ஆதிவாசிகள் பிரச்னை தீருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிவாசிகள் பிரச்னை தீருமா?

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்:கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் அருகே, கோழிகண்டி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 13 குடும்பங்கள் உள்ளன. இவர்களில், பெரும்பாலனவர்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர்.குடிநீர், நடைபாதை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. இதனால், அரை கி.மீ., துாரம் நடந்து சென்று, தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இரவில், வீடுகளில் வெளிச்சத்துக்கு இன்றும் மண்ணெண்ணெய் விளக்கை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கு அமைக்கப்பட்ட, சோலார் தெரு விளக்குகள் முறையான பராமரிப்பு இல்லாததால், எரிவதில்லை.
'இங்குள்ள குடிசைகளுக்கு மாற்றாக, தொகுப்பு வீடுகளை கட்டி தர வேண்டும்' என, இவர்கள், சுதந்திரம் வாங்கிய காலம் தொட்டு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது, பருவமழை பெய்து வருவதால், குடிசைகள் ஒழுகுவதுடன், கடும் குளிரும் ஏற்பட்டுள்ளது. குளிரை போக்க வீடுகளினுள் தீ மூட்டி வசித்து வருகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆதிவாசி மக்களுக்கு, பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அந்த திட்டங்கள், பல ஆதிவாசி கிராமங்களுக்கு இன்னும் சென்றடையவில்லை. இதனால், அவர்கள், இன்றும் குடிசைகளில் அடிப்படை வசதியின்றி வசிக்கும் சூழல் நிழவுகிறது. எனவே, இது போன்ற ஆதிவாசி கிராமங்களை அரசு அதிகாரிகள், ஆய்வு செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை