சீனாவில்தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து| Dinamalar

சீனாவில்தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சீனா, தொடர் மழை, 360 விமானங்கள், ரத்து

பீஜிங்:சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்து வருவதால் இன்று(ஆக.,12) 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சீனாவில் தலைநகர் பீஜிங்கில் இன்று இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தலைநகரை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.


360 விமானங்கள் ரத்து

தொடர்ந்து மழை பெய்ததால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றங்கரை அருகில் உள்ள ஷாங்காய், நான்ஜிங், ஹாங்சோவ் ஆகிய விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால். சுற்றுலா பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
13-ஆக-201708:54:36 IST Report Abuse
srisubram ஓஹோ இந்தோனேஷியா விலும், ட்ரைனேஜ் ப்ரோப்லேம் ? இங்க கோயம்பேடு ல தான், சனம் திட கழிவுகளை கொட்டி நாறடிக்குதுனு நினைச்சேன் ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:17:31 IST Report Abuse
Srinivasan Kannaiya இயற்க்கை ஒன்று பெயது கெடுக்கும் இல்லைஎன்ன்றால் பெய்யாமல் கெடுக்கும்... சீனா முதல் ரகம்...தமிழகம் இரண்டாவது ரகம்...
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
13-ஆக-201707:50:36 IST Report Abuse
ganesha கடவுள் ஒருவர் இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை