தே.ஜ., கூட்டணிக்கு வாங்க: நிதிசுக்கு அமித்ஷா அழைப்பு| Dinamalar

தே.ஜ., கூட்டணிக்கு வாங்க: நிதிசுக்கு அமித்ஷா அழைப்பு

Updated : ஆக 12, 2017 | Added : ஆக 12, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தே.ஜ., ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., அமித்ஷா, நிதிஷ்குமார்,

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைய வேண்டும் என பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.


அதிருப்தி:

பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துவிட்டு, பா.ஜ., கூட்டணியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இதனால், சரத் யாதவ் அதிருப்தியில் உள்ளார். அக்கட்சி மூத்த எம்.பி.அலி அன்வர் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றார். இதனால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


சந்திப்பு:

இதனிடையே, நேற்று(ஆகஸ்ட்11) டில்லி சென்ற நிதிஷ்குமார் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். வரும் 19ம் தேதி ஐக்கிய ஜனதா தளத்தில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வது குறித்து நிதிஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.இந்நிலையில், பா.ஜ., தலைவர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: நேற்று எனது வீட்டில் நிதிசை சந்தித்து பேசினேன். அப்போது ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.தே.ஜ., கூட்டணிக்கு வாங்க: நிதிசுக்கு அமித்ஷா அழைப்பு

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-201702:36:40 IST Report Abuse
Mani . V இதுக்கு எதுக்கு நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுக்க வேண்டும்? அவர் மீது ஏதாவது வழக்கு தொடுத்தாலோ, சிபிஐ ரெய்டு விட்டாலோ தானாகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து விடப்போகிறார்.
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
12-ஆக-201723:46:23 IST Report Abuse
 ஈரோடுசிவா "பயபுள்ளைக ... வயித்தெரிச்சல்ல எப்புடியெல்லும் பொலம்புதுக ... என்னவோ காலங்காலமா காங்கிரசு களவாணிக என்னவோ நே......ர் வழியில தான் போனவிங்கமாதிரியும் .... அத இவனுக பார்த்த மாதிரியும் ... அடடா... என்ன நடிப்புடா சாமி ... ??
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201708:45:47 IST Report Abuse
Rahimநீ மட்டும் என்ன வேலைக்கு வச்சா பார்த்த காங்கிரஸ் களவாணினு உன் மாதிரி களவாணி பயலுக தான் கதை கட்டி விட்டு அது மூலமா ஆட்சியை பிடிச்சீங்க இப்போ என்ன ஆச்சு எல்லாமும் தொலைந்து மக்களை நடுத்தெருவில் நிக்க வச்சாச்சு உன்ன மாதிரி காசு வாங்கி கவலை இல்லாம எல்லா மக்களாலும் இருக்க முடியாது அடுத்தவங்க காசுல மஞ்ச குளிக்கிற கருமாந்திரம் எல்லாம் பாஜக வுக்கு சொம்படிக்க வேண்டி இருங்க, களவாணி னு சொன்னீங்களே டா எதையாச்சும் நிரூபிக்க முடிஞ்சுது உங்களால? அப்போ இதெல்லாமே நீங்க விட்ட புரூடா னு மக்களுக்கு விரைவில் புரியும்....
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
12-ஆக-201723:43:13 IST Report Abuse
Murugan இந்த பொழப்புக்கு பேசாமல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை