மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பேரை சேர்க்க ஆதரவாளர்களுக்கு தினகரன் அதிரடி உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பேரை சேர்க்க ஆதரவாளர்களுக்கு தினகரன் அதிரடி உத்தரவு

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (4)
Advertisement
     மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பேரை சேர்க்க  ஆதரவாளர்களுக்கு தினகரன் அதிரடி உத்தரவு


அரசியலில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தும்படி, ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார்.சசிகலா குடும்பத்தை அடியோடு ஒதுக்கிவிட்டு, கட்சி மற்றும் ஆட்சியை, முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைக்க, முதல்வர் பழனிசாமி திட்டமிட்டார். இதை அறிந்த தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்தார். அவருக்கு, 20 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன், முதல்வர் தரப்பை மிரட்டி பணிய வைக்க முயற்சித்தார்.ஆனால், முதல்வர் தரப்பினர் பணியவில்லை. மேலும், அவர், அ.தி.மு.க., அலுவலகம் வரவும் தடை விதித்தனர். அதிர்ச்சி அடைந்த தினகரன், தன்னிச்சையாக, மாவட்ட சுற்றுப்பயண திட்டத்தை அறிவித்தார். அத்துடன், தன் ஆதரவாளர்களுக்கு, கட்சிப் பதவிகளை வாரி வழங்கினார். இது, முதல்வர் தரப்பை எரிச்சல் அடைய செய்தது. அதைத் தொடர்ந்து, 'தினகரன் நியமனமே செல்லாது என்ற நிலையில், அவர் நியமிக்கும் நிர்வாகிகள் பதவியும் செல்லாது' என, தீர்மானம் நிறைவேற்றினர்.அத்துடன், பழனிசாமி தரப்பினர், பன்னீர் அணியுடன் இணைவதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். பன்னீர் அணியினர், 'தினகரனை மட்டுமின்றி, சசிகலாவையும் நீக்க வேண்டும்' என, நிபந்தனை விதித்துள்ளனர். இது, சசிகலா குடும்பத்தினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரு அணிகளும் இணைந்து, தங்களை ஒதுக்கினால், தங்கள் குடும்ப ஆதிக்கம் முடிவுக்கு வந்து விடும் என்பதை உணர்ந்து, அனைவரும் இணைந்து செயல்படத் துவங்கி உள்ளனர்.இரு அணிகள் இணைப்பிற்கு முன், தன் ஆதரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, தினகரன் முடிவு செய்துள்ளார். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 13 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அவர்கள் தொகுதி வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து, அ.தி.மு.க., - தினகரன் அணி எனக் கூறி, உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான உணவுச் செலவு, பயணச் செலவு, ஊதியம் என, அனைத்தும் மாவட்ட பொறுப்பாளர்களால் வழங்கப்படுகிறது.தினகரனுக்கு ஆதரவாக, போஸ்டர் ஒட்ட வேண்டும் என்றால், சென்னையில் இருந்து இலவசமாக வந்து சேர்கிறது. அதேபோல், தினகரன் பேரவை பெயரிலும், உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.இது குறித்து, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது ஒரு லட்சம் பேரை, உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என, தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இரு அணிகள் இணைந்தாலும், தனி அணியாக, அரசியலை நடத்த வேண்டும் என்பதற்காக, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த, தினகரன் உத்தரவிட்டுள்ளார். இரு அணிகள் இணைந்து, சசிகலா குடும்பத்தை, கட்சியிலிருந்து விலக்குவதாக அறிவித்தாலும், தினகரன் தனித்து அரசியல் செய்வார்; ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர். நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-ஆக-201713:42:31 IST Report Abuse
arabuthamilan எவ்வளவு நாளைக்குத்தான் ஆளாளுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி கொடுப்பீர்கள். அம்மாவிடம் இல்லாத பணமா.. கண்டைனர் கன்டைனராக எவ்வளவு பணம் வைத்திருந்தார்கள். அதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா அவர்களுக்கு. போய் சேர்ந்ததுதான் மிச்சம். ஒன்றையும் கொண்டு போக முடியவில்லை. எதையும் எடுத்ததும் செல்ல முடியவில்லை. தாயின் வயிற்றிலிருந்து எப்படி வந்தார்களோ அப்படிதான் போய் விட்டார்கள். இதுதான் வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201713:42:24 IST Report Abuse
Giridharan S எல்லோருக்கும் பணம் குவார்ட்டர் குடுத்து சேர்த்தக்கூட அவரால் ஓட்டு வாங்க முடியாது. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு இவங்களெல்லம் அரசியலுக்கு வந்து என்ன பண்ண போறாங்க, பணம் எல்லோரையும் எப்படி ஆட்டுது பாருங்க
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201711:06:50 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam சேர்த்தாலும், செல்லாது. தேர்தல் ஆணையமும் கணக்கில் எடுக்காது.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
13-ஆக-201701:59:25 IST Report Abuse
Baskar ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் மூன்று வேளை சாப்பாடு குவார்ட்டர் வேறு காசு இருக்கும் இடத்தில் எதுவும் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை