கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில் ஆக.15 ல் 'மருந்து பொங்கல்' நிகழ்ச்சி| Dinamalar

கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில் ஆக.15 ல் 'மருந்து பொங்கல்' நிகழ்ச்சி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோட்டயம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில், மருந்து பொங்கலிடும் நிகழ்ச்சி, ஆக.,15 ல் நடக்கிறது.எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ., கோட்டயத்தில் இருந்து 39 கி.மீ., துாரத்தில், கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டுமனாவில் அமைந்துள்ளது, பகவதி கோயில். கேரளாவின், மிகப்பழமையான கோயில்களில் ஒன்றான இங்கு, ஆடி மாதத்தில் அம்மனின் பிரசாதமாக, விசேஷமாக தயாரான மருந்து வழங்கப்படுகிறது.
பண்டைய மருத்துவ ஓலைச்சுவடிகள் மற்றும் சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு, அம்மன் முன்பு, மந்திரங்கள் முழங்க தயாராக்கப்படும் இந்த மருந்து பிரசாதம், நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.ஆகஸ்ட் 16 வரை, தினமும் காலை 6:30 முதல் காலை 11:30 வரை மருந்து பிரசாதம் வழங்கப்படும். இங்கு, 'மருத்துவ கடவுள்' எனப்படும் தன்வந்திரிக்கு தனிக்கோயில் உள்ளது. தினமும், காலை 6:30 முதல் 9:30 வரை தன்வந்திரி ஹோமமும், மாலை 6:00 முதல் இரவு 7:30 வரை நோய்தீர்க்கும் பூஜையும் நடக்கிறது.வரும் 15 ம் தேதி காலை 9:00 மணிக்கு மருந்து பிரசாதத்தை பயன்படுத்தி, பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. நுாற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, அம்மனை வழிபடுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண்மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் என்.பி.பி.நம்பூதிரி, கோயில் நிர்வாகி ஹரிநம்பூதிரி செய்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு 94460 35100ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.