சுகாதார நிலைய கிணற்றில் சுத்திகரிப்பு பணி :'தினமலர்' செய்தி எதிரொலியால் தூய்மை| Dinamalar

சுகாதார நிலைய கிணற்றில் சுத்திகரிப்பு பணி :'தினமலர்' செய்தி எதிரொலியால் தூய்மை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி கட்டபெட்டு குடிமனை தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு மற்றும் பிரசவத்துடன், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாள்தோறும், நுாற்றுக்கணக்கானோர் சிகிச்சைபெற்று வரும், சுகாதார நிலையத்திற்கு குடிமனை நீர் ஆதாரத்தில் அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து, மாசடைந்த தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இதே போன்று, இப்பகுதியில் உள்ள குடிமனை கிராமத்திற்கும் நிறம் மாறிய மாசுக்கலந்த தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. குளோரின் செய்யப்படாத இத்தண்ணீரை பயன்படுத்துவதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து, இரண்டு நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், கிணற்றை ஆய்வு செய்து, துார்வாரி தண்ணீரை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர். இரண்டு நாட்களாக, கிணறு துார்வாரப்பட்டதுடன், சுற்றுப்புறத்தில் இருந்த முட்புதர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும், கக்குச்சி ஊராட்சி நிர்வாகம் மூலம், தண்ணீர் 'குளோரின்' ேபாடப்பட்டுள்ளது.அதிகாரிகளின் நடவடிக்கையால், குடிமனை கிராம பொதுமக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.