பெங்களூரில் அமித் ஷா கட்சியை பலப்படுத்த திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
பெங்களூரில் அமித் ஷா
கட்சியை பலப்படுத்த திட்டம்

பெங்களூரு, :''கர்நாடகாவில், ஊழல்வாத, காங்., ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் காக் கும், பா.ஜ., ஆட்சி அமைய, கட்சித் தலைவர் கள், தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

  பெங்களூரில்,அமித் ஷா,கட்சியை பலப்படுத்த,திட்டம்

ஊழலற்ற ஆட்சி


கர்நாடகாவில், பா.ஜ.,வை வலுப்படுத்தும் வகையிலும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைக்கும் திட்டத்து டனும்,கட்சியின் தேசிய தலைவர்,அமித் ஷா, மூன்று நாள் பயணமாக, நேற்று பெங்களூரு

வந்தார்.பெங்களூரில், கட்சியின் முக்கிய நிர்வாகி களை சந்தித்து பேசும் அவர், மத தலைவர்கள், ஜாதி அமைப்பினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்திக்கஉள்ளார்.

உட்கட்சி பூசலுக்கு தீர்வு காணும் வகையில், கட்சி யின்அனைத்து தரப்பினரும், அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமித் ஷா, செய்தியா ளர்களிடம் பேசியதாவது: மாநிலத் தில், காங்., தலை மையிலான ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. மத்தியில், ஊழலற்ற ஆட்சி செய்யும், பா.ஜ., கர்நாட காவிலும் ஆட்சி அமைத்தால்,மக்கள் நலன் காக்கப் படும்.

கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல் வருமான, எடியூரப்பா தலைமையில், எதிர் வரும் சட்டசபை தேர்தலை, பா.ஜ., சந்திக்கும்.நலன் காக் கும் அரசுஅவருக்கு, கட்சியின் அனைத்து தரப்பின ரும் பக்கபலமாக இருந்து, பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும்.

தென் மாநிலங்களில், கட்சியை வலுப்படுத்த, கர்நா டகாவில்,பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமை வது அவசியம்.கர்நாடக சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஊழலற்ற,மக்கள் நலன் காக்கும்

Advertisement

அரசு அமைக்கும். கட்சியின் அனைத்து தரப் பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாநி லத்தில் ஆட்சி அமைப்பதற்கான பணிக ளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, மடாதிபதி கள், வாழும் கலை நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர்கள், முன்னாள், இன்னாள்,எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ., க்களை சந்தித்து பேசவுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஆக-201721:49:50 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்காங்கிரசுக்கு பதில் காவி காங்கிரசா?

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201717:42:57 IST Report Abuse

Venkiஒவ்வை ஆட்சியாளருக்கு சொன்னது (நாடு)வரப்புயர (வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல்/ அரசு/ ஆட்சி/ கட்சி உயரும் ) இது எல்லா காலத்திலும் பொருந்தும் ஆனால் இவர்கள் கட்சி பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் வெறும் அல்லக்கைகள் ஊழல் பேர்வழிகள் மக்கள் பணத்தில் தின்று பெருத்து கிடக்கின்றன இதுதான் இவரின் பலப்படுத்தும் பார்முலா

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஆக-201714:35:26 IST Report Abuse

N.Kaliraj எதுவும் பெருசா செய்யாதீங்க.....சி பி ஐ ..இருக்கு இல்லே...உங்க அரசியலுக்கு அது போதும்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-201719:17:55 IST Report Abuse

Kasimani Baskaranபிடிக்கலைனாலும் தப்பு, பிடிச்சாலும் தப்பு... எது எளியது? பிடிக்காமல் விடுவதுதான் எளிது... ஆனால் பிடிக்கிறார்களே?...

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)