வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் : நாகர்கோவில் ரயில் தாமதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் : நாகர்கோவில் ரயில் தாமதம்

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் : நாகர்கோவில் ரயில் தாமதம்

வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் 75 நிமிடம் தாமதமாக சென்றது.
வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் 600 மீட்டர் துாரத்தில் 'சிக்னல்' அருகே நேற்றுமுன்தினம் இரவு 1:30 மணிக்கு தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டுச் சென்ற பின், வடமதுரை ஸ்டேஷன் மாஸ்டர் பர்வஸ்குமார் 'பேனல்' போர்டை இயக்கிய போது, ரயில் பாதையை காட்டும் விளக்கில் ஒன்று எரியாமல் இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் ரயில் பாதையை ஆய்வு செய்ததில், தண்டவாள விரிசல் கண்டு
பிடிக்கப்பட்டது.அப்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வாராந்திர சிறப்பு ரயில்,
அய்யலுார் ரயில் நிலையத்தில்75 நிமிடங்கள் நிறுத்தப் பட்டது.திண்டுக்கல்லில் இருந்து வந்த பொறியியல் பிரிவு ஊழியர்கள், தற்காலிகமாக இரும்பு சட்டங்கள் கொண்டு தண்டவாளத்தை உறுதிப்படுத்தினர். இதன் பின்னர் ரயில்கள் ஒவ்வொன்றாக இப்பகுதியை குறைந்த வேகத்தில் கடந்து சென்றன. நேற்று மதியம் விரிசல் பகுதி ஊழியர்களால் சீரமைக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை