தி.மு.க., மீது பாய தயாராகிறது பா.ஜ.,: அமித் ஷா வருகைக்கு பின் யுத்தம் ஆரம்பம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., மீது பாய தயாராகிறது பா.ஜ.,
அமித் ஷா வருகைக்கு பின் யுத்தம் ஆரம்பம்

அ.தி.மு.க., பிளவு பட்டு கிடப்பதால், தி.மு.க., வை எதிர்ப்பதிலும், விமர்சிப்பதிலும், தன் கவனத்தை, பா.ஜ., திசை திருப்பி உள்ளது.

தி.மு.க., மீது,பாய,தயாராகிறது,பா.ஜ., அமித் ஷா,வருகைக்கு பின்,யுத்தம்,ஆரம்பம்

தமிழகத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், பா.ஜ., பினாமியாக, அ.தி.மு.க., மாறி விட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதற்கேற்ப, ஓ.பன்னீர்செல்வத்தை மிஞ்சும் அளவுக்கு, பிரதமர் மோடியை, மூச்சுக்கு ஒரு முறை சந்தித்து, முதல்வர் பழனிசாமி அதீத இணக்கம் காட்டுகிறார்.அ.தி.மு.க.,வை வசப் படுத்தி விட்டதாக கருதும், பா.ஜ., சமீபகால மாக, தி.மு.க.,வை நோக்கி, பாய துவங்கி உள்ளது.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் இடையே அதிகரித் துள்ள வார்த்தை மோதல், அதை காட்டுவதாக உள்ளது. சென்னையில், ஜூனில் நடந்த

கருணாநிதி வைர விழா நிகழ்ச்சிக்கு பின், அது கூட்டத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர் களை, ஸ்டாலின் வெற்றிகரமாக ஒருங்கிணைத் தார். அது, பா.ஜ., வுக்கு எதிரான தேசிய கூட்டணிக்கு வித்திடு வது போல் அமைந்தது. அந்நிகழ்ச்சியில், ராகுல், சீதா ராம் யெச்சூரி உள்ளிட்டோர், மோடியை கடுமையாக விமர்சித்தனர்.

அதை, பொன்.ராதாகிருஷ்ணன், 'அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற, ஓரங்கட்டப்பட்டவர்களை வைத்து நடந்த விழா. மக்களால் புறக்கணிக்கப் பட்டு, தோற்றுப் போன விழா' என, விமர்சித்தார். அதற்கு ஸ்டாலின், 'பொன்.ராதாகிருஷ்ணன், 16 வயது இளைஞரா...' என, கிண்டல் செய்தார்.இந் நிலையில், கடந்த வாரம் நடந்த, பா.ஜ., இளைஞர் பேரணியும், தி.மு.க.,வை விமர்சிக்கும் விழாவா கவே மாறியது. தி.மு.க.,வையே பெரும் பாலானோர் விமர்சித்தனர். அப்போது, தமிழிசை, 'தமிழ கத்தில், சூரியன் மறைய துவங்கிவிட்டது' என்றார்.

இளைஞர் அணி தேசிய தலைவர் பூனம் மகாஜனும், தி.மு.க.,வை தாக்கிப் பேசினார். அவர்,'தி.மு.க.,வின் சூரியன் மறைந்து, மோடி என்னும் சூரியன் விரைவில் உதிக்கும்' என்றார்.

முட்டுக்கட்டையா?


இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் கூறிய தாவது: தமிழகத்தில், எங்கள் வளர்ச்சிக்கு, தி.மு.க., நிச்சயம்

Advertisement

பெரிய முட்டுக்கட்டை தான். அதனால், தி.மு.க.,வை குறிவைத்து தாக்குகி றோம். அ.தி.மு.க., பிளவுபட்டு உள்ளதால், தி.மு.க., எந்தவிதத்திலும் ஆதாயம் அடைந்து விடக் கூடாது என்பதற்காக, அக்கட்சியை எதிர்த்து, அரசியல் யுத்தம் துவங்கி உள்ளோம்.

