உ.பி.,யில் குழந்தைகள் பலி விவகாரம்: விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
உ.பி.,யில் குழந்தைகள் பலி விவகாரம்
விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

கோரக்பூர், : உ.பி.,யில், அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த, 30 குழந்தைகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த சம்ப வம் குறித்து, விரிவான விசாரணை நடத்த, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உ.பி.,யில்,குழந்தைகள்,பலி,விவகாரம் ,விசாரணைக்கு,மாநில அரசு,உத்தரவு

'குழந்தைகள் இறப்புக்கு, மாநில அரசின் அலட் சியமே காரணம்' என, குற்றஞ்சாட்டியுள்ள, எதிர்க் கட்சிகள், முதல்வர்,ஆதித்யநாத் மற்றும் சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத், உடனடியாக பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தியுள் ளன.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். கோரக்பூர் மாவட்டத்தில், மூளை வீக்க நோய் பாதிப்புக் குள்ளான, பல குழந்தைகள், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றன.மருத்துவமனைக்கு தேவையான,

ஆக்சிஜன் சிலிண்டர்களை, ஒப்பந்த அடிப்படை யில், தனியார் நிறுவனம், 'சப்ளை' செய்து வந்தது.

இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய, 66 லட்சம் ரூபாய் பாக்கி தொகையை தர, மருத்துவமனைநிர்வாகம் தாமதித்ததால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய் வதை, அந்த நிறுவனம் நிறுத்தியது. நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது; இரண்டு நாட்களில், 30 குழந்தை கள் பலியாயினர்.

முதல்வர், யோகி ஆதித்ய நாத்தின் தொகுதியான, கோரக்பூரில் நடந்த இந்த நிகழ்வு குறித்து, ஊடகங் களில் செய்தி வெளியானதை அடுத்து, அதிகாரிகள் மற்றும்அமைச்சர்கள், மருத்துவமனைக்கு விரைந் துள்ளனர்.குழந்தைகள் இறப்புக்கான காரணம் குறித்து, விரிவான விசாரணைக்கு உத்தர விட்டுள் ளதாக, மாவட்ட கலெக்டர், ராஜிவ் அறிவித்துள்ளார்.

ஒப்பந்த நிறுவனம் மற்றும்மருத்துவமனை நிர்வா கிகளிடம், போலீசார் விசாரித்து வருகின்ற னர். துணை முதல்வர், கேஷவ் பிரசாத் மவுர்யா, மாநில சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத் மற்றும் பல அமைச்சர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.குழந்தைகள் இறப்புக்கு பொறுப் பேற்று, முதல்வர், ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என, காங்கிரஸ், சமாஜ்வாதி,
நடத்தப்பட்டு, அரசிடம், அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த விகாரத்தை, முதல்வர் கூர்ந்து கவனித்து வருகிறார். குற்றவாளிகள் மீது பாரபட்சமற்ற

Advertisement

பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

பாரபட்சமற்ற நடவடிக்கை


துணை முதல்வர், கேஷவ் பிரசாத் மவுர்யா செய்தி யாளர்களிடம்பேசியதாவது: மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை கள், திடீரென இறந் ததற்கான காரணம் குறித்து விசாரிக்க,குழு அமைக்கப்பட்டுள்ளது. நேர்மை யான,விரிவான விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜினாமா செய்ய வேண்டும்!:காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யு மான, குலாம் நபி ஆசாத் தலைமையில், காங்., தலை வர்கள், கோரக்பூர் அரசு மருத்துவமனை யில், நேற்று ஆய்வு செய்தனர். செய்தியாளர் களிடம், குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை களின் உயிரிழப்புக்கு, மாநில அரசின் அலட்சி யமே காரணம். மருத்துவமனை நிர்வாகம் கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளது. ஆக்சி ஜன் பற்றாக்குறையால், இரண்டு நாட்களில், 30 குழந்தைகள் பலியாகியுள்ளன. இதே மருத்துவ மனையில், ஐந்து நாட்களில், 63 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன. இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று,முதல்வர், ஆதித்ய நாத் மற்றும் சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத் பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Balakrishnan - Chennai,இந்தியா
14-ஆக-201700:01:24 IST Report Abuse

M.BalakrishnanDear all, நோட் திஸ் பாய்ண்ட் பிடிஆர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் சீஃப் ஆபீஸர் காஃபீல் கான் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பற்றி மிக அருவருப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. 1. ஒரு இஸ்லாமிய நர்ஸை பலவந்தம் செய்த வழக்கில் ஒரு வருடம் ஜெயிலில் இருந்தான். ஜெயில் ரெக்கார்ட்ஸ் பக்காவா இருக்கு. 2. இன்று தூற்றுதலுக்கு உள்ளாகி இருக்கிற அந்த ஆஸ்பத்திரியின் ஆக்ஸிஜன் சப்ளை கமிட்டியின் தலைவரே இவன் தான். போதுமான சப்ளை இருக்குமாறு பாத்து கொள்வது இவனின் வேலை தானே?? இதுக்கும் ரெக்கார்ட்ஸ் இருக்கு. 3. ஆஸ்பத்திரியின் ரூல்ஸ் பிரகாரம் பத்து லட்ச ரூபாய்'க்கு மேல் கிரெடிட் வைக்க கூடாது. அப்படி பத்து லட்சத்தை தொட்டு விட்டால் அதை கிளியர் செய்து விட்டு தான் புது சிலிண்டர் வாங்க வேண்டும். இதுவும் ரூல்ஸ். ரெக்கார்ட்ஸ் இருக்கு. ரூல் புக்கும் இருக்கு. அப்போ 69 லட்சம் வரை கிரெடிட் ஏறி நிக்கிறதுக்கு யார் பொறுப்பு? கமிஷன் வரவில்லை என 69 லட்சத்துக்கு பில்லை கிளியர் செய்யாமல் அதுவும் ஆறு மாத காலத்திற்கு வைத்திருநதது யார்?? 4. இன்னொருவருக்காக பரிட்சை எழுதி மாட்டி உபி'யில் முன்னா பாய் என பட்டப் பெயர் உண்டு இவனுக்கு. எந்த வருடம் என நியாபகம் இல்லை. ரெக்கார்ட்ஸோ டீடெயில்ஸோ இல்லை.

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஆக-201722:45:04 IST Report Abuse

D.Ambujavalliஅந்த டாக்டர் தெய்வம் மேலும் பல உயிரிழப்பைத் தவிர்த்தவருக்கு தண்டனையா ? ஆனாலும் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் வாழ்த்துக்களும். எங்கள் அனைவரின் உளமார்ந்த ஆசியும் அவர் குடும்பத்தை மேன்மையுடன் வாழவைக்கும்

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
13-ஆக-201721:31:32 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanஆக்சிஜன் கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கானுக்கு ஆதித்யநாத்தின் ‘பரிசு’ பணி நீக்கம். அயோக்கிய பிஜேபி அரசு.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
13-ஆக-201722:12:55 IST Report Abuse

தங்கை ராஜாநேர்மை நீதி நியாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். காவித்துணியை போர்த்திக்கொண்டு கடவுளை ஏமாற்றுவதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை....

Rate this:
இந்திய புலி - Tirunelveli,இந்தியா
17-ஆக-201709:23:22 IST Report Abuse

இந்திய  புலிகோராக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது... நாங்கள் சிலிண்டர் அனுப்புவதை நிறுத்தவில்லை என சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனமான புஷ்பா சேல்ஸ் தெரிவித்துள்ளது. ஒப்பந்தப்படி ஆக.4சப்ளை செய்துள்ளது. அடுத்த சப்ளை ஆக 11ம்தேதிதான் என ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறியுள்ளது அந்த நிறுவனம். அதுபோல் அடுத்த சப்ளை கொடுப்பதற்கு முன்பு வரை 400சிலிண்டர் ஸ்டாக் வைக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். காரணம் இந்த நிறுவனத்தின் குடோன் ராஜஸ்தானில் உள்ளது. இங்கு வர 3நாட்கள் ஆகுமென்பதால் இந்த ஒப்பந்தம். ஆனால் அன்று வெறும் 65 சிலிண்டர்கள் மட்டுமே ஸ்டாக். மீதி எங்கே போயிற்று?? அதுபோல் 10லட்சம் கட்ட வேண்டியது இருந்தாலே சப்ளை ரத்து செய்யும்படி ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் 64லட்சம் ஆனபிறகும் கூட சப்ளை நாங்கள் நிறுத்தவில்லை, எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே அனுப்பினோம் என புஷ்பா சேல்ஸ் கூறியுள்ளது. ஆகஸ்ட் 5ம்தேதி ஹீரோ டாக்டரின் அக்கவுண்டுக்கு பணம் செலுத்தப்பட்டுவிட்டது அரசால். ஆனால் ஹீரோ அனுப்பியது குழந்தைகள் இறந்த பிறகு அதாவது ஆக 11. இதற்கு எந்த விளக்கமும் அந்த ஹீரோ கொடுக்கல. சஸ்பென்ட் செய்யப்பட்டதும் ராஜினாமா செய்து விட்டான் யோக்கியன். அஜாக்கிரதை, காழ்ப்புணர்ச்சி, அரசியல் விளையாட்டு போன்ற செயல்களுக்கு பிஞ்சுகள் பலிகடா ஆகப்பட்டிருப்பதற்கு தவறு செய்தவன் அம்புட்டு பேரும் பதில் சொல்லும் காலம் வரும்.....

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)