அசாமில் கன மழை, வெள்ளம்: 11 லட்சம் பேர் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அசாமில் கன மழை, வெள்ளம்: 11 லட்சம் பேர் பாதிப்பு

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 அசாமில் கன மழை, வெள்ளம், 11 லட்சம் பேர், பாதிப்பு

கவுகாத்தி:அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 11 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர்.மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தேமாஜி ,லக்கிம்பூர் ,பக்ஸா, சிராங் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 781 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரம்மபுத்திரா, தன்சிரி, ஜியா பராலி, ஆகிய நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 20 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 14ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.
மாநில முதல்வர் சர்பானந்தா சோனவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.அசாமில் கன மழை, வெள்ளம்: 11 லட்சம் பேர் பாதிப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
12-ஆக-201723:56:50 IST Report Abuse
Murugan அண்ணே எனக்கு புரிஞ்சி போச்சு ஆனாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற சகோதரர்கள் எனவே அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்க வழி செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
12-ஆக-201720:39:43 IST Report Abuse
Rajathiraja இந்தியாவின் ஒருபக்கம் வறட்சியால் மக்கள் இறக்கின்றனர், இன்னொருபக்கம் வெள்ளத்தால் இறக்கின்றனர். தேசிய நதிகள் இணைப்பே இதற்கு சரியான தீர்வு. சந்திரபாபு நாயுடு போன்றோர் பிரதமரானால் தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியமாகும்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
12-ஆக-201719:25:02 IST Report Abuse
Kuppuswamykesavan இப்போதெல்லாம், அரோபிய பாலைவனங்களில் கூட, சில நேரங்களில், பெருமழை வெள்ளமும் மற்றும் சில நேரங்களில், பனி கொட்டுவதும் நிகழ்வதால், சந்தேகமேயில்லை, இப்படி உலகில் ஆங்காங்கே நிகழ்வது, குளோபல் வார்மிங் என்ற காற்று மண்டல வெளி அதிவெப்பம், அதன் இயற்கையான தன்மைகளில் (மனிதர்களால்) மாறி வருவதால்தான் எனலாம். அதாவது காற்று மண்டலம் அசுத்தமடைவது குறைந்தால்தான், இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்கள், குறைய தொடங்கும் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201718:50:11 IST Report Abuse
K.Sugavanam இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள அனைவரும் உதவ வேண்டும்.. அஸ்ஸாமில் ஒரு இடத்தில மஹாத்மா காந்தி சிலையை அகற்ற முயற்சிகள் நடப்பது அநாகரீகம்.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
12-ஆக-201718:42:07 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM கடந்த 3 ஆண்டுகளாக பருவமழையும் பெய்யவில்லை... மழை பெய்தால் பேய் மழை பெய்து, அழிவை ஏற்படுத்திவிட்டு போகிறது... யார் வந்ததோ , யாருக்கோ பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... புரிந்தால் சரி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை