தேர்தல் கமிஷன் அளித்த பதிலால் அ.தி.மு.க., அணிகள் கடும் குழப்பம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் கமிஷன் அளித்த பதிலால்
அ.தி.மு.க., அணிகள் கடும் குழப்பம்

தேர்தல் கமிஷன் அளித்துள்ள பதில், அ.தி. மு.க., தொண்டர்களிடம், பல்வேறு குழப் பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப் பட்டார். அப்போது, அ.தி.மு.க., பிளவுபடா மல் இருந்தது.

தேர்தல்,கமிஷன்,அளித்த,பதிலால்,அ.தி.மு.க.,அணிகள்,கடும் குழப்பம்

ஜன., 25ல் நடந்த, தேசிய வாக்காளர் தின விழாவிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற முறையில், சசிகலாவிற்கு, தேர்தல் கமிஷன் அழைப்பு அனுப்பியது.பிப்ரவரி மாதம், பன்னீர் செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவுக்கு எதிராக, போர்க்கொடி

துாக்கினார். அதன் தொடர்ச்சியாக, பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தின கரனை, துணைப்பொதுச்செயலராக நியமித்தார். அவர், சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சசிகலா அணி சார்பில் களம் இறங்கினார்.

இரு அணிகளும், இரட்டை இலை சின்னத்தை கேட்டதால், அதை தேர்தல் கமிஷன் முடக்கியது. இது தொடர்பாக, தினகரனுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.இந்த சூழ்நிலையில், பன்னீர் அணியை சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் மற்றும் துணைபொதுச் செயலர் யார்' என கேட்டகேள்விக்கு, 'அக்கட்சியில் காணப்படும் பூசல் காரணமாக, முடிவு எடுக்கப்பட வில்லை' என, தேர்தல் கமிஷன் பதில் அனுப்பி உள்ளது.

இது, கட்சி தொண்டர்களிடம், குழப்பத்தை ஏற் படுத்தி உள்ளது. பொதுச்செயலராக, சசிகலா நிய மனத்தை ஏற்றுக் கொள்ளாத தேர்தல் கமிஷன், ஜனவரி மாதம் ஏன் அவர்பெயருக்கு, அழைப்பிதழ்

Advertisement

அனுப்பியது என, தினகரன் அணியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த குழப்பங்கள் தீர, பொதுச்செயலர் நிய மனம் செல்லுமா, செல்லாதா என்ற முடிவை, தேர்தல் கமிஷன் விரைவாக அறிவிக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க., அணிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
13-ஆக-201721:24:01 IST Report Abuse

sampath, kElection commission should not take more in this issue. For each and every issue time bound decision is important. Belated decision would help to other political parties. There is doubt about E.C. For delaying this issue.

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஆக-201719:49:34 IST Report Abuse

D.Ambujavalliஎந்த முடிவையும் வெட்டொன்று துண்டு இரண்டு என்று சொல்லிவிடாத தண்ட கமிஷன்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
13-ஆக-201718:49:29 IST Report Abuse

Balajiவேண்டுமென்றே தேர்தல் ஆணையம் காலம் கடத்துகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது........ அதிமுக தேர்தல் விதிகளின் படி நியமணமாகாத சதிகாரி எப்படி பொ. செ. ஆகா இருக்க முடியும் என்று எளிதாக அவர் நியமனம் செல்லாது என்று சொல்லிவிடலாம்...........

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)