வாலிபர் கொலை: 'நண்பன்' கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை: 'நண்பன்' கைது

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலையில், தனியார் மில் டிரைவரை கொலை செய்த நண்பன், கைது செய்யப்பட்டான். குடிபோதை தகராறே, கொலைக்கு காரணம் என, போலீசார் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அந்தியூரைச் சேர்ந்தவர், அரவிந்தன், 19; தனியார் மில் டிரைவர். நேற்றுமுன்தினம் அதிகாலை, அந்தியூர் அருகே தலையில் தாக்கப்பட்ட நிலையில், பிணமாகக் கிடந்தார். உடுமலை போலீசார் விசாரித்தனர். இந்த கொலை தொடர்பாக, அதே ஊரைச் சேர்ந்த ஜெயசிம்மன், 21, என்பவன் கைது செய்யப்பட்டான்.
போலீசார் கூறுகையில், 'அரவிந்தனும், ஜெயசிம்மனும் நண்பர்கள். இருவரும், கடந்த 9ம் தேதி இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், அரவிந்தனை தலையில் கல்லால் தாக்கிவிட்டு, ஜெயசிம்மன் தப்பிச் சென்றுள்ளான். நேற்று, வாகனத்தணிக்கையின் போது, சின்னவீரன்பட்டியில் ஜெயசிம்மன் பிடிபட்டான். குடிபோதையில், அரவிந்தனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை