அசாராதாரண சூழல் நடப்பதற்கு யார் காரணம் ????வோட்டு போட்ட மக்கள்தான் காரணம் இப்போது வந்து குறை கூறுவது நியாயமா ????இன்னும் 4 வருடம் தண்டனை அனுபவிக்கவேண்டியதுதான் கந்தன் சென்னை...

Rate this:
Patriot - Chennai,இந்தியா
12-ஆக-201720:05:48 IST Report Abuse

Patriotதிரும்ப அழைக்கும் சட்டமும், REFERENDUM மும் வேண்டும் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட வேண்டும்....

Rate this:
Patriot - Chennai,இந்தியா
12-ஆக-201721:03:33 IST Report Abuse

Patriotஇதெற்கெல்லாம் காரணம் இவர்களுக்கு எந்த தகுதி/ பொறுப்பு இல்லாமல் இருக்கலாம் என்ற கையாலாகாத சட்டத்தை இயற்றியவர்களே...

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
12-ஆக-201710:00:08 IST Report Abuse

Indhuindianமழைக்குக்கூட கல்லூரி பக்கம் ஒதுங்காமல் பணம் அல்லது ஆட்சி பலத்தினால் வாங்கப்பட்ட டாக்டர் பட்டத்தையும் எமெர்ஜென்சியில் ஜெயிலில் அடைக்கப்பட்டதால் (தவராககூட இருக்கலாம்) மிசா என்ற பட்டத்தையும் போட்டுக்கொள்ளும்போது சகா கட்சி உறுப்பினர்கள் அல்லது தலைவர்களால் கொடுப்பதும் 420 பட்டத்தையும் பெயருக்கு முன்னாள் போட்டுக்கொள்வதுதான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் தயவுசெய்து போட்டுகொண்டு அக்ஷகு பாருங்கள் தலைவர்களே

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
12-ஆக-201709:21:56 IST Report Abuse

Appanஅன்று காமராஜ் இந்தியாவின் பிரதான மந்திரி பதவி கைவிட்டார் அதன் தீமை தமிழ் நாடு இன்று அனுபவிக்கிறது சசிகலா செல்வி ஜெ ஜெ இறந்த இரவில் முதல்வர் பதவியில் வந்திருக்க வேண்டும் சசிகலா செய்த தவறு இன்று எம்.ஜி.ஆர் செல்வி ஜெ ஜெ கட்சி அழிந்துவிட்டது.....Kowsik Rishi - Chennai,இந்தியா..........இப்படி ஒரு கமன்ட் போட்டவர் காமராஜரையும் சசிகலாவையும் ஒண்ணுனு பார்க்கிறார்..பணம் என்னவெல்லாம் செய்யும் என்பது இந்த கமெண்டில் தெரிகிறது.. ஒரு மாபியா குழு தலைவர் சசிகலாவை ,. தேச தியாகி காமராஜுடன் சேர்த்துப் பேசுவது ஏற்று கொள்ளமுடியாது.. காமராஜ் சாகும்போது ஒரு சர்ட், வேட்டி மட்டும் இருந்ததது. பேங்கில் கொஞ்ச தொகையை இருந்தது.. இவரை மாபியா சசிகலா உடன் கம்பேர் பண்ண எப்படி என்னும் வந்தது. எல்லாம் பணத்தால்..

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
12-ஆக-201711:36:33 IST Report Abuse

பலராமன்கொஞ்ச தொகை இல்லை சாமி 135 ரூபாய் என்று தகவல்....ஆறு அல்லது பத்து ஜோடி வேஷ்டி சட்டை...ஒரு ஷேவிங் செட், ஒரு குக்கர்) அவ்வளவுதான் அவரிடம் இருந்த சொத்து.........

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
12-ஆக-201715:40:27 IST Report Abuse

Appanநன்றி.......

Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
12-ஆக-201709:09:32 IST Report Abuse

Ramakrishnan Natesanஇது கொஞ்சம் ஓவர் தான் தினகரன் அறிமுகப்படுத்துமுன்னர் வரை எடப்பாடி யாரு என்றே தெரியாது தீட்டிய மரத்தை கூர் பார்க்கிறார் பலன் கிடைக்கும் என எண்ணுகிறேன்.( செந்தில் யானைக்கு ஸ்பூனில் பால் கொடுத்த கதை தான் செந்திலுக்கு கால் போனது எடபாடிக்கு ????)

Rate this:
Balaji - Khaithan,குவைத்
12-ஆக-201712:04:35 IST Report Abuse

Balajiஎப்படித்தான் மாபியா கூட்டத்துக்கு உங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கவேண்டும் என்று தோன்றுகிறதோ தெரியவில்லை..............

Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
12-ஆக-201713:22:00 IST Report Abuse

Ramakrishnan Natesanஇப்படித்தான்...

Rate this:
sankar - trichy,இந்தியா
12-ஆக-201717:43:26 IST Report Abuse

sankarஜெயலலிதாவுக்கு சசிகலா தோரகம் செய்தார் தினகரனுக்கு எடப்பாடி ஆப்பு வைக்கிறார் . நியாயமாக பார்த்தால் ஜெயா விரும்பிய அடுத்த கட்ட தலைவர் பன்னீர் செல்வம் தான் . அவர் தான் அதிமுகவின் தலைவராக வருவார் வர வேண்டும்...

Rate this:
Patriot - Chennai,இந்தியா
12-ஆக-201720:08:40 IST Report Abuse

Patriotஇதுதான் அரசியல் என்பது...

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement