குடியிருப்பு அருகே சிறுத்தை:தொழிலாளருக்கு 'அட்வைஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு அருகே சிறுத்தை:தொழிலாளருக்கு 'அட்வைஸ்'

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார்:பந்தலுார் பஜார் பகுதியை ஒட்டிய, தனியார் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில், சிறுத்தைகள் முகாமிட்டதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.பந்தலுாார் பஜார் பெட்ரோல் பங்க் அருகே ரிச்மவுன்ட் பகுதி உள்ளது. தனியார் எஸ்டேட் பகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகள், எஸ்டேட் மருந்தகம், எஸ்டேட் ஓய்வு விடுதி, மேலாளர் குடியிருப்பு ஆகியவை அமைந்துள்ளன. இங்குள்ள பாறை இடுக்கில் நேற்று முன்தினம் முதல் மாலை, 5:00மணிக்கு இரண்டு குட்டிகளுடன் ஒரு சிறுத்தை முகாமிட்டுள்ளது.
இதனை பார்த்த தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்தனர். வனத்துறையினரை பார்த்த சிறுத்தைகள், அருகிலுள்ள புதர்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை