சிறுவன் உயிரிழந்த விவகாரம்:மருத்துவமனை முற்றுகை| Dinamalar

சிறுவன் உயிரிழந்த விவகாரம்:மருத்துவமனை முற்றுகை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் சிகிச்சைக்கு வந்த சிறுவன் உயிரிழந்ததால், ஆவேசமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர், வீரபாண்டி - கிருஷ்ணாநகரை சேர்ந்த சதாசிவம்- --மகன் ரித்தீஷ்குமார், 5. ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8ம் தேதி, காய்ச்சலுக்கு, தாராபுரம் ரோட்டில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினான். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நேற்று காலை அவனது பெற்றோர், அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சையில், ரித்தீஷ்குமார் உயிரிழந்தான்.இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவமனை முன், திரண்டனர். தவறான சிகிச்சையால் சிறுவன் இறந்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தாராபுரம் ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். ஆவேசமடைந்த ஒரு பெண் மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை கல் வீசி உடைத்தார்.நிலைமை மோசமானதால், அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். மூன்று மணி நேரம், மருத்துவமனை நிர்வாகத்துடன் நடந்த பேச்சுக்கு பின், சிறுவனின் பெற்றோர் சமாதானமடைந்து உடலை பெற்று சென்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.