விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுஐ.ஜி., தலைமையில் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஐ.ஜி., தலைமையில், நேற்று கோவையில் நடந்தது; எட்டு மாவட்ட எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.நாடு முழுவதும் வரும், 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட உள்ள இடங்கள், எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஐ.ஜி., அலுவலகத்தில், ஐ.ஜி., பாரி தலைமையில், நேற்று நடந்தது.கூட்டத்தில், 'போலீஸ் அனுமதியில்லாமல் எந்த இடத்திலும் சிலைகள் வைக்க கூடாது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், பிற மதத்தினர் புண்படும் வகையிலான சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது. ஊர்வலத்தை போலீசார் அனுமதித்த, குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். சிலைகளின் எண்ணிக்கை, கடந்தாண்டை காட்டிலும் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்' என அறிவுரை அளிக்கப்பட்டது.பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வரும், 27 மற்றும், 29ம் தேதிகளில் நடக்க உள்ள விசர்ஜன ஊர்வலம் தொடர்பாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.இதேபோல், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை