ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காந்தி ஜெயந்தி, ராஜஸ்தான், விடுமுறை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்த வருடம் அக்டோபர் 2ல் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.


சுற்றிக்கை:

ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யாண் சிங், மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்னர், 2017- 18 ம் கல்வியாண்டிற்கான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், குருநானக், அம்பேத்கார், மகாவீரர், மகாராணா பிரதாப் ஆகியோர் பிறந்த நாளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ல் மொகரம் பண்டிகைக்கும், தீபாவளி(13-21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து கவர்னர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மாநில உயர்கல்வித்துறை அமைச்சகம் அக்டோபர் 2ம் தேதியை விடுமுறையாக அறிவிக்கவில்லை. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, கவர்னர் மாளிகை விடுமுறை அட்டவணையை பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


கொண்டாட்டம்:

மாநில உயர் கல்வி அமைச்சர் கிரன் மகேஸ்வரி கூறுகையில், அக்டோபர் 2ம் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதனால் விடுமுறை வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.காந்திய படிப்புகளுக்கான இந்திய கவுன்சில் தலைவர் என்.ராதாகிருஷ்ணன், மகாத்மா பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஆக-201712:01:10 IST Report Abuse
அறிவுடை நம்பி தேச நாசா...காந்தி மட்டுமில்லை... எல்லாத்தலைவர்களின் பிறந்த நாளுக்கும் அப்படிதான்...... உலக தொல்லைக் காட்சிகளில் முதல் முறையாக கவர்ச்சிக்கன்னிகள் தோன்றும் படங்களை பார்த்து நினைவு கூறுவார்கள்...இப்போது இருக்கும் தலைவர்கள் மறைந்தாலும் அப்படிதான்...அவர்களின் பிறந்த நாளிலும் அப்படிதான்...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-ஆக-201711:58:01 IST Report Abuse
ஜெயந்தன் குடித்து விட்டு வாந்தி எடுக்கறவனெல்லாம் காந்தி பற்றி பேசுகிறான்...காலக்கொடுமை....
Rate this:
Share this comment
Cancel
12-ஆக-201723:03:13 IST Report Abuse
வசெமு Good. All state should be follow Rajastan. If anyone stand 4 holiday @Oct2nd, why not @Jan23rd...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை