தினகரனுக்கு எதிரான தீர்மானத்தால் அமைச்சர் சீனிவாசனுக்கு சிக்கல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரனுக்கு எதிரான தீர்மானத்தால் அமைச்சர் சீனிவாசனுக்கு சிக்கல்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisementமுதல்வர் பழனிசாமி அணியினரின் திடீர் முடிவால், அ.தி.மு.க., வங்கி கணக்கை கையாண்ட, அமைச்சர் சீனிவாசனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கியதும், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, சசிகலா அறிவித்தார். சட்ட விரோதம்மேலும், அவருக்கு ஆதர வளித்த, அவைத் தலைவர் மதுசூதனன் உட்பட பலரையும், நீக்குவதாக தெரிவித்தார். புதிய அவைத் தலைவராக, அமைச்சர் செங்கோட்டையன், பொருளாளராக அமைச்சர் சீனிவாசன், மீனவர் அணி செயலராக, அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரை நியமிப்பதாகவும் அறிவித்தார். அப்போது, சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர்.
கட்சியில் இருந்து நீக்க, சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என, பன்னீர் அணியினர் அறிவித்தனர். பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், சசிகலா, சிறைக்கு செல்வதற்கு முன், துணைப் பொதுச்செயலராக தினகரனை நியமித்தார். தற்போது, பழனிசாமி அணியினர், தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்க, முடிவு செய்துள்ளனர்.அதன்படி, 'சசிகலா பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ள நிலையில், தினகரன், துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது, சட்ட விரோதமானது' என, முதல்வர் பழனிசாமி அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.இந்த தீர்மானத்தில், பொதுச்செயலர் செயல்பட முடியாத நிலையில், ஜெ.,வால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டும், கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். கையெழுத்திடவில்லைஅதனால், அந்த தீர்மானத்தில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட, அவைத் தலைவர் செங்கோட்டையன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.ஜெ.,வால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், கட்சியை நடத்துவதாக இருந்தால், அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக பன்னீர்செல்வம் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா நியமித்த நியமனம் செல்லாது என்றால், அவரால் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட, அவைத் தலைவர் பதவி; அமைச்சர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட, பொருளாளர் பதவி; அமைச்சர் ஜெயகுமாருக்கு வழங்கப்பட்ட, மீனவர் அணி செயலர் பதவி ஆகியவையும் செல்லாததாகி விடுகிறது. கட்சி பொருளாளர் என்ற முறையில், அமைச்சர் சீனிவாசன், கட்சியின் வங்கி கணக்குகளை கையாண்டதும் தவறாகி விடும். அதனால், அமைச்சர் சீனிவாசனுக்கு, சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரம் கூறுகிறது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201711:06:19 IST Report Abuse
Ramesh Rayen பன்னீரும் அடைப்படியும் ஒன்றாக இணைந்து - பெரும்பான்மையை காண்பித்தால் [கட்சியில்] பின் முடிவு ஏற்பட சாத்தியம் உண்டு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201709:08:37 IST Report Abuse
Srinivasan Kannaiya சிக்கலை தீர்ப்பதில் சசி கில்லாடி....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
13-ஆக-201706:47:21 IST Report Abuse
தேச நேசன் நித்தமும் நரக வேதனை நிச்சயம்தான்
Rate this:
Share this comment
Cancel
sudharshana - chennai,இந்தியா
13-ஆக-201704:33:00 IST Report Abuse
sudharshana சிக்கலுக்கு மேல் சிக்கல், நல்ல கலக்கல், தீர்வு எல்லாரும் விலகல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை