மஹா., அமைச்சர்களிடம் 'லோக் ஆயுக்தா' விசாரணை| Dinamalar

மஹா., அமைச்சர்களிடம் 'லோக் ஆயுக்தா' விசாரணை

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மும்பை, :மஹாராஷ்டிராவில், ஊழல் குற்றச்சாட்டை அடுத்து, 'லோக் ஆயுக்தா' விசாரணைக்கு ஆளாகியுள்ள, சிவசேனாவைச் சேர்ந்த, மாநில அமைச்சர் சுபாஷ் தேசாய், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். எனினும், அவரின் ராஜினாமா கடிதத்தை, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஏற்க மறுத்துவிட்டார்.
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். மாநிலத்தின் பல துறைகளிலும், ஊழல் மலிந்துவிட்டதாக, காங்., மற்றும் தேசியவாத காங்., உறுப்பினர்கள், சட்டசபையில், அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த, மாநில வீட்டுவசதி துறை அமைச்சர் பிரகாஷ் மேதா மற்றும் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, சிவசேனாவைச் சேர்ந்த, மாநில தொழில் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் ஆகியோர், ஊழலில் ஈடுபட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, அமைச்சர்கள் மேதா மற்றும் தேசாயிடம், லோக் ஆயுக்தா விசாரணை நடத்த, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த உத்தரவால், கடும் அதிருப்தி அடைந்துள்ள, அமைச்சர் தேசாய், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை, நேரில் சந்தித்து ஆலோசித்தார்.
அதன்பின், முதல்வரை சந்தித்த அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்; அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.
எனினும், தேசாயின் ராஜினாமா கடிதத்தை ஏற்க, முதல்வர், பட்னவிஸ் மறுத்து விட்டார். ''விசாரணை முடிந்து, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, அவர்களை குற்றவாளியாக கருத முடியும்,'' என, பட்னவிஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை