பாலக்காட்டில் ரோட்டுக்கு வந்த யானைகள்!விரட்டியடிக்க முதுமலை 'கும்கி'கள் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலக்காட்டில் ரோட்டுக்கு வந்த யானைகள்!விரட்டியடிக்க முதுமலை 'கும்கி'கள் பயணம்

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கூடலுார்:பாலக்காட்டில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி வரும், மூன்று காட்டு யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்டும் பணிக்காக, முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் புறப்பட்டு சென்றன.கேரளா மாநிலம், பாலக்காடு வனகோட்டம், மங்கரா அருகேயுள்ள மணியூர் குடியிருப்பு பகுதியில், மூன்று காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, மக்களை அச்சுறுத்தி வருகின்றன. பாலக்காடு - கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில், கோங்காடு பகுதியில் யானைகள் நடமாட்டத்தால், நேற்று வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட, கேரளா வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின. பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றும், அவை காட்டுக்குள் செல்லாமல், மீண்டும் ஊருக்குள் திரும்பின. மூன்று யானைகள் கூட்டாக சுற்றி வருவதால், மயக்க மருந்து ஊசியால் சுட்டுப்பிடிக்கவும் வனத்துறையினர் சிரமப்படுகின்றனர்.யானைகளை பிடித்து, வேறு வனப்பகுதிக்குள் விடும் நடவடிக்கையில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்காக, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து, வசிம், பொம்மன் ஆகிய, 'கும்கி' யானைகள் நிலம்பூர் வழியாக நேற்று பாலக்காடு கொண்டு செல்லப்பட்டன. கால்நடை டாக்டர் விஜயராகவன், வனச்சரகர் ஞானதாஸ் முன்னிலையில், பாகன்கள் யானைகளை அழைத்து சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கேரளா வனத்துறையினர் கேட்டுகொண்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுபடி, காட்டு யானைகளை பிடிக்கும் பணிக்காக இங்கிருந்து இரண்டு, 'கும்கி' யானைகள் அனுப்பப்பட்டுள்ளன' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை