காலத்தை உள்வாங்கும் ஜி.எஸ்.டி., பிள்ளையார்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலத்தை உள்வாங்கும் ஜி.எஸ்.டி., பிள்ளையார்!

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (5)
Advertisement
ஜி.எஸ்.டி.,GST, பிள்ளையார், Ganapathy, ராஜா, Raja, சமூகம்,Community, ஜி.எஸ்.டி.விநாயகர், GST Vinayagar, சுனாமி, Tsunami, கேசரி, Kesari, வெல்லம், Jaggery,நிலக்கடலை ,groundnut, தேன்மெழுகு,Bees wax, சோப்பு, Soap, ஷாக்பீஸ் ,chalk piece மாத்திரை,Tablet, தங்கம் , Gold, நவதானியம், nine kinds of grain, கருணை,grace, யோகா, Yoga,தேங்காய், Coconut, சர்க்கரைவள்ளி,Sugar beet, மரவள்ளி,cassava, நாகம், serpent,மரம் நடும் விநாயகர்,tree planting Vinayagar,

சமூகத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் உடனடியாக கலை வடிவங்கள் உள்வாங்குகின்றன. இப்படி கலைகளில் புகும் புதுமைகள், என்றுமே அதன் மீதான ஈர்ப்பை ஒருபடி உயர்த்திக்கொண்டுதான் செல்கிறது என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

அதேபோல், காலத்தையும் சூழலையும் நுட்பமாக உள்வாங்கி அதை கலையில் புகுத்தும் படைப்பாளர்கள் மட்டுமே அதில் ஜொலிக்க முடியும். இதை நிரூபித்து இருக்கிறார் குனியமுத்துார் பகுதியைச் சேர்ந்த ராஜா. இந்தமுறை இவர் கையில் எடுத்திருப்பது ஜி.எஸ்.டி.,யையும் விநாயகரையும்!

குட்டீஸ்கள் முதல் அனைவருக்கும் பிடித்த பிள்ளையாரை பலவடிங்களில், பல வகைகளில் இதுவரை பார்த்திருப்போம்; ரசித்திருப்போம். ஆனால், சுனாமியாக, மரம் நடுபவராக, நாகமாக, கேசரி, வெல்லம், நிலக்கடலை இப்படியாக மாறிய விநாயகரை கேள்விப்பட்டிப்பீர்களா? இதுபோன்று 15க்கும் மேற்பட்ட புது வடிவ பிள்ளையார்களை வடிவமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இவர் நம்மிடம் பகிர்ந்தவை...

சிறு வயதில் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து விளையாட்டுத்தனமாக எதோ உருவத்தை வடிமைத்துக் கொண்டிருப்போம். உண்மையாக படைப்புத்திறன் துவங்குவது அங்கிருந்து தான். பலர் அதை பாதியோடு நிறுத்தி விடுகின்றனர். எனக்கு அந்தப்பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

எதையுமே வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம். புதுசு புதுசாக ஏதோவடிவில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். தேன்மெழுகு, சோப்பு, சாக்ஸ்பீஸ், மாத்திரை, தங்கம் என, கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமீபத்திய நிகழ்வுகள், அன்றைய சிறப்பு தினங்கள், பண்டிகைகளுக்கேற்ப நானே ஒரு தலைப்பில் கலைப்பொருட்களை உருவாக்கி விடுவேன்.

அப்படி உருவானதுதான் பிள்ளையார் சிலைகள். வரும் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலவித பிள்ளையார்களை உருவாக்கியுள்ளேன். வேர்க்கடலை, எலி, மங்களம், நவதானியம், கேசரி, கருணை, சுனாமி, யோகா, தேங்காய், சர்க்கரைவள்ளி, மரவள்ளி, நாகம், மரம் நடும் விநாயகர்ணு இதுவரை இந்த வடிவில் பிள்ளையாரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், ஜி.எஸ்.டி., பிள்ளையாரும் உண்டு. உருண்டை வெல்லம், மெழுகு மற்றும் எள்ளை பயன்படுத்தியும் விநாயகரை வடிவமைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Unmai vilambi, chennai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-201722:00:16 IST Report Abuse
Unmai vilambi, chennai பாவம் இந்து மதம். இந்துவே இந்து மதத்தை கேவலப்படுத்தறான். இதுதான் இந்து மதத்திற்கும் மற்ற மதத்திற்கும் உள்ள வித்தியாசம். புதுமை என்ற பெயரில்இந்துகடவுளை விரும்பத்தகாத வடிவத்தில் சித்தரிக்கும் இத்தகைய நபர்களை கேட்பாரற்று கிடக்கும் மதம் நமது இந்துமதம். இது ஒரு இந்துவின் மனக்குமுறல்.
Rate this:
Share this comment
Cancel
12-ஆக-201716:00:33 IST Report Abuse
அப்பாவி பிள்ளையாரை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ பண்ணுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Jabberwock - Chennai,இந்தியா
12-ஆக-201714:36:12 IST Report Abuse
Jabberwock கடைசியில் பிள்ளையார் கழை கூத்தாடி ஆகி விட்டாரா என்ன?????????? அவர் ஒன்னும் சிவாஜியோ , கமலஹாசனோ அல்ல .பலவித வேடங்களில் வந்து நடித்து காட்ட. கலைஞர்களுக்கு தேவை கற்பனை திறன். சினிமாத்தனம் ,போலித்தனம்தான் தெரிகிறது. கலையும் தெரியவில்லை ,பக்தியும் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை