பிரியாணி விருந்து விஜயகாந்த் உற்சாகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரியாணி விருந்து விஜயகாந்த் உற்சாகம்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (4)
Advertisement
பிரியாணி விருந்து விஜயகாந்த் உற்சாகம்பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டுவதால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உற்சாகத்தில் உள்ளார். தேய்ந்து வரும், தே.மு.தி.க.,வை துாக்கி நிறுத்தும் முயற்சிகளில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த், சில மாதங்களாக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, காலியாக இருந்த கட்சி பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். விரைவில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், வரும், 25ல், விஜயகாந்தின் பிறந்த நாள் வருகிறது. ஆண்டு தோறும், இவ்விழாவை விஜயகாந்த் பிரமாண்டமாக கொண்டாடி வந்தார். இதற்காக, மாவட்ட வாரியாக, பல லட்சம் ரூபாய் செலவில், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இதற்கான செலவை, மாவட்ட செயலர்கள் ஏற்று வந்தனர். இவ்வாறு பணத்தை வாரி இறைத்த மாவட்ட செயலர்கள் பலரும், விஜயகாந்தின் கூட்டணி முடிவால் மனம் உடைந்து, கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர். இதனால், கடந்தாண்டு, விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் களை இழந்தது. இது, விஜயகாந்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தாண்டும், விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் பிசுபிசுக்கும் என, கூறப்பட்டது. ஆனால், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பலரும், விஜயகாந்தின் பிறந்த நாளை வழக்கம் போல கொண்டாட முடிவெடுத்துள்ளனர். இதற்காக, சுவர் விளம்பரங்கள் செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும், விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சுவர் விளம்பரங்கள் அதிகளவில் எழுதப்பட்டு வருகின்றன. இதை அறிந்து, விஜயகாந்த் உற்சாகம் அடைந்துள்ளார். பிறந்த நாளில், தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, பிரியாணி விருந்தளித்து உபசரிப்பது விஜயகாந்தின் வழக்கம். சில ஆண்டுகளாக, அதை நிறுத்தியிருந்தார். இந்த ஆண்டு, மீண்டும் பிரமாண்ட விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201713:44:35 IST Report Abuse
Giridharan S குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு ஆகிடப்போகுது. அப்புறம் இருக்கும் தொண்டர்கள் கூட நம்ம மாஃபா அண்ணன் மாதிரி போய்டப்போறாங்க
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
13-ஆக-201710:34:11 IST Report Abuse
வெற்றி வேந்தன் அப்படியே குவார்ட்டரும் கொடுத்தால் தொண்டர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஆக-201709:56:26 IST Report Abuse
Nallavan Nallavan சரக்கு மேல பிரியம் வெச்சுருக்குறவங்களுக்கு பிரியாணி மேலயும் ஒரு பாசம் இருக்கும் .....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201709:04:55 IST Report Abuse
Srinivasan Kannaiya உங்களுடன் ரஜினி கமலை சேர்த்து கொள்ளலாமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை