இந்தியா - சீனா படைகள் குவிப்பால் பதற்றம்: எல்லையில் கண்காணிப்பு அதிகரிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
பதற்றம்!
இந்தியா - சீனா படைகள் குவிப்பால்...  
எல்லையில் கண்காணிப்பு அதிகரிப்பு

புதுடில்லி,:சிக்கம் மாநிலம், டோக்லாம் பகுதி யில், சீனாவை தொடர்ந்து, நம் வீரர்களும் கூடுதலாக குவிக்கப்பட்டு வருவதால், மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

  இந்தியா,சீனா, படைகள், குவிப்பால், பதற்றம்!  

சீன படைகளின் நடமாட்டத்தை, நம் வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எத்த கைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயா ராக உள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியா -- சீனா எல்லையில், டோக்லாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில், சீன ராணுவம் முயன்றது; அதை, நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து, அங்கு, இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற் றம் ஏற்பட்டது. அதே நிலை நீடித்து வந்தாலும், பின், ராணுவ நடவடிக்கை எதுவும் இல்லாத தால், பதற்றம் சற்று தணிந்தது.

இந்நிலையில், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில், கட்டுப்பாட்டு எல்லை

அருகே, சீனா, சில தினங்களாக, அதிக படை களை குவித்து வருகிறது. இதையடுத்து, நம் ராணுவமும், வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது; மேலும்,வீரர்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்டுள்ள துடன், சீன படைகளின் நடமாட்டம் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

நம் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:


சீனா சாலை அமைக்கும் முயற்சியை, நம் ராணுவம்தடுத்து நிறுத்தியது முதலே, டோக்லாம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு, படைகளை, சீன ராணுவம் குவித்து வருகிறது. இதனால், நம் வீரர் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள் ளது. இந்த நிகழ்வுகளால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், நிலைமை கட்டுக்குள் உள்ளது.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்த சூழலையும் எதிர் கொள்ளும் வகையில், நம் ராணுவம் வலிமையுடன் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் முதிர்ச்சி: அமெரிக்கா பாராட்டு


டோக்லாம் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது குறித்து, அமெரிக்க பாதுகாப்பு

Advertisement

துறை நிபுணர்,ஜேம்ஸ் ஹாலோம்ஸ் கூறிய தாவது: பூடான் நாட்டின் டோக்லாம் பகுதியில், சீன ராணுவம், 50 நாட்களுக்குமேல், ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது; இதை, இந்தியா சரியான முறையில் தடுத்து வருகிறது.

அப்பகுதியில் சாலை அமைக்கும் சீனாவின் முயற்சி கண்டிக்கத்தக்கது. சீனாவின் முயற் சியை, தக்க முறையில், இந்தியா தடுத்து வரு கிறது.இந்திய ராணுவம், அப்பகுதியில் பின் வாங்கா மல், அதேசமயம், முன்னேறி சென்று தாக்கு தல் நடத்தாமல்,முதிர்ச்சியுடன் நடந்து கொள் கிறது; வளர்ச்சி யடைந்த நாடான இந்தியா, பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது.

சீனாவின் அடாவடியால், அப்பகுதியில் தேவை யற்ற பதற்றம் நிலவி வருகிறது. அண்டை நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் செயலை, உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைதி முயற்சி!


டோக்லாம் பகுதியில், சீனாவை தொடர்ந்து, நம் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட பற்றத்தை தணிக்க,ராணுவ ரீதியிலான அமைதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருநாட்டு ராணுவம் சார்பில்,ஆக.,15ல், அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. அப்போது, ராணுவத்தை திரும்ப பெறும்படி, சீனாவிடம், இந்தியா வலியுறுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201722:50:56 IST Report Abuse

PrasannaKrishnanOurIndianarmyshouldbeprovidedwithlatestgunsandsafetykits.

Rate this:
13-ஆக-201722:50:56 IST Report Abuse

PrasannaKrishnanOurIndianarmyshouldbeprovidedwithlatestgunsandsafetykits.

Rate this:
13-ஆக-201722:50:56 IST Report Abuse

PrasannaKrishnanOurIndianarmyshouldbeprovidedwithlatestgunsandsafetykits.

Rate this:
Saravanan Thirunavukkarasu - chennai,இந்தியா
13-ஆக-201721:21:48 IST Report Abuse

Saravanan Thirunavukkarasu1962 ம் ஆண்டு நாம் அடிவாங்கியதால் சீனா நம்மிடம் எப்போதும் வாலாட்டி வருகிறது. காஸ்மீரத்தின் அக்ஷய் சீன் பகுதியை பெரும்பாலும் இழந்தோம். அருணாச்சல பிரதேசத்தை தன்னுடையதாக்க நினைக்கிறது. திபெத் மீது ஆக்கிரமிப்பு. இப்படி அடாவடிகளால் அத்து மீறுவது நமக்கு நீண்ட கால பிரச்சினையாக மாறி இருக்கிறது. ஒரு பழைய சொல் வடை உண்டு. நாம் சண்டையில் ஈடு படும்போது எதிராளி நம்மைவிட பலசாலியாக இருப்பின் அவன் நம்மை பாத்து முறை அடித்தால் நாம் ஒரு முறையாவது பலம் கொண்டு திருப்பித்தாக்க வேண்டும். அது எதிராளிக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும். அதுவே நம் வெற்றி. ஆகவே நாம் இம்முறை சீனாவுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். கார்கில் போரில் ஏற்பட்ட பொருள் இழப்பு உயிரிழப்பு போல பல மடங்கு இழப்பு ஏற்படத்தான் செய்யும். பொருளாதார சரிவு ஏற்படும். ஆனாலும் நாம் சீனாவை ஓர் கை பார்க்க வேண்டும். வந்தே மாதரம்.

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201721:15:55 IST Report Abuse

மலரின் மகள்அங்குள்ள நமது வீரர்களுக்கு மிகத் தரமான கவச ஆடைகளும், உயர்வான உணவுகளும் சரியான மருத்துவ வசதிகளும் அளிப்பதற்குண்டான சிறப்பு வசதிகள் செய்து தரப்படவேண்டும்.

Rate this:
Veer Shyam - vienna,ஆஸ்திரியா
13-ஆக-201716:33:21 IST Report Abuse

Veer Shyamதகர ராஜா.. 100 பேரை விலக்கிக் கொள்ள சீனா ஒப்புதல் தெரிவித்ததை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை,250 பேரை விலக்கிக் கொள்ள சொன்னது. அதனால் தான் படை பின்வாங்குதல் நடக்கவில்லை. இது தெரியாமல் உளற வேண்டாம். இன்னும் ஒரு மாட்டு மேதாவி ஹ்ரித்திக் ரோசன், நேபாள்,மாலத்தீவு என வெளியுறவு நிபுணர் போல உளறியுள்ளது, கும்மிடிப்பூண்டி க்கு பிறகு என்ன இருக்குன்னே உனக்கெல்லாம் தெரியாதுன்னு காட்டிட்ட.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201716:24:52 IST Report Abuse

Lion Drsekarவாய் திறக்க வேண்டிய அமைச்சர் மற்றும் பிரதமர் தவிர முப்படைத் தளபதி ஜனாதிபதி நிம்மதியாக பல லட்சம் சம்பளத்துடன் ஓய்வு எடுத்து இருக்கும்போது எதற்க்காக தினம் தினம் இப்படி ஒரு செய்தியை போட்டு மக்களின் நிம்மதியை கெடுக்கிறார்கள், ? வந்தே மாதரம்

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-ஆக-201701:30:09 IST Report Abuse

மலரின் மகள்எங்கே போயிருந்தீர்கள் சில நாட்களாக லைன் ட்ரெஸ்கர் அவர்களே? உங்கள் கருத்து சில நேரங்களில் சிறப்பாக இருக்கும். தமிழ் சுத்தமாக இருக்கும். படிப்பேன்....

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
13-ஆக-201711:20:03 IST Report Abuse

தங்கை ராஜாசீனா பின்வாங்கிருச்சுன்னு நேத்து செய்திகள் பரப்பப்பட்டுச்சு.. இன்னிக்கு அப்படியே தலைகீழாக. இதுகூட அரசியல் சாதுர்யம் தான் போலிருக்கு. இந்திய மக்களின் ஏமாளித்தனத்தை நல்லா வச்சு செய்றாங்கப்பா.

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
13-ஆக-201723:02:55 IST Report Abuse

தாமரை நம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் பலர் உள்ளனர். நமது தேசத்தின் பெருமையைக் குலைக்கும்விதமாக யார் செயல்பட்டாலும் முதலில் அவர்களை நன்கு கவனிக்க வேண்டும்.பின்னர்தான் மற்றவைகள் எல்லாம்....

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201708:56:09 IST Report Abuse

R.PERUMALRAJAநேபாள் நாட்டினரை தனக்கு பிடிக்காது என்று hirthick roshan என்னும் ஹிந்தி நடிகர் கூறியதாக செய்தி பரப்பி நேபாள் நாட்டில் உள்ள ஒரு சிலரை இந்தியாவிற்கு எதிராக செயல் பட வைத்தனர் , பின் இலங்கையில் நடந்த போரிற்கு இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு இலங்கை நாட்டினரை இந்தியாவிற்கு எதிராக செயல் பட வைத்தனர் , மாலத்தீவில் இந்திய ஆதரவு நிலையை மாற்றும் முயசிர்ச்சியில் ஈடுபட்டு அங்கும் ஒரு சிலரை இந்தியாவிற்கு எதிராக செயல் பட வைத்தனர் , தற்பொழுது பூடான் நாட்டினரை இந்தியாவிற்கு எதிராக செயல் பட செய்கின்றனர் . இந்தியாவை நம்பி புரயோஜனம் இல்லை என்று பூடானை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தி கொண்டு இருக்கின்றனர் . இதனால் இந்திய வட கிழக்கு பகுதியில் சீனா ராணுவத்திற்கு மிக பெரிய ராணுவ ஆக்கிரமிப்பு நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் பல "விடுதலை விரும்பி " குழுக்களை முளைக்க செய்யும் முக்கியமாக வட கிழக்கில் கள்ள நோட்டு மற்றும் ஆயுதங்கள் பரிமாற்றம் செய்யும் கும்பல்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைய இடம் கொடுத்துவிடும் ...........இன்னும் ஒரு சில நாட்களில் பாகிஸ்தான் சமாதானம் என்னும் முயற்சியில் பூட்டானுடன் உறவை புதுப்பித்து , பூடானை சீனாவிற்கு ஆதரவாக செயல் படும் படி செய்ய முயற்சி செய்யும் , பின் வருடங்களில் பூடானை முழுவதுமாக மாற்றி இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிடும் ....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:45:22 IST Report Abuse

Srinivasan Kannaiyaபேசினால் தீராதது எதுவும் இல்லை...

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்