அ.தி.மு.க., கூடாரம், சிதறிய தேன்கூடு போல உள்ளது; நாங்கள் ஒன்றும் செய்ய தேவை யில்லை. அக்கட்சியினரே பார்த்துக் கொள்வர். அவர்கள் ஒன்றாக இருந்தாலும், பிரிந்தாலும், ஏதேனும் ஒரு வகையில், எங்களுக்கு சாதகம் தான். அதனால் தான், தி.மு.க.,வை எதிர்ப்ப தில், தனிக்கவனம் செலுத்துகிறோம். அமித் ஷா வருகையின் போது, இது தொடர்பான செயல் திட்டங்கள் வகுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
16-ஆக-201707:25:06 IST Report Abuse

rmrதிமுகவை மக்களுக்கு பிடிக்கவில்லை அது ஒரு ஊழல் கட்சி என்று எல்லாருக்கும் தெரியும் மக்கள் விரும்புவது ஒரு மாற்றம் முன்னேற்றம், நல்ல ஊழல் அற்ற ஆட்சி, விவசாயிகளின் நன்மைக்காக செயல் படும் ஆட்சி. அதை கொடுக்கும் தலைவர் அன்புமணி தான் என்பதை மக்கள் நம்புகின்றனர், விவசாயம் பெருகினால் தான் உற்பத்தி பெருகும் விலை வாசி குறையும். சினிமா கார்ப்பரேட் வியாபாரங்களால் அல்ல

Rate this:
Rajasekaran - Vizg,இந்தியா
13-ஆக-201723:34:19 IST Report Abuse

Rajasekaranகாமராஜர் தமிழக முதல்வராக இருந்தவரை அணைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன ஏன் என்றால் அப்பொழுது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டன ஏன் இப்பொழுது மத்தியில் பிஜேபி ஆளும் பொழுது தமிழகத்தில் பிஜேபி ஆளுமை அமைந்தால் நமக்கு (உங்களுக்கு) நன்மையே

Rate this:
Aheshram Jagan - Chennai,இந்தியா
13-ஆக-201723:10:47 IST Report Abuse

Aheshram Jaganதி மு க தமிழ் மொழியை அவமானப்படுத்தியது இலங்கை தமிழாட்களை கொன்று குவித்தது காவேரியை டெல்டா மாவட்ட விவசாயிகளை வஞ்சித்து டெல்டா மாவட்ட காவேரி நீரை தன சொந்த சாராய தொழிற்ச்சாலைக்கு பய்ன்படுத்தியது தாலுகாவிற்கு ஐநூறு Acre பைனாபி நிலம் சுருட்டியுள்ளது தனியார் பள்ளி கல்லூரிகளை தங்கை வைத்துக்கிண்டு வியாபாரமாகி அரசு பள்ளிகள் மூடும் அளவுக்கு கல்வியை அவமானப்படுத்தியுள்ளது காமராஜர் கொண்டுவந்த கல்வி வேலை போனது தி மு க வாழ் தன நல்லவன் போல நடிக்கிறார்கள் காசு கண்ணை மறைகிறது தி முக மற்றும் அதிமுக வின் கூட்டு சாதி நீடித்தால் தமிழகம் பாழாகும் மக்களே சிந்திப்பீர் சைலப்படுவீர் தி மு கே என்பது poi பிம்பம் தி மு க கூடையில் தற்போது கலைஞர் இல்லை ஏமாற vandam

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201722:31:51 IST Report Abuse

Rafi தி மு காவிற்கு எதிரில் பி ஜே பி தலைமை என்றால் 234 மொத்தமாக சந்தேக மில்லாமல் கிடைத்து விடும். அப்போ எதிர் கட்சியே சட்டமன்றத்தில் இல்லாமல் ஆளும் கூட்டணியே பகிர வேண்டிய நிலை வரும்.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
13-ஆக-201721:54:31 IST Report Abuse

Barathanதிமுக மீது பாய்வது என்றால் திமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் IT மற்றும் அமுலாக்க பிரிவு ரெயிடு செய்வதுதானே?

Rate this:
Arivu Nambi - madurai,இந்தியா
13-ஆக-201719:50:29 IST Report Abuse

Arivu Nambiஉங்களின் ஆட்டம் முட்டாள்களின் முன்தான் செல்லுபடியாகும் ...... தமிழகத்தில் அல்ல ... இதில் அ.தி .மு .காவினர் இவர்களின் கையில் சிக்கிவிடக்கூடாது...

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
13-ஆக-201718:27:59 IST Report Abuse

N.Purushothamanகமலஹாசன் கட்சி ஆரம்பிச்சி தி.மு.க வோட கூட்டணி வச்சி அந்த கட்சியை காப்பாத்திடுவாரு ..அதனால தி .மு.க அனுதாபிங்க கவலைப்பட வேண்டியதில்லை ..

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
13-ஆக-201715:57:06 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranநான் என்னவோ பாரா மிலிட்டரி போர்ஸ் என்பது நாட்டை மக்களை காப்பாற்ற என்று நினைத்துவிட்டேன். இப்போது தான் தெரிகிறது அது வருமான வரித்துறை எதிர்க்கட்சி தலைவர்கள் ,வேண்டாதவர்கள் மீது சோதனை நடத்தும்போது ,பாதுகாப்பு கொடுப்பதெற்கென்று

Rate this:
kandhan. - chennai,இந்தியா
13-ஆக-201717:04:06 IST Report Abuse

kandhan.பி ஜே பி செய்யும் இந்த கேவலமான வேலையை அடுத்து வரும் தேர்தலில் இந்த எதிர்க்கட்சியினர் நிச்சியம் இவர்களை பதம் பார்ப்பார்கள் அப்போதுதான் உண்மை தெரியும் இவர்களின் நாடகம் ,எப்படியும் தமிழகத்தில் பி ஜே பி டெபாசிட் வாங்காது என்பது எல்லோருக்கும் தெரியும் அதனால்தான் இந்த மக்களுக்கு எதிரான எல்லா திட்டங்களையும் இங்கே அரங்கேற்றி நடத்துகிறார்கள் அதற்க்கு எத்தனை பேர் சாமரம் வீசுகிறார்கள் என்று நன்றாக மக்களுக்கு தெரியும் அவர்களை இனம் கண்டு மக்களே அவர்களை ஒதுக்கிவிடுவார்கள் இவர்களின் ஆட்டம் எல்லாம் ஆட்சி இருக்கும் வரைதான் பிறகு இவர்களுக்கு வெற்றி என்பதே கிடையாது பொறுத்திருந்து பாருங்கள் உண்மை மக்களுக்கு புரியும் கந்தன் சென்னை...

Rate this:
Ramesh Sundram - Muscat,ஓமன்
13-ஆக-201714:23:28 IST Report Abuse

Ramesh Sundramமுதலில் உங்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி சேனல் வைத்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் திருடர்கள்/குடிகாரர்கள் கூட தொலைக்காட்சி சேனல் வைத்து மக்களை முட்டாள் ஆக்கி வைத்து இருக்கிறார்கள் உங்களால் இவர்களை திருத்த முடியாது போய் big box நிகழ்ச்சி பாருங்கள்

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஆக-201716:34:57 IST Report Abuse

dandyதொலை காட்சி நிறுவனங்கள் மட்டுமா ?..........

Rate this:
Balaji - Khaithan,குவைத்
13-ஆக-201713:36:57 IST Report Abuse

Balajiபாஜக தமிழகத்தில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளை மீறி வெல்வது என்பது இயலாத காரியம்.. காங்கிரஸ், பாஜக என எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தனித்து தமிழகத்தில் வளர முடியும் என நினைப்பதே மூட நம்பிக்கை... தேசிய கட்சிகளுக்கு மாநில கட்சிகளான அதிமுக அல்லது திமுகவின் தயவில் தான் ஏதாவது சில தொகுதிகளை பெறமுடியும் என்பது தான் எதார்த்தம்..........

Rate this:
மேலும் 115 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement