Oxygen Alert Was SOS-ed In 2 Letters Within Gorakhpur Hospital | ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறிய மருத்துவமனை| Dinamalar

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறிய மருத்துவமனை

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (30)
Advertisement

கோரக்பூர்: உ.பி., கோரக்பூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய நிறுவனத்தில் அதிகாரிகள் அதரடியாக சோதனை நடத்தினர். இதனிடையே, மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகம் உள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி, மருத்துவமனை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.உ.பி., மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார் எழுந்தது. பழைய பாக்கி தொகை வழங்காததால், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனம் சப்ளையை நிறுத்தியதால், குழந்தைகள் பலியானதாக தெரியவந்தது. ஆனால், மாநில அரசு ஆக்சிஜன் பற்றாக்குறை என மறுத்துள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு சப்ளையை நிறுத்திய, லக்னோவில் உள்ள அந்த நிறுவனத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கடிதம்:

இதனிடையே, மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என மருத்துவமனை ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில், ஆக்சிஜன் தேவையுள்ளது.ஆனால், கையிருப்பு மிகவும் குறைந்த அளவு உள்ளது. இது ஒரு நாளுக்கு கூட பத்தாது. அதிகாரிகள் நோயாளிகளை காப்பாற்ற விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் இதேபோல் கடிதம் எழுதியும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இரண்டாவது முறையாக ஒரு சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறிய மருத்துவமனை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
12-ஆக-201722:13:48 IST Report Abuse
Anandan மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்திய கதையாய் போனது இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணம். வெட்க கேடு.
Rate this:
Share this comment
Cancel
Thiyaga Rajan - Chennai,இந்தியா
12-ஆக-201721:39:00 IST Report Abuse
Thiyaga Rajan why hospital deen(Head) not arranged this basic resource thro his influence????. THese are all happening because of more corruption. The hospital doctors & staffs are not knowing the human value. Those people must be sacked without considering any tolerance.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-ஆக-201703:25:49 IST Report Abuse
Anandanசுகாதாரத்துறை அவலத்திற்கு மருத்துவ முதன்மை அதிகாரியை குற்றம் சுமத்துகிறீர். எப்படி நாடு விளங்கும்?...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-ஆக-201721:37:59 IST Report Abuse
balakrishnan எதுக்கு தனித்தனியா கொள்ளணும் பிஞ்சிலேயே எல்லோரையும் கொன்னுட்டா புதிய சமுதாயம் பிறக்கும் ஒரு வேலை இதெல்லாம் அவர்களின் கொள்கையாக இருக்கலாம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201719:54:21 IST Report Abuse
K.Sugavanam ஆக்சிஜன் பிராப்ளம் இல்லை எனவும் மருத்துவ காரணங்களால் உயிர் இழப்புன்னும் அரசு மருத்துவ மனை சொன்னது அண்டப்புளுகா?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-ஆக-201722:11:17 IST Report Abuse
Anandanஇப்படி கேள்வி கேட்கும் அனைவரையும் இவனுங்க anti indian என்று முத்திரை குத்துவானுங்க....
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
12-ஆக-201719:29:17 IST Report Abuse
Selvaraj Thiroomal இப்போது ரெய்டு நடத்தப்படுவது எதற்கென்று புரிகிறதா,, பணத்தை பாக்கிவைத்தவர்கள் கடன்கொடுத்தவரை அதிகார பலத்தை வைத்து மிரட்டி வருவது உண்மையை மறைக்கத்தான்.. பாஜக ஆளாத வேறுமாநிலத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்தால் இறப்பின் உண்மைநிலை வெளிவரும்.. ஆடு மாடுகள் போல ஓட்டளித்தால் "மாட்டாட்சி " தான் நடக்கும் மக்களாட்சியை எதிர்பார்த்தால் தவறே.. மார்ச் மாதமே முடிந்த ஒப்பந்தத்தை இன்றுவரை புதுப்பிக்கவோ புதியவரை நியமிக்கவோ இயலாத நிர்வாகத்தில் குழந்தைகள் அடுத்த பிறவியில் மாடுகளாக பிறக்க ஆண்டவனை வேண்டுவோம்.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
12-ஆக-201718:14:40 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM அந்த மாநில முதல்வரை , ராஜினாமா செய்ய சொல்ல, அல்லக்கைகளுக்கு துப்பு உள்ளதா?
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-ஆக-201717:16:14 IST Report Abuse
தமிழர்நீதி ஒரு ஆக்சிஜென் உற்பத்தி யுனிட் அமைக்க ஒரு மாநில அரசுக்கு ஒருவாரம் அவகாசம் போதும் . புது யுனிட் அமைத்திருக்கலாம். அல்லது வேறு நிறுவன மக்களிடமிருந்து , மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜென் வாங்கியோ அல்லது இலவசமாக பெற்றோ குழந்தைகள் உயிரை காத்திருக்கலாம் . இது சாமிகளுக்கு பசு நேசர்களுக்கு தெரியாது . யோகா தான் காற்று கொடுக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் படிக்காத சாமிகள் முதல்வர் ஆனால் இப்படித்தான். உடனே இந்த சாமியை பிஜேபி நீக்கிவிட்டு படித்த வேறு ஒரு பிஜேபி MLA வை முதல்வர் ஆக்கிடவேண்டும். இல்லை இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ .
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
12-ஆக-201719:48:06 IST Report Abuse
sundaramWe dont need one week for installation, commissioning and Testing of an Electrolyzer units. Nowadays modular units are available in market. Only distribution pipes and nozzle arrangements and leak detection alone to be done at hospitals. Just it will take two or three days....
Rate this:
Share this comment
Cancel
Original Indian - Chennai,இந்தியா
12-ஆக-201716:59:32 IST Report Abuse
Original Indian இதற்கு பொறுப்பேற்று உ.பி. முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது பொறுப்பற்ற அமைச்சரை நீக்க வேண்டும். செய்வாரா?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
12-ஆக-201716:55:45 IST Report Abuse
sundaram சாதாரணமா ஒரு குடும்பத்துல ஒரு மாசம் அல்லது இருபது நாளைக்கு வேணும்கிற உணவு பொருட்களை ஸ்டாக் வச்சிருப்போம். ( வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்தா ஸ்டாக் வச்சுக்குற அளவுக்கு அவங்களுக்கு வசதி இருக்காது.) தினமும் மருந்து சாப்பிடவேண்டிய கட்டாயத்துல இருக்குறவங்க ஒரு வாரத்துக்கு வேணும்குற மருந்துகளை கையிருப்பா வச்சுக்குறோம். ஆனா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுல இருக்குற, அதுவும் மருத்துவ கல்லூரியோடு இணைந்து செயல்படுற ஒரு பெரிய ஆஸ்பத்திரியில உயிர் காக்கும் மருந்துகள் ரத்தம் ஆக்சிஜன் இவையெல்லாம் வேணும்கிற அளவு ஸ்டாக் வச்சுக்க மாட்டாங்களா? ஒண்ணுமே புரியலை. அதுக்கு பேருதான் அதிரடி ஆதித்யநாத் ஆட்சி போல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-201716:51:37 IST Report Abuse
முக்கண் மைந்தன் கோவா, மணிப்பூர், பீஹார், குசராத், அஸ்ஸாம், த நா, etc , etc இப்டி ஒவ்வொரு ஸ்டேட்டுலயும் குதுர பந்தயம், குறுக்கு சால் ஓட்டி கேவலமா நடந்துக்க மோடிக்கி தெரியும், ஆனா, after all, ஒரு ஆஸ்பத்ரிய ஒழுங்கா நிர்வாகம் பண்ணத்தெரியாது..... கேவலம்...., இவுனுவlaயெல்லாம்........
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201719:58:13 IST Report Abuse
K.Sugavanamஇப்பிடி சொன்னா நீங்க Aunti Indian ஆக்கப் படுவீர்கள்.....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-ஆக-201722:08:43 IST Report Abuse
Anandanஅய்யா முக்கண் மைந்தனே, இந்தியா வாங்க அப்பத்தான் அவங்களை பத்தி தெரியும். அவர்கள் கவலை எல்லாம் எல்லா மாநிலத்திலும் அவர்கள் ஆட்சி எல்லா இடத்திலும் அவர்கள் ஆட்கள் இருக்க வேண்டும் அப்போதான் அவர்களின் தில்லு முள்ளு வெளியில் தெரியாது. இதில் நீங்க நிர்வாகம் பத்தி கேள்வி கேட்குறீங்க. நல்லா கேக்குறீங்க டீடைலு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